கிருஷ்ணகிரியில் இறந்த முதியவரின் தோல் தானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் இறந்த முதியவரின் தோல் தானம்

Added : செப் 30, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முதன் முறையாக இறந்தவரின் தோல் தானம் பெறப்பட்டு, கோவை கங்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலையில் வசிக்கும் ஜெயராஜ் என்பவரது தந்தை கோவிந்தராஜ், 82, இயற்கை மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தார் இறந்த கோவிந்தராஜின் கண்கள் மற்றும் தோலை தானமாக தர முன்வந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி உடல் உறுப்புகள் தானம் மற்றும் உடல் தானம் மைய பொறுப்பாளர்கள் டாக்டர் ஜோ, தலைவர் பிரபாகர், ரமேஷ் ஆகியோர், இறந்த கோவிந்தராஜின் கண்கள் மற்றும் தோலை தானமாக பெற்று, கண்களை கோவை சங்கரா கண் வங்கிக்கும், தோலை கோவை கங்கா மருத்துவமனை தோல் வங்கிக்கும் அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல் மற்றும் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புவோர், 94435-12111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, உடல் தான மைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X