EN PAARAAVAI | வாழ் வாங்கு வாழ மனவளம் வேண்டும் | Dinamalar

வாழ் வாங்கு வாழ மனவளம் வேண்டும்

Added : அக் 26, 2015 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 வாழ் வாங்கு வாழ மனவளம் வேண்டும்


வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் தேவை மனவளம். மனவளம் என்றதும் நினைவிற்கு வருவது விவேகானந்தர். அவர் தான் மனவளம் குறித்து அரிய பல கருத்துக்களை எழுதியவர்.“உனக்குள் எல்லா வலிமையும் இருக்கிறது.உன்னால் எதையும் சாதிக்க முடியும்.நீ துாய்மையுள்ளவனாகவும், வலிமையுள்ளவனாகவும் இருந்தால்,
நீ ஒருவனே உலகில் உள்ள அனைவருக்கும் சமமானவன் ஆவாய். உயிரே போனாலும் நீ நேர்மையுடன் இரு”விவேகானந்தர் எழுதியதோடு, பேசியதோடு நில்லாமல் வாழ்விலும் கடைப்பிடித்தவர். முக்கடல் ஆர்ப்பரிக்கும் இடத்தில் அஞ்சாமல் நீந்தியே சென்று தியான மண்டபம் அடைந்தவர்.விவேகானந்தரின் வைர வரிகள் அனைத்தும் மனவளம் சார்ந்தவை. இவை அனைத்தும் காந்தியடிகள் வாழ்க்கைக்கு முற்றிலும் பொருந்தும்.
காந்தி மாணவனாக இருந்த போது, கல்வி அதிகாரி ஆய்வுக்கு வந்தார்.ஆசிரியரே, 'சக மாணவர்களை பார்த்து எழுதி விடு' என்று வற்புறுத்திய போதும் எழுத மறுத்தவர். பின்னாளில் நன்கொடையாக வந்த 50 பவுன் தங்க நகையை
கஸ்துாரிபாய் கேட்ட போதும் காந்தியடிகள் தர மறுத்தார்.'பொதுத் தொண்டுக்காக வந்த கொடையை சொந்தத்தேவைக்கு எடுக்கக் கூடாது; உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூறினார். மனவலிமையுடனும், நேர்மையுடனும், உண்மையுடனும் வாழ்ந்ததால், இன்றும் காந்தியடிகள் உலக மக்களால் போற்றப்படுகிறார்.
வறுமையிலும் செம்மை பாரதியார் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர். செல்லம்மாள், பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்து வைத்த அரிசியை சிட்டுக்குருவிகளுக்கு தந்து மகிழ்ந்தவர். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று பாடியவர். 'அச்சமில்லை' பாடலை உரக்கப் பாடினாலே, பாடியவருக்கும் அச்சம் அகன்று விடும். மன தைரியம் மிக்கவர்.
இந்தியாவின் கடைக்கோடியில் படகோட்டி மகனாகப் பிறந்து, இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்தவர்; செய்தித்தாள் விற்றுப் படித்து தலைப்புச் செய்தியானவர் மாமனிதர் அப்துல்கலாம். அவரிடம் 'மகிழ்வான நேரம் எது?' என்று கேட்ட போது, குடியரசு தலைவரான நேரத்தைக் குறிப்பிடவில்லை.
''போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, மிகவும் எடை குறைவாக செயற்கைக்கால் செய்து கொடுத்து, எளிதாக அவர்கள் நடந்த போது மனம் மகிழ்ந்தேன்'' என்றார்;

இது தான்மன வளம்.

இயங்கிக் கொண்டே இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிந்தனையாளர் வெ.இறையன்பு, “விதைத்துக் கொண்டே சென்றால் அறுவடை ஒரு நாள் வரும். இயங்கிக் கொண்டே இரு” என்பார்.இன்றைய இளைஞர்கள் பலர், ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு, தோல்வி என்றவுடன் மனம் தளர்ந்து விடுகின்றனர். குரங்கு, விதை விதைத்து தண்ணீர் ஊற்றி விட்டு, மறுநாள் மண்ணைத் தோண்டி விதையை எடுத்துப் பார்த்து, 'முளைக்கவில்லையே' என்று வருந்தியது போலவே, இன்றைய இளைஞர்கள் பலர் ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர். தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயல்வதே மனவலிமை.வித்தகக் கவிஞர் பா. விஜய், “அவமானங்களை சேகரித்து வையுங்கள்; அது முன்னோக்கி செலுத்தும் உந்து சக்தி” என்பார்.
யாராவது நம்மை கேலி பேசி அவமானப்படுத்தினால், கோபப்பட்டு திருப்பி பேசாமல், அடிக்காமல், வாழ்வில் வென்று காட்டுவதே சிறப்பு. அதற்கு மனவலிமை அவசியம்.
காவியக் கவிஞர் வாலி பாடல் எழுத முயற்சி செய்து விட்டு முடியாமல் சொந்த ஊர் செல்ல முடிவு எடுத்த போது, கவியரசு கண்ணதாசனின் பாடலான, மயக்கமா? கலக்கமா? பாடலில் உள்ள “உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற வைர வரிகளை கேட்டபின் முடிவை மாற்றிக் கொண்டு திரும்பவும் முயற்சி செய்து திரைத்
துறையில் வென்றார்.வெற்றிக்குக் காரணம் மனவலிமை. நமக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் அடைவதும், நமக்கு மேல் உள்ளவர்களைப் பார்த்து பெருமை கொள்வதும் மனவலிமை.வித்தியாசமான சிந்தனை ஒரு சீப்பு வியாபாரி, தனது மூன்று மகன்களில் திறமையானவருக்கு அடுத்த பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைத்தார். மூவரிடமும், அருகில் உள்ள புத்தமடத்தில் சீப்பு விற்று வாருங்கள் என்றார்.
முதல் மகன், ''புத்தமட பிட்சுகள் அனைவருக்கும் மொட்டைத் தலை, அவர்களிடம் சீப்பு விற்பதா? இயலாத செயல்'' என்று சொல்லி விட்டான். இரண்டாவது மகன், ''புத்தமடம் சென்று புத்த பிட்சுகளை சந்தித்து சீப்பு என்பது தலைவார மட்டுமல்ல. அரித்தால் சொறியவும் பயன்படுத்தலாம்'' என்று சொல்லி 50 சீப்புகள் விற்க ஏற்பாடு செய்து வந்தான்.
மூன்றாவது மகன், புத்தமடத் தலைவரிடம் ஒரு சீப்பைக் காட்டினான். ''இந்த சீப்பில் புத்தரின் போதனையான 'ஆசையே அழிவுக்குக் காரணம்' என அச்சடித்துள்ளேன். தினமும் இங்கு வரும் பக்தர்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். புத்தரின் பொன்மொழியையும் படிப்பார்கள்'' என்றான்.
புத்தமடத்தின் தலைவர் 5,000 சீப்புகள் வழங்கிட ஆணை வழங்கினார். வியாபாரி, மூன்றாவது மகனிடம் பொறுப்பை வழங்கினார். உடன்பாட்டுச் சிந்தனையும் வித்தியாசமான சிந்தனையும் வெற்றிக்கு வழிவகுக்கும்.எடிசன், ஓர் அரிய கண்டுபிடிப்பை தனது உதவியாளரிடம் கொடுத்து அருகே வைக்கச் சொன்னார். கை தவறி கீழே போட்டு விட்டார்; உடைந்து விட்டது.
அருகில் நின்றவர், ''உதவியாளர் உடைத்து விட்டாரே, நீங்கள் ஏன் திட்டவில்லை'' என்றார்.அதற்கு எடிசன், ''உடைந்த பொருளை என்னால் திரும்பவும் உருவாக்க முடியும். ஆனால் நான் திட்டி அவர் மனம் உடைந்தால் அதை எதனாலும் ஒட்ட முடியாது'' என்றார்.
இந்த மனநிலை நமக்கு வர வேண்டும். எடிசனின் ஆய்வுக்கூடம் தீப்பற்றி எரிந்து சேதமானது; அதற்கும் அவர் கலங்கவில்லை. நடந்து முடிந்த செயலுக்காக கவலை கொள்வதில் பயனில்லை என்பதை அறிந்திருந்தார். அதனால் தான் அவரால் பல கண்டுபிடிப்புகளை நன்கு கண்டுபிடிக்க முடிந்தது.
நிம்மதிக்கு வழி மண்வளம் என்பது பயிர் வளர்க்கும். மனவளம் என்பது உயிர் வளர்க்கும்.''நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள்'' என்று குருவிடம் ஒரு சீடன் கேட்டான்.அதற்கு குரு ''நான் சிந்திக்கும் போது சிந்திக்கிறேன். பேசும் போது பேசுகிறேன். உண்ணும் போது உண்ணுகிறேன். உறங்கும் போது உறங்குகிறேன். இவற்றைக் கடைப்பிடிக்கிறேன்'' என்றார்.
சீடனுக்கு வியப்பு! நாமும் அப்படித்தானே செய்கிறோம் என்று குருவிடம் சொன்னான்.''நீ உண்ணும் போதும் ஏதாவது சிந்திப்பாய் உறங்கும் போதும் ஏதாவது சிந்திப்பாய். அதனால் நிம்மதி இழப்பாய். எந்த ஒரு செயலையும் ஈடுபாட்டுடன் ஒருமுகமாக செய்தல் வேண்டும்'' என்றார்.
மனம் வளமாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். உடல்நலத்தையும், மனவளமே முடிவு செய்கிறது. மனம் குறித்து நம் நாட்டில் பல பழமொழிகள் உள்ளன.
'மனம் ஒரு குரங்கு' என்று ஒரு பழமொழி உண்டு. ஆம், மனம் குரங்கு தான். அடிக்கடி தாவும், அதனைக் கட்டுப்படுத்துவது நம் கடமை. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தேவதையும் உண்டு. மிருகமும் உண்டு.
தேவதை சொல்வது போல நடந்தால் மகிழ்ச்சி, நிம்மதி நிலவும். வாழ்வாங்கு வாழலாம். ஆனால் மனதில் உள்ள விலங்கு சொல்வது போல நடந்தால். நம்மை மற்றவர்கள் மனிதனாகப் பார்க்காமல் விலங்கு என்றே எண்ணுவார்கள்.பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. சாதித்து சிறப்பதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும். மனத்தை வளமையாக்கி, வலிமையாக்கி மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோம்!-கவிஞர் இரா. இரவி,மதுரை. 98421 93103

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nimsa - Chennai,இந்தியா
27-அக்-201521:51:14 IST Report Abuse
Nimsa மிகவும் அருமையான கட்டுரை. அவசியமான கட்டுரையும் கூட. இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்துக்கள். அனைவர்களும் நேர்மையாக இருந்தாலே எல்லோர் வாழ்வும் நலமாகும். நல்லவனை விட நேர்மையானவன் மேல்.
Rate this:
Share this comment
Cancel
senthil_v - chennai,இந்தியா
27-அக்-201515:57:22 IST Report Abuse
senthil_v மிகவும் அருமை
Rate this:
Share this comment
Cancel
chozhan - melbourne,ஆஸ்திரேலியா
27-அக்-201513:31:07 IST Report Abuse
chozhan இன்றிய தலைமுறைக்கும் ,தனி குடித்தனம் வந்த முந்தைய தலைமுறைக்கும் இது தேவை . பயிற்சி வகுப்புகள் நடந்தால் நல்லது. என்னுடைய தொழிலில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து இன்றிய தலை முறையிடம் பேசி வருகிறேன் . நல்ல வரவேற்பு உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Rajthangam - Karur,இந்தியா
27-அக்-201512:54:58 IST Report Abuse
Rajthangam அருமையான கருத்துக்கள். இதை கடைபிடித்தால் நிச்சயம் மனவலிமை கூடும்.
Rate this:
Share this comment
Cancel
jamal - Tirunelveli,இந்தியா
27-அக்-201512:20:34 IST Report Abuse
jamal வணக்கம் ஐயா, உங்கள் பதிவு ஒவ்வொருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் என்பதில் ஐயமில்லை. எனக்கும் ஒரு காலம் இருந்தது தன்னம்பிக்கையை உணர, படித்து முடித்து விட்டு என்னிடம் இருந்தது படிப்புடன் தன்னம்பிக்கை மட்டுமே. அது என்னை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது என்பது உண்மை. வாழ்த்துக்கள். js
Rate this:
Share this comment
Cancel
chandrasekar - THOOTHUKUDI,இந்தியா
27-அக்-201512:08:25 IST Report Abuse
chandrasekar நல்ல கட்டுரை என் மனதில் ஆழமாக பதிந்த கட்டுரை நன்றி திரு ரவி
Rate this:
Share this comment
Cancel
Sundar Natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-அக்-201511:31:59 IST Report Abuse
Sundar Natarajan அருமையான பதிப்பு. பின்வரும் வாக்கியம் "காந்தி மாணவனாக இருந்த போது, கல்வி அதிகாரி ஆய்வுக்கு வந்தார்.ஆசிரியரே, 'சக மாணவர்களை பார்த்து எழுதி விடு' என்று வற்புறுத்திய போதும் எழுத மறுத்தவர்." முடிவடையாமல் இருக்கிறது. இதனை முழுமை படித்தினால் நன்றாக இருக்கும். நன்றி.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-அக்-201511:24:15 IST Report Abuse
A.George Alphonse THe author beautifully narrated about mind and how to keep it up .He also quated many examples of great personalities life.Hats up to Kavingar Era.Eeravi .I will pray Almighty for his good health to continue his good works to the community. Every one must read this article and act accordingly. If every one in the society including young and old should keep their mind steady and under their control surely India will become top most country in the world. Let God gives every one the strength and courage to keep their mind in steady and control.
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
27-அக்-201508:26:19 IST Report Abuse
R.Srinivasan இப்படிச் சொல்லி ....உசுப்பேத்தி விட்டுதான் பெரியவர் ஸ்டாலினை ஊர் ஊராக....அலைய விட்டிருப்பார் போல....பாவம்....ஸ்டாலின்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை