வாலியின் கை பிடித்தவன் நான்!| Dinamalar

வாலியின் கை பிடித்தவன் நான்!

Added : அக் 01, 2015
Advertisement
வாலியின் கை பிடித்தவன் நான்!

'கவுரவம் பார்க்கறவனுக்கு சினிமாத்துறை சரியா வராது. ரயிலுக்கு காசு தர்றேன், ஊருக்கு போன்னு' எனக்கு அறிவுரை சொன்னவர் கவிஞர் கண்ணதாசன் என்கிறார், மதுரையைச் சேர்ந்த திருச்சிசந்தர்.வாலியின் நண்பனான இவர், திருச்சியில் பள்ளிப்பருவம் வரை தொடர்ந்து ஐந்தாண்டுகள் கவிஞர் வாலியின் கைப்பிடித்து சுற்றித் திரிந்தவர். அவரோடு பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.பள்ளிப்படிப்பு முடித்ததும் நானும், வாலியும் அகில இந்திய வானொலியில் நாடகங்கள் நிறையதயாரித்தோம். அவர் கவிதைகள் எழுதுவார். எனக்கு கவிதை எழுதத் தெரியாது. குருதட்சணையுடன் (வெறும் வெற்றிலை, பாக்குதான்) மூன்று நாட்கள் தேமாங்காய், புளிமாங்காய் கற்றுக் கொடுத்தார். புரியவில்லை என்றதும், 'நாளைக்கு தலைக்கு குளிச்சுடு... உனக்கு கவிதை வராது,' என்றார். அதன்பின் புதுக்கவிதைக்கு மாறினேன். இலங்கை வானொலியில் தொடர்ந்து ஆறுமாதங்கள் வாரந்தோறும் எனது நாடகம் ஒலிபரப்பானது. தமிழ், ஆங்கில நாடகங்கள் 27 தயாரித்து மேடையில் நடித்துள்ளேன்.திருச்சி திறந்தவெளிகலையரங்கில் வைரம் நாடகசபாவின் குல்ஷம் நாடகத்தில் நான், நடிகர்முத்துராமன், நடிகை மனோரமா இணைந்து நடித்தோம். என் நாடகத்திற்கு கைதட்டல் கிடைக்கும் போது வாலி அமைதியாக இருப்பார். அவரது கவிதையை பி.பி.சீனிவாஸ், லீலா பாடலாக பாடியபோது நான் அமைதியாக இருப்பேன். அதன்பின் சினிமாவுக்கு சென்றேன்.மலைக்கள்ளன், சந்திரலேகா, அலிபாபாவும், 40 திருடர்களும், ரிக்ஷாக்காரன்படங்களில் மிகச்சிறு வேடங்களில் நடித்தேன். அப்போதெல்லாம் நடித்தால் டீயும், வடையும் கிடைக்கும்.என் தோரணையை பார்த்த கவிஞர் கண்ணதாசன், 'கவுரவம் பார்க்கறவனுக்கு சினிமா சரிப்படாது. ரயிலுக்கு காசிருக்கா. இல்லைனா வாங்கிட்டுப் போ' என்றார். நானும் சினிமாவை விட்டு விட்டு, வங்கிப் பணியில் சேர்ந்து விட்டேன். கனரா வங்கியில் ஓய்வு பெற்ற பின், முத்தமிழ் அறக்கட்டளை மூலம் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.வாலியின் 75வது வயதில் 'வாலிபவாலி' புத்தகம் வெளியிட திட்டமிட்டனர். 'என் இளமைப்பருவத்தை சொல்வதற்கு தகுதியானவன் மதுரையில் இருக்கிறான். அவனிடம் கேளுங்கள்' என்று எனக்கு அணிந்துரை எழுத கவுரவம் தந்தவர் வாலி. அதன்பின்பே புத்தகம் வெளியானது. திசைகள் மாறியபோதும் எதையும் எதிர்பார்த்து பழகாததால் அன்பு மட்டும் அப்படியே நிலைத்து விட்டது, என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார் திருச்சி சந்தர்.இவரிடம் பேச 94437 43524.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை