குலசேகரபட்டிணத்தில் மகிஷாசூரன் வதம் :லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குலசேகரபட்டிணத்தில் மகிஷாசூரன் வதம் :லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Added : அக் 23, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், நேற்று இரவு 12 மணிக்கு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தசரா விழா:குலசேகரபட்டிணத்தில் உள்ள ஞானர்த்தீஸ்வரர், உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும். இத்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவிற்கு, அடுத்தபடியாக இந்த கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். அக்.,13 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது . திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாறு வேடம் பூண்டு நேற்று முன் தினம் முதல் கோயிலில் குவிந்தனர்.
நேர்த்திக்கடன்: அம்மை நோய் கண்டவர்கள் முத்தாரம்மனை வழிபட்டால், முத்து, முத்தாக உருவாகும் அம்மை நோய் குறைந்து விரைவில் குணம் பெறுவார்கள். குணமடைந்தவர்கள் மாறு வேடம் பூண்டு கோயிலுக்கு வருகை தருவதாக வேண்டிக் கொள்வார்கள், பக்தர்கள் தங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி தந்தாலும், கஷ்டங்களை நீக்கி தந்தாலும், மாறு வேடம் பூண்டு கோயிலுக்கு வருகை தருவதாக வேண்டிக் கொள்வார்கள். இதன் படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்றத்தில் இருந்து வீட்டிற்கு வெளியே ஓலைக்கூரைகளில் செட் அமைத்து அதில் விரதம் இருப்பார்கள்.தசரா செட்டுகள்: இதில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் தசரா செட்டுகள் அமைத்துக்கொள்வார்கள். இதில் 10 முதல் அதிகபட்சமாக 40 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் காளி, மாரி, ஆஞ்சநேயர், பெண் வேடம், போலீசார், என பல்வேறு வேடங்கள் அணித்து ஊர், ஊராக சென்று காணிக்கை வசூலிப்பார்கள். இதில் ஒவ்வொரு தசரா செட்டுகளுக்கிடையே, மாறு வேடமணிந்து செல்வதில் போட்டியே ஏற்படும். இந்த தசரா செட்டுகள் அனைத்தும், வேன், ஆட்டோ, கார், போன்ற வாகனங்களில் நேற்று மாலை முதல் குவியத்தொடங்கினர். இவர்கள் அனைவரும் முத்தாரம்மனை வணங்கி காணிக்கையை செலுத்திவிட்டு, கடற்கரையில் திரண்டனர். மகிஷாசூர வதம்: லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் அலங்காரத்துடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் இரவு 12 மணிக்கு எழுந்தருளினார். அங்கு முத்தாரம்மன்,மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.பின் அதிகாலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் விதியுலா நடக்ககிறது. நாள அக்.,24 மாலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
போலீஸ் பாதுகாப்பு: திருவிழா காரணமாக பஸ்களின் வழித்தடங்கள் திருச்செந்தூரில் இருந்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஊருக்கு வெளியே இரண்டு கி.மீ., முன்னதாக வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தூத்துக்குடி எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X