எழுத்தும், பெயர்ப்பும் என் கண்கள்-பேராசிரியரின் பெருமிதம்| Dinamalar

எழுத்தும், பெயர்ப்பும் என் கண்கள்-பேராசிரியரின் பெருமிதம்

Added : அக் 25, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
எழுத்தும், பெயர்ப்பும் என் கண்கள்-பேராசிரியரின் பெருமிதம்

தாய் மொழியில் நாவல்கள் எழுதுவதை விட, உயர் கல்வி ஆய்வு நுால்களை எழுதவும், ஆங்கிலத்தில் வெளியான பிரபல நுால்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதையும் இரு கண்களாக கொண்டுள்ளார், மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை தலைவர் சா.வின்சென்ட்.ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்சைலன்ட் ஸ்பிரிங்க்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆங்கில நாவல்களை மொழி பெயர்த்தும், வளர்க உயர்க உட்பட 12க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நுால்கள் மற்றும் பல்கலை ஆங்கில பாட நூல்களையும் வெளியிட்டுள்ளார். வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம் உட்பட சில நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டுள்ள பேராசிரியருடன் பேசியதிலிருந்து...* ஆங்கிலத்துறை தலைவர்- எழுத்தாளரானது எப்படி?சிறிய வயதிலேயே எழுதுவதில் ஆர்வம். 1960ல் மனிதன் மாறி விட்டான் என்ற தலைப்பில்கட்டுரை எழுதினேன். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் 28 ஆண்டுகள் ஆங்கிலத்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த போது, பாட நூல்களை வெளியிட துவங்கினேன். 'டீச்சிங் ஆப் இங்கிலீஷ்', 'டீச்சிங் ஸ்கில்ஸ்', 'லெட்ஸ் ஸ்பீக் இங்கிலீஷ்', போன்ற பல்கலை மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான பட்டம் மற்றும் தொலை நிலைக் கல்வித்திட்டங்களுக்கு புத்தகங்கள் எழுதியுள்ளேன்.* மொழி பெயர்ப்புக்கு எந்த மாதிரியான நூல்களை தேர்வு செய்கிறீர்கள்?என் பாட புத்தகங்களை பார்த்த பொள்ளாச்சி எதிர் வெளியீடு நிறுவனம், ஆங்கில நாவல்களை மொழி பெயர்த்து தரும்படி கூறி, வெளியிட தூண்டியது. முதலில் வெளியிட்ட ஜோனத்தன்லீயர் எழுதிய பிராய்ட் என்ற மொழி பெயர்ப்பு நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்றன. அதையடுத்து கிட்டி பெர்கூசன் எழுதிய 'ஸ்டீபன் ஹாக்கிங்', ரெய்ச்சல் கார்சன் எழுதிய 'ஸ்லைட் ஸ்பிரிங்க்ஸ்', பிரேசிலின் சிக்கோ மென்டிஸின் காடுகளுக்காக போராட்டம் போன்ற நூல்களை மொழி பெயர்த்து வெளியிட வரவேற்பு கிடைத்தது.* மொழி பெயர்ப்புக்கும், நூல்கள் எழுதுவதற்கும் என்ன வேறுபாடு?மொழி பெயர்ப்பின் போது நூலாசிரியர் எந்த சூழ்நிலையில் எழுதியிருக்கிறார் என அறிந்து, பொருள் மாறாமல் தமிழ்படுத்துவது என்பது எளிதானதல்ல.* அடுத்த படைப்பு?உளவியலில் நாட்டம் உண்டு. பல்வகை நுண்ணறிவு என்ற ஹவர்டு கார்ட்னரின் நூலின் அடிப்படையில் உளவியல் குறித்து ஒரு நூல் வெளியிட திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் உளவியலை மற்றவர்கள் அறிய வாய்ப்புள்ளது. பவுண்டன் ஹெட் என்ற ஆன் ரேண்ட்டின் கட்டட கலைஞர் குறித்த நாவலை மொழி பெயர்க்கவுள்ளேன். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மாணவர்களுக்கான இந்தியா 20;20 என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறேன்.* முதுகலை பட்ட மாணவர்கள் கூட ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள முடியவில்லையே?கற்று கொடுக்கும் முறையிலுள்ள குறைபாடுகள் தான் இதற்கு காரணம். மொழி திறன்கள் அடங்கியது. கேட்கும், பேசும், எழுதும், வாசிக்கும் திறன்கள் கொண்டது. ஆனால் இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பயிற்சி பெறுவதில்லை. பேசி பழக வேண்டும்.* ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லை என இளைஞர்களிடம் ஆதங்கம் உள்ளதே?இன்றைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் பேசி பழக வேண்டும். துவக்கத்தில் தவறுகள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் பேசும் வாய்ப்பை ஆசிரியர்கள் உருவாக்கி கொடுக்க வேண்டும். வெளிநாட்டினர் அனைவருமே ஆங்கிலத்தில் பிழைகளின்றி பேசுவதில்லை.இவரை வாழ்த்த 94421 25697.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை