மாஞ்சா நூல் விற்பவர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஞ்சா நூல் விற்பவர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீஸ்

Added : செப் 29, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மாஞ்சா நூல் விற்பவர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீஸ்


சென்னையில், மாஞ்சா நுால் விற்கும் கடைக்காரர்களிடம் போலீசார், மாமூல் வசூலிப்பதால், உயிர் இழப்புகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில், ஆண்டுதோறும், ஆக., முதல் டிசம்பர் வரை காற்றாடி சீசன். வீட்டு மொட்டை மாடி, விளையாட்டு திடல்களில், சிறுவர்கள், பெரியவர்கள் காற்றாடி விட்டு மகிழ்வர்.
சில சமயம் விளையாட்டு வினையாக மாறி, அடுத்தவர்களின் காற்றாடிகளை வீழ்த்த, மாஞ்சா நுால் கொண்டு, 'டீல்' போடுவர். அப்போது, உயரத்தில் பறந்த காற்றாடியில் இருந்து அறுந்து விழும் மாஞ்சா நுால், மரக்கிளைகள், மின் கம்பிகள், கட்டடங்களில் சிக்குவது உண்டு. சிலநேரங்களில், நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கழுத்தை அறுத்து
உயிரையும் பறித்து விடும்.
நேற்று முன்தினம், பெரம்பூர் பாலம் அருகே, பெற்றோருடன், இரு சக்கர வாகனத்தில் சென்ற, 5 வயது சிறுவனின் உயிரை மாஞ்சா நுால் பறித்து விட்டது. இச்சம்பவம் அந்தப் பகுதியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இதுபோன்ற உயிர் பலிகளுக்கு போலீசாரும், ஒரு காரணமாக இருந்து வருவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி வடசென்னை வாசிகள் கூறியதாவது:
சென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை, சவுகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, சூளைமேடு, சூளை, ஆர்.கே., நகர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில், காற்றாடி விடுவோர் அதிகம்.
விடுமுறை நாட்களில், பள்ளி மாணவர்களும் அதிகளவில் காற்றாடி விடுவர். சிலர் பந்தயம் கட்டி காற்றாடி பறக்க விடுவர். அப்படிப்பட்டவர்கள், மற்றவர்களின் காற்றாடிகளை வீழ்த்த, மாஞ்சா நுாலில் காற்றாடி பறக்கவிட்டு சபதத்தை முடிப்பர். சென்னையில், இது ஒரு சூதாட்ட
மாகவே நடந்து வருகிறது.
இதை பயன்படுத்தி, வட சென்னையில் உள்ள சில கடைகளில், மாஞ்சா நுால் விற்பனை ஜோராக நடக்கிறது. போலீசாருக்கு, எந்த கடையில் மாஞ்சா நுால் விற்கப்படுகிறது; யார் தயாரித்து தருகின்றனர்; அதன் பின்னணியில் நடக்கும் வியாபார தந்திரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரியும்.
மாஞ்சா நுால் விற்கும் கடைக்காரர்களிடம் அவர்கள், மாமூல் வாங்குவதால், கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இதுவே, உயிர் இழப்புகள் ஏற்பட காரணம்.
சட்டம் - ஒழுங்கு, ரோந்து மற்றும் நுண்ணறிவு போலீசார் இணைந்து செயல்பட்டால், ஒரே நாளில் மாஞ்சா நுால் விற்பனையை ஒழித்து விட முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கொலை வழக்கு
மாஞ்சா நுாலுக்கு சிறுவன் அஜய் பலியானது குறித்து, போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனியைச் சேர்ந்த ராஜுவின், 5 வயது
தொடர்ச்சி 12ம் பக்கம்- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
29-செப்-201506:01:34 IST Report Abuse
Arv Sekar பிரிக்க முடியாதது போலிசும் மாமுலும். 100 போலிசை எடுத்திங்கன்னா அதுல 10 போலீசுதான் நல்ல போலிசு. பாக்கி பூராவும் மக்களின் நலனுக்கு விரோதமதான் நடக்குது. யாரு கேக்க முடியும். பெண் போலீஸு DSP கே பாதுகாப்பு இல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X