இலை சுருட்டுப் புழு கட்டுப்படுத்த ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலை சுருட்டுப் புழு கட்டுப்படுத்த ஆலோசனை

Added : நவ 04, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெல்லிக்குப்பம்:நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளவரசன் அறிக்கை:அண்ணாகிராமம் வட்டாரத்தில் சம்பா பட்டத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிரில் ஒரு சில இடங்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் உள்ளது. பூச்சி தாக்குதல் அதிகமானால் 30 முதல் 80 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும்.இப்புழுவின் தாக்குதல் இருந்தால், இலைகள் நீள வாக்கில் மடிந்திருக்கும் அதில் புழுக்கள் இருக்கும். இதை கட்டுப்படுத்த அதிகளவு தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.வரப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். விளக்குப்பொறிகள் வைத்து புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். நடவு செய்த 33, 44, 51ம் நாட்களில் டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணியை விட வேண்டும். ஒரு எக்டேருக்கு பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 1 கிலோ, அசாடிராக்டின் 1 லிட்டர், மானோகுரோட்டாபாஸ் 1லிட்டர்,குயினால்பாஸ் 1 லிட்டர், குளோரிபைரிபாஸ் 1 லிட்டர் இவற்றில் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுபடுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X