தாணுலிங்க நாடார் - கே.டி.கே., நூற்றாண்டு விழா: அரசுக்கு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாணுலிங்க நாடார் - கே.டி.கே., நூற்றாண்டு விழா: அரசுக்கு கோரிக்கை

Added : அக் 10, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட, தென் மாவட்ட முக்கியஸ்தர்களில் தாணுலிங்க நாடாரும்; கே.டி.கோசல்ராமும் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரையும், துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க, ஆங்கிலேய அரசு உத்தரவிட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்துக்குப் பின்னும், தமிழக நலனுக்காக இருவரும் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கது. எனவே, அவர்களின் நுாற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கைகள் குவிகின்றன. இதுகுறித்து, நெல்லை நாடார் சங்க மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:இரு தலைவர்களும் நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் ஜாதி எல்லை கடந்து, நாட்டுக்காக பாடுபட்டவர்கள். சுதந்திரப் போராட்டத்துக்கு பாடுபட்டது மட்டுமின்றி, கேரளாவில் இருந்த தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை, தமிழகத்தில் இணைக்க வேண்டும் என, தொடர்ச்சியாக போராடியவர் தாணுலிங்க நாடார்.
மண்டைக்காடு கலவரத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, இரண்டு மணி நேரத்தில், இரண்டு லட்சம் பேரை திரட்டி, எம்.ஜி.ஆருக்கு எதிராக போராடியவர். இப்படி தைரியமிக்க தலைவராக இருந்து, நிறைய பொதுப் பிரச்னை
களுக்காக பாடுபட்டவர்.அதேபோலவே, கே.டி.கோசல்ராம் சாதனைகளும் அளப்பரியது. மணிமுத்தாறில் அணை கட்டினால், சாத்தான் குளம், ராதாபுரம் பகுதிகள், நீர்வளம் பெறும். பல லட்சம் ஏக்கரில், விவசாய சாகுபடி நடக்கும் என சொல்லி, அரசுக்கு கோரிக்கை வைத்தார். அணை கட்ட, நிதி இல்லை என, அரசு கைவிரித்தது.
உடனே, தனி மனிதனாக முயற்சித்து, 80 லட்சம் ரூபாய் வரை சேகரித்து கொடுத்து, அணை கட்ட வைத்தார். சொந்த பணத்தையும் கொடுத்து, அணை கட்ட வித்திட்டார்.
அப்படிப்பட்ட தலைவர்களுக்கு, வரும் டிசம்பர் மற்றும் பிப்ரவரியில் நுாற்றாண்டு நிறைவுறுகிறது. அதனால், அதற்குள் நுாற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களைப் போலவே, நிறைய பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு தலைவர்களின் தியாகங்களை போற்றும் வகையில், அவர்களுக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பிக்க, மத்திய அரசையும் வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X