ஆழித்தேர் வெள்ளோட்டம்: திருவாரூரில் கோலாகலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆழித்தேர் வெள்ளோட்டம்: திருவாரூரில் கோலாகலம்

Added : அக் 27, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர் :திருவாரூர், தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேர் வெள்ளோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 2010ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி, ஆழித் தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில், திருப்பணி துவங்கியதை அடுத்து, 2011ம் ஆண்டு முதல், ஆழித் தேரோட்டம் நடைபெறவில்லை. கோவில் திருப்பணியுடன், 2.18 கோடி ரூபாய் செலவில், ஆழித்தேர், சுப்ர மணியர் தேர் புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்து, ஆழித்தேர், சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது. காலை 9:15 மணிக்கு, ஆழித்தேர் பிரதிஷ்டை நடை பெற்றது. காலை 9:30 மணியளவில், சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் துவங்கியது. ஆழித்தேரை, திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆழித்தேரின் பின்புற சக்கரங்கள், புல்டோசர் இயந்திரங்கள் மூலம் உந்தப்பட்டன. தேர், நேற்று மாலையில் நிலையை அடைந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை