இருதயம் காக்க பத்து கட்டளைகள் : இன்று உலக இருதய தினம்| Dinamalar

இருதயம் காக்க பத்து கட்டளைகள் : இன்று உலக இருதய தினம்

Updated : செப் 28, 2015 | Added : செப் 28, 2015 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 இருதயம் காக்க பத்து கட்டளைகள் : இன்று உலக இருதய தினம்

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறையில் இளம் வயதிலேயே மாரடைப்பு வருவது அதிகரித்து வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகளை ஓரங்கட்டிவிட்டு, மேற்கத்திய உணவுகளான துரித உணவுகளையும் பதப்
படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடத் தொடங்கிய பிறகே, இந்தியாவில் இருதய நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகள், நம் உடலுழைப்பைக் குறைத்து சோம்பேறிகளாக மாற்றுவதோடு மட்டுமன்றி உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு எனப் பல நோய்களையும் தானம் செய்கின்றன. இளையசமூகத்தினர் இப்போதே விழித்துக்கொள்ளாவிட்டால், இன்னும் கால்நுாற்றாண்டில் உழைக்க வேண்டிய வயதில் உள்ளோர் அனைவரும், தங்கள் நேரத்தை மருத்துவச்
சிகிச்சைக்கே அதிகம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.ரத்த அழுத்தம் காரணம் மாரடைப்பு ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் ஒரு முக்கியக் காரணம். ரத்த அழுத்தம் 120-80 என்பது தான் நார்மல். இது 140-90 என்ற அளவைத் தாண்டக் கூடாது. அதேநேரம் 90-60 என்ற அளவுக்குக் கீழேயும் இறங்கி விடக்கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைப்பது, ஊறுகாய், கருவாடு, சிப்ஸ், அப்பளம், வடாம் போன்ற உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது என்று உணவுப் பழக்கத்தைச் சரி செய்து கொண்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்
ரத்தத்தில் சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 80 - 100, சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 - 140 என்று இருக்க வேண்டும். இந்த அளவுகள் மிகுந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். மற்றவர்களைவிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. ஆகவே சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியும் தேவையான மாத்திரை, இன்சுலின் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொண்டும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்.
கொழுப்பு கூடக்கூடாது மாரடைப்புக்கு வாய்ப்புள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறை ரத்தக் கொழுப்பு அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மொத்தக் கொழுப்பு 200 க்கு குறைவாகவும் டிரைகிளிசரைட் கொழுப்பு 150க்கு குறைவாகவும் எல்.டி.எல். எனும் கெட்ட கொழுப்பு 100 க்கு குறைவாகவும் எச்.டி.எல். எனும் நல்ல கொழுப்பு 40 க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கைக்கொண்டால் ரத்தக் கொழுப்பு சரியாகவே இருக்கும். உணவுப் பழக்கம் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மற்றும் சிறுதானியங்கள், பயறு வகைகள் ஓட்ஸ், துவரை, பட்டாணி, அவித்த கொண்டைக்கடலை, வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப் பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு வாழைப்பூ,
பூசணிக்காய், முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி ஆகியவை இருதயம் காக்கின்ற உணவுகள்.
அசைவம் சாப்பிடுபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியையும், மீனையும் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடலாம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப்
பதிலாக கிரீன் டீ குடிக்கலாம். இவற்றுக்கு 'நோ' சொல்லுங்கள் பாமாயில், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, விலங்கின் இறைச்சி, தயிர், வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தேங்காய், முந்திரிப்
பருப்பு, பாதாம்பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த பொரித்த உணவுகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள், நொறுக்குத் தீனிகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் விரைவு உணவுகள் ஆகியவற்றை ஒதுக்கிவிடுங்கள். மதுவுக்கும் 'நோ' சொல்லுங்கள்.
கொழுப்பு அமிலங்கள் சரியான அளவில் கிடைப்பதற்கு பலவித எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அளவோடு பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக உணவைச் சமைப்பதற்கு சூரியகாந்தி எண்ணெய், வறுப்பதற்குக் கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய் என்று வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் கொழுப்பு அமிலங்கள் மிகாது இருதயத்துக்கு நல்லது.
உடல் எடை முக்கியம் உடல் எடை சரியாக இருக்கிறது என்று சர்டிபிகேட் தருவது 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' இது 19 - 24 இருந்தால் உடல் எடை சரி. 25 - 29 இருந்தால் அதிக உடல் எடை; 30 -- 35 உடற்பருமனைக் குறிக்கும். 36 - 39 மோசமான உடற்பருமன். பெரும்பாலோருக்குச் சரியான உணவுமுறை மற்றும் முறையான உடற்
பயிற்சிகள் மூலமே உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டியது முக்கியம். நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கைப்பந்து, கூடைப் பந்து, இறகுப் பந்து போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இருதயத்துக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
புகைபிடிக்காதீர்கள் புகை பிடிப்பதை உடனே நிறுத்துங்கள். புகையிலையில் உள்ள நிகோடின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தைப் பாதிக்கும். புகைபிடிப்பவர் வெளியிடும் புகையை அருகில் உள்ளவர்கள் சுவாசித்தால் அவர்களுக்கும் இந்தக் கெடுதல் ஏற்படும்.
உறக்கம் குறைந்தால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கும். அது இருதயத்தைப் பாதிக்கும். தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது நிம்மதியாக உறங்குங்கள். மன அழுத்தம் குறைய, மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட தியானம் செய்வதும், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகப் பயிற்சிகளைப் பின்பற்றுவதும் மிகவும் நல்லது.
- டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர்ராஜபாளையம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா
30-செப்-201511:22:38 IST Report Abuse
Dr. D.Muneeswaran நல்ல கருத்து
Rate this:
Share this comment
Cancel
Mahendra Babu R - Chennai,இந்தியா
30-செப்-201500:38:46 IST Report Abuse
Mahendra Babu R Jogging - மெல்லோட்டம். அருமை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-செப்-201518:06:22 IST Report Abuse
Srinivasan Kannaiya கருவறை தொடங்கி கல்லறை வரை எல்லாவற்றிளும் லஞ்சம், சமூக சீர்கேடு. என்றால் இருதய நோய் வருவதை எப்பிடியும் தடுக்கவே முடியாது..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-செப்-201517:35:18 IST Report Abuse
Endrum Indian இதில் விட்டுப்போனவை. முந்திரிப்பருப்பு கூடாது. ஆனால் பாதாம் பருப்பு நல்லது, அதை உபயோகிக்கவும். அக்ரூட் ( வால்நட் ) என்னும் ( மூளை வடிவத்தில் இருக்கும் ) பருப்பு மிகவும் சிறந்தது. Flax seed எனப்படும் பருப்பை பொடி செய்து அப்படியே எல்லா காய்கறி, குழம்பு, கூட்டு என்று (minimum 1 tsp தூவுங்கள்) ( 100 கிராம்-ரூ.25 ) இதில் 3 ஒமேகா உள்ளது. (அசைவப்பிரியர்கள் டுனா மீனை சாப்பிடவும் அதில் 6 ஒமேகாவே உள்ளது). ஒமேகா உள்ள உணவு வகைகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கும் உடலிலிருந்து. மக்ஹானா-லோடஸ் சீட்ஸ் நல்லது. சியா சீட்ஸ், ஹேசல்னட், பெகானட்ஸ், என்று பல உள்ளன, இவை எல்லாம் 3 ஒமேகா/6 ஒமேகா அடங்கிய இருதயத்திற்கு மிகுந்த நன்மையைத்தரும் பொருட்கள்.
Rate this:
Share this comment
Cancel
SENTHILKUMAR - VELLORE,இந்தியா
29-செப்-201514:02:49 IST Report Abuse
SENTHILKUMAR மிக பயனுள்ள தகவலை தந்த மருத்துவர் கணேசன் அவர்களுக்கும் , தினமலருக்கும் நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Rajaguru Rathinam - Vadugapatti. Theni,இந்தியா
29-செப்-201513:35:58 IST Report Abuse
Rajaguru Rathinam இன்றைய எனது பார்வை பகுதி படித்தேன். மிகவும் சிறப்பான பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் மருத்துவர் கு. கணேசன் அவர்கள். நாற்பது வயதினை கடந்த அனைவரும் தெரிந்து கொண்டு கடைப்பிடிக்கக்கூடிய உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்ச்சி முறைகள் ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். அவர் கூறிய வழிமுறைகள் அவற்றைத் தவறாது கடைப்பிடிக்கக் கூடியவர்களுக்கு அருமையான பலன்களையும் செலவில்லாமல் உடல் நலத்தினைக் குறிப்பாக, இதயத்தினை பாதுகாக்க உதவும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Selva - Madurai,இந்தியா
29-செப்-201513:30:42 IST Report Abuse
Selva அய்யா மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி. மருந்து மாத்திரை வேண்டாம் என சொன்னதற்கு. இப்படியும் நிறைய மருத்துவர் உள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
29-செப்-201512:57:23 IST Report Abuse
Rangiem N Annamalai நன்றி .நல்ல பதிவு .
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
29-செப்-201511:03:44 IST Report Abuse
Ajaykumar நல்ல தகவல்
Rate this:
Share this comment
Cancel
Gopal - Sur,ஓமன்
29-செப்-201509:24:23 IST Report Abuse
Gopal நல்ல பயனுள்ள கட்டுரை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை