SC ruling quashing NJAC a setback for parliamentary sovereignty, Ravi Shankar Prasad says | பார்லிமென்ட் இறையாண்மைக்கு பாதிப்பு: மத்திய அரசு | Dinamalar

பார்லிமென்ட் இறையாண்மைக்கு பாதிப்பு: மத்திய அரசு

Added : அக் 16, 2015 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பார்லிமென்ட் இறையாண்மைக்கு பாதிப்பு:  மத்திய அரசு

புதுடில்லி: நீதிபதிகள் நியமனம் செய்யும் முறையில் மத்திய அரசு நிறைவேற்றிய தேசிய கமிஷன் செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பார்லிமென்ட் இறையாண்மைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை மாற்றி தேசிய நீதி கமிஷன் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை அரசியல் அமைப்புகளில் இருந்து அதாவது பார்லி.,யில் இருந்து சுதந்திரமானது. இது காக்கப்பட வேண்டும், எனவே இக்கமிஷன் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த அமைப்பு கலைக்க உத்தரவிடப்படுகிறது. கொலிஜியம் முறையே நீதிபதிகள் நியமனத்தில் நீடிக்கும் என தீர்ப்பளித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இந்த தீர்ப்பு பார்லிமென்டின் இறையாண்மைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் என்பதன் அடிப்படையில் நீண்ட 20 ஆண்டுகால ஆலோசனைக்கு பின்னரே தேசிய நீதிக்கமிஷன் உருவாக்கப்பட்டது. தீர்ப்பை நன்கு ஆராய்ந்த பின்னர் மேல்முறையீடு செய்வது பற்றி முடிவு செய்யப்படும். தேசிய நீதிக் கமிஷன் நீதித்துறையை பலப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். முன்னாள் நீதிபதிகள், நிர்வாக சீர்திருத்த கமிஷன் என பல கமிஷன் பரிந்துரைப்படியே தேசிய நீதிக் கமிஷன் உருவாக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி வர்மா, கொலிஜியம் முறை குறித்து வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார். இந்த மசோதா நல்ல எண்ணத்தின் அடிப்படையிலேயே கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில் அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார் . இந்தியாவில் உள்ள 20 சட்டசபைகள் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என கூறினார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-அக்-201513:03:26 IST Report Abuse
Nallavan Nallavan உங்க கொள்ளை சாரி .... கொள்கை முடிவுக்கு ஆபத்தோ ????
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
17-அக்-201512:38:28 IST Report Abuse
Divaharan நீதிபதி ஆவதற்கு பல தகுதிகள் தேவை. எம் பி, அமைச்சர் ஆக எந்த தகுதியும் தேவை இல்லை. தகுதி உள்ளவர்கள் தகுதி உள்ளவர்களை நியமிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Hindustan - Chennai,இந்தியா
17-அக்-201509:56:51 IST Report Abuse
Hindustan மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமானது, சில முட்டாள் மக்கள் நீதி மன்றங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர், அவர்கள் இதுவரை நீதி மன்ற படி ஏறாத மக்கள்... எந்த ஒரு சாதாரண மக்களின் வழக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக முடிந்ததாக இந்தியாவில் சரித்திரமே இல்லை... இப்படி பட்ட நீதி மன்றங்கள் மீது இருந்த மரியாதை சுத்தமாக பொய்த்து விட்டது ... ஏதேனும் மாற்றங்கள் ஏற்ப்பட்டால் ஒழிய இந்த பாதகத்தை சரி செய்ய இயலாது .... வெள்ளைக்காரனின் நீதி முறை முற்றிலும் மாற்றி அமைத்து உடனடியாக தீர்ப்பு அளிக்க நீதிமன்றங்களுக்கு யார் உத்தரவு இடுவது ? கோடான கோடி வழக்குகளை யார் தீர்ப்பது? சோம்பேறிகளாக வழக்கை விசாரித்து அதிகாரத்துக்கு நீதிபதிகள் அலைவது ஏன் ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒரு மனதாக கொண்டு வரும் சட்டங்களை மறுத்தால் நீதித்துறை என்ன வெளிநாட்டு கம்பெனி யா ? உங்களுக்கு எதற்க்காக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X