அ.தி.மு.க.,வில் மா.செ., பதவி வன்னியர்களுக்கு முக்கியத்துவம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் மா.செ., பதவி வன்னியர்களுக்கு முக்கியத்துவம்

Added : அக் 14, 2015 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அ.தி.மு.க.,வில் மா.செ., பதவி வன்னியர்களுக்கு முக்கியத்துவம்


சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, அதிகம் வழங்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து சமுதாயத்தினருக்கும், முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாவட்ட செயலர்கள் பட்டியல் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கு முன், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த, 13 பேர் மாவட்ட செயலர்களாக இருந்தனர்; அவர்களில், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர் கலைராஜன் நீக்கப்பட்டுள்ளார்.
அதற்கு அடுத்ததாக, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த, 10 பேர் மாவட்ட செயலர்களாக இருந்தனர்; அதில், இப்போதும் மாற்றம் இல்லை. அதேநேரத்தில், உட்கட்சி தேர்தலுக்கு முன், வன்னியர் சமூகத்தை சேர்ந்த, ஏழு பேர், மாவட்ட செயலர்களாக இருந்தனர். தற்போது, அந்த எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, தென் சென்னை தெற்கு, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் மத்திய மாவட்டங்களில், வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, நாடார், உடையார், நாயுடு, செட்டியார், விஸ்வகர்மா போன்ற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முத்தரையர் சமூகத்தினர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் அதிகம்.ஆனாலும், அந்த சமூகத்தை சேர்ந்த யாருக்கும், மாவட்ட செயலர் பதவி வழங்கப்படவில்லை. இது, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இருந்தாலும், இதை ஈடுகட்ட, தலைமை நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் நியமனத்தில், முக்கியத்துவம் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
14-அக்-201514:43:04 IST Report Abuse
N.Purushothaman வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லைன்னு முன்னாடி எல்லாம் சொல்லிக்கிட்டு திரிஞ்சாங்க....இப்போ வன்னியர் ஓட்டு வன்னியருக்கே இல்லை அப்படிங்கிற நெலமை ஆயிட்டு...
Rate this:
Share this comment
Cancel
Yaseem Mohamed - Kumbakonam,இந்தியா
14-அக்-201514:30:56 IST Report Abuse
Yaseem Mohamed வன்னியர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி மட்டும் கொடுத்தால் பத்தாது. அந்த சமூகத்தை சார்ந்தவர்களை அமைச்சர் பதவியும் கொடுங்கள். இன்னும் எவ்வளவு காலம் இவ்வளவு பெரிய சமூகத்தை ஏமாற்றி ஓட்டுக்கள் மட்டும் வாங்கி கொண்டு இருப்பீர்கள். அவர்களிடம் இருந்து நீங்கள் பெற்றது போதும். அச்சமுதாய மக்களுக்கு நன்மைகளை நிறைய செய்யுங்கள். என் நண்பர்கள் 4, 5 பேர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கடைசிவரை திறமை இருந்தும் கூட கிடைக்காமல் போன சம்பவம் நடந்த போது மனதார வேதனை அடைந்தேன். காலம் மாறட்டும் காட்சிகளும் மாறட்டும். அனைத்து சமூக மக்களும் நலமோடு நட்புறவோடு வாழட்டும்.
Rate this:
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-201514:17:39 IST Report Abuse
gummanguthu gopi நாங்கெல்லாம் ஜாதி பார்க்காத கட்சி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X