ஆந்திராவில் இ - கோவில்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் இ - கோவில்கள்

Added : அக் 03, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பதி: ஆந்திராவில் உள்ள, 59 கோவில்கள், இணையம் மூலம் இணைக்கப்பட உள்ளன.ஆந்திர அறநிலையத் துறை, 'இ - பிரகதி' திட்டத்தின் கீழ், ஆந்திராவில் உள்ள முக்கிய கோவில்களை, இணையம் மூலம் இணைக்க உள்ளது. இத்திட்டப்படி, ஸ்ரீசைலம், விஜயவாடா கனகதுர்கம்மா, அன்னவரம், சிம்மாசலம் கோவில்கள் உள்ளிட்ட, 59 கோவில்கள் இணைக்கபட உள்ளன.
இதன்மூலம், பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய கோவில்களில், தங்கும் வசதி, தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம், தரிசன முன்பதிவு, ஆர்ஜித சேவைகள் குறித்து, முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். மேலும், இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள், உண்டியல் வருமானம், பிரசாத விற்பனை, உற்சவங்கள், சிறப்பு பூஜைகள், கோசாலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், அதிகாரிகளும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை