Online survey rates Chennai airport as the worst in Asia | ஆசியாவின் மோசமான விமான நிலையம் சென்னை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆசியாவின் மோசமான விமான நிலையம் சென்னை

Added : அக் 23, 2015 | கருத்துகள் (65)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
chennai airport, online survey, worst airport, சென்னை விமான நிலையம், ஆன்லைன் சர்வே, மோசமான விமான நிலையம்

புதுடில்லி: ஆசியாவின் மிக மோசமான விமான நிலையம் குறித்து ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சென்னை விமானநிலையம் 7வது இடம்படித்துள்ளது.
தி கைடு டு ஸ்லீப்பிங் இன் ஏர்போர்ட்ஸ், ஆசியாவின் மோசமான விமான நிலையங்கள் குறித்து செப்டம்பர் 2014 முதல் செப்டம்பர் 2015 வரை ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தியது. இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த பயணிகள் பலர் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் முறை மோசமாக உள்ளதாகவும், கழிப்பறைகள் சுத்தமின்றி இருப்பதாகவும் புகார் கூறி உள்ளனர் . பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்வதற்கு ஊழியர்கள் யாரும் எவ்வித உதவியும் செய்வதில்லை என கூறி உள்ளனர்.
பயணிகளுக்கு உதவாத ஊழியர்கள், சுத்தமில்லாத கழிப்பறைகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும், சென்னை விமான நிலையத்தில் மோசமான பராமரிப்பு காரணமாக சில ஆண்டுகளாக ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய பராமரிப்பிற்காக ஏராளமான பணம் செலவிடப்பட்டும் இன்னும் சென்னை விமான நிலையம் உலக தரத்திற்கு உயரவே இல்லை.
சென்னை விமான நிலையத்தில் உள்ள குறைபாடுகள், மோசமான பராமரிப்பு ஆகியவை குறித்து சமூக வலைதளங்களிலும் விடாமல் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. புகார்கள் பல கூறப்பட்டாலும், சமூக வலைதளங்களில் கிண்டல்கள் பரவினாலும் அவற்றால் எந்த பயனும் இல்லை. சென்னை விமான நிலையத்தின் நிலை மோசமாக இருப்பதை இந்த ஓட்டெடுப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Mohan - salalah,ஓமன்
24-அக்-201512:45:11 IST Report Abuse
T.Mohan குறிப்பா பன்னாட்டு முனையம் ரொம்ப மோசம் - லக்கேஜ் வருவதில் அநியாய கால தாமதம், இறங்கி குடியேற்றம் மேசைக்கு வர நீண்ட தூரம் நடக்க வேண்டியிருத்தல் .வயதானோர்,ஊனமுற்றோர் இவர்களுக்கு உதவிட ஆள் இல்லை- ஒருமுறை உடைமைகளை வெளியேற்ற தள்ளு வண்டி இல்லாமல் 30 நிமிடங்கள் தாமதம் ஆயிற்று?
Rate this:
Share this comment
Cancel
ديفيد رافائيل - مدری,இந்தியா
24-அக்-201510:33:51 IST Report Abuse
ديفيد رافائيل இன்னும் முதலிடத்திற்கு வரலியா?
Rate this:
Share this comment
Cancel
Guna Ravichandran - Namakkal,இந்தியா
24-அக்-201510:07:28 IST Report Abuse
Guna Ravichandran இனி விமானி பயணிகள் அனைவரும் ஓடுதளத்தில் படுத்து மறியல் செய்ய வேண்டும்..........
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
24-அக்-201510:06:34 IST Report Abuse
Sandru சென்னை விமான நிலையத்தில் குடி நுழைவு துறை அதிகாரிகள் மிகவும் "மந்தமாக " களைப்பு அடைந்து இருக்கும் வெளி நாட்டு பயணிகளை மேலும் தொந்தரவு செய்யும் வகையில் பணி புரிகிறார்கள். வெளிநாட்டு பயணிகள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பின்புதான் "எருமை மாடு " போல தாமதமாக வந்து குடி நுழைவு சன்னலை திறப்பார்கள். சன்னலை திறந்த பின்னும் மிக மிக தாமதமாக பணி புரிவார்கள். இதில் மிகவும் பெரிய ஆச்சரியத்தில் இல்லாதது, தனக்கு வேண்டிய பயணிகளை/ நண்பர்களை வரிசையில் நிறுத்தாமல் உடனடியாக VIP போல சன்னலை கடந்து அழைத்து செல்லுவதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
24-அக்-201510:02:19 IST Report Abuse
Sami என்ன ஒரு பெருமையான விஷயம். எங்க ஊரு நல்ல குடிகாரர்களை கொண்டு சிறப்பாக விளங்குவது போலதான் இதுவும். நண்பர்கள் சிலர் அங்கே இருக்கும் வசதிகளை பற்றி தவறாக கூறினாலும், பெருமைக்கு ஒரு சருக்கலும் ஏற்படப்போவதில்லை. எங்க ஊரு எப்பவுமே உசத்திதான். எவ்வளவு காரி துப்பினாலும் எங்களின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவ்ளோ தடுப்பாற்றல் எங்களுக்கு. இப்படி சொல்லிக்கொண்டே இருக்க ஆயிரம் இருக்கு இங்கே. அதை விட்டுட்டு கழிப்பறை சரியில்லை, சாக்கடை சரியில்லை, சர்க்கர வண்டி சரியில்லைன்னுட்டு. நாங்க இப்படித்தான், சும்மா ஊரைவிட்டு ஓடிட்டு குறை சொல்லக்கூடாது. இப்படிக்கு தமிழக ஒரு சார் மக்களும், முழு அரசும்....
Rate this:
Share this comment
Cancel
malar - chennai,இந்தியா
24-அக்-201508:50:18 IST Report Abuse
malar இந்த லக்ஷணத்தில், இங்கே தற்காலிகமாக வந்து போகிறவர்கள் நம்மிடம் இந்தியாவில் என்ன இல்லை, இப்போ இந்தியா அவ்வளோ முன்னேறி இருக்கிறது என்ன சூப்பர் marketukkal மால்கள் IT பார்க்குகள் I T யில் இந்தியரை அடிச்சுக்க முடியாது.. இந்தியாவை விட என்ன வெளிநாடுகளில் இருக்கிறது என்று ஓடுகிறார்களோ என்று solvathodu koodave என்ன innum konjam suththam venum konjam ange இங்கே லஞ்சம் இருக்கிறது அவ்வளவுதான் எங்கே இல்லை லஞ்சம் என்று சொல்லும்போது .... சரி விடுங்க... எப்படி irunthaalum இந்தியாதான் ஒசத்தி என்று தங்கள் ஒன்றும் மிஞ்சிய தேச பக்தியை சொல்லமுடியாது.. ஆனா ஏன் அவங்க பிள்ளைகள் AMERICA, AUSTRALIA UK ENDRU விட்டு வரமாட்டேன் என்கிறார்கள் என்பதற்கு பதில் இருக்காது ..சென்னை ஏர்போர்ட் லே ஆரம்பித்து இருக்கிற குப்பையை பார்த்த உடனே சென்னை வந்து விட்டோம் என்று உறைக்க ஆரம்பிக்கும்... . .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-அக்-201508:31:39 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒப்பந்தம் கொடுத்த அதிகாரியும்,, ஒப்பந்தத்தில் வேலை செய்த ஒப்பந்தகாரும் தலை குனிய வேண்டிய நேரம்... அவர்களுக்கு காசுதான் பிரதனமாயிற்றே .....என்னதான் நிகழ்ந்தாலும் நம்ம அதிகாரிகளுக்கு சூடு சொரணை அறவே கிடையாது .
Rate this:
Share this comment
Cancel
malar - chennai,இந்தியா
24-அக்-201508:15:46 IST Report Abuse
malar இந்த வீல் சேர் சர்வீஸ் இருக்கே மோசம் அவர்கள் கொண்டு வந்து விட்டு விட்டு காசுக்கு பக்கத்திலேயே நிற்பது அருவருப்பாக இருக்கிறது. தவிர 100 200 ல்லாம் வாங்காமல் மரியாதையாக இருக்கட்டும் ம்மா என்று வாங்கி கொள்ளாமல் இருப்பது நமக்கு புரிவதில்லை அப்புறம் ஒருத்தர் வந்து நமக்கு உதவுகிறார் 500 க்கு குறையாமல் கொடுக்கும்படி கழ்ப்பரைகளை ப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பது நல்லது ..பெரும்பாலான பயணிகள் மறக்காமல் கடைசி கால் க்கு முன்னால் விமானத்திலேயே முடித்து விட்டு தான் இறங்குவார்கள் பயத்தில்
Rate this:
Share this comment
Cancel
Veerasekar - Tokyo,ஜப்பான்
24-அக்-201507:03:03 IST Report Abuse
Veerasekar சென்னை விமானநிலையத்தின் எதிர்புறத்தில் ஒரு கழிவறை இருக்கிறது. மிகவும் மோசமாக இருக்கிறது. அதற்கும் கட்டணம். உலகில் எங்கும் இல்லாத கட்டண கழிப்பறை சென்னையையும் தமிழகத்தின் பிறபகுதிகளையும் ஆக்கிரமித்து உள்ளது. அரசாங்கம் பல தேவை இல்லாத இலவசங்களை தேவை இல்லாமல் மக்களுக்கு அளிக்கிறது. கழிவறையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள எந்த ஆட்சியாளர்களும் முன்வராதது ஏனோ?. WIFI Free but pay TOILET .
Rate this:
Share this comment
Cancel
Veerasekar - Tokyo,ஜப்பான்
24-அக்-201506:56:08 IST Report Abuse
Veerasekar சென்னை விமான நிலையம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் இந்த இரண்டை செயல்படுத்தினால் தான் நடக்கும். 1. உலகிலேயே சிறப்பாக செயல்படும் விமானநிலையத்தின் அதிகாரியை பணியில் அமர்த்தலாம். 2. அங்கு பணிபுரியும் ஊழியர்களை சாலைகள் போடும் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டு படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களிடம் அந்த பணியை அளிக்கலாம். எக்காரணமும் கொண்டு அரசாங்க ஊழியர்களை மட்டும் பணியில் அமர்த்தக்கூடாது. இந்திய அரசாங்க ஊழியர்களை எந்த பணியில் நியமித்தாலும் ஒழுங்கு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை