'திருட்டு விசிடி' ஹீரோ பிரபா| Dinamalar

'திருட்டு விசிடி' ஹீரோ பிரபா

Added : நவ 09, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
'திருட்டு விசிடி' ஹீரோ பிரபா

சினம் கொண்ட சிங்கத்தை காட்டுல பார்த்திருப்பீங்க, சினிமா பட போஸ்டர்ல பார்த்திருக்கீங்களா? பார்க்கணும்னு ஆசையா இருந்தா 'திருட்டு விசிடி' போஸ்டரை பாருங்க, அப்படியேபடத்தையும் பாருங்க. அந்த 'சிங்கம்' வேற யாருமில்லை, வத்தலக்குண்டு பிரபாகரன் தான். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டுகளாக தன் தோற்றத்தையே மாற்றி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.'விஸ்காம்' படித்த இவர் போட்டோ எடுப்பதில் வல்லவர். இவரது போட்டோவிற்கு மாநில அளவிலான விருது கிடைத்திருக்கிறது. இவர் விருது வாங்கிய போட்டோக்களை நாளிதழ்களில் பார்த்து 'மதுரை மாவட்டம்' என்ற படத்தின் இயக்குனர் பாலமுருகன் வாய்ப்பு கொடுத்தார். முதல் படம் வெளியாவதற்குள், சொந்த தயாரிப்பான 'திருட்டு விசிடி' வெளியான மகிழ்ச்சியில் இருந்த அவரிடம் ஓர் நேர்காணல்.* முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்களோடு சேர்ந்துள்ளீர்களே?இப்படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். எடிட்டர் லெனின், தம்பிராமையா, அப்புக்குட்டி சிவபாலன் என பெரிய பட்டாளமே உள்ளது. என் அதிர்ஷ்டம் தான் இவர்களோடு பணியாற்ற செய்திருக்கிறது.* முதல் படம் வரும் முன்பே, சொந்தப் படம் வந்துவிட்டதே?ஆமாம். 'காதல்'படத்தில் நடித்த சுகுமாறன் தான் 'திருட்டு விசிடி'யின் இயக்குனர். அப்பா, சித்தப்பா கொடுத்த ஊக்கம் தான் என்னை ஒரு தயாரிப்பாளராக்கியுள்ளது. இப்படத்திற்காக மலேசியா சென்று புரூஸ்லீயின் வகுப்பு தோழர் 'யுஆ' விடம் சண்டைப் பயிற்சி பெற்றேன்.* நடிப்பு அனுபவமும், பாராட்டும்...மதுரையில் நடந்த படப்பிடிப்பில் ஒரு காட்சியில் அழுது நடிக்க வேண்டும். இதற்காக தம்பி ராமையா காட்சிக்கு தகுந்த 'மூடு' டுடன் இருந்தால் தான் நன்றாக வரும் என்றார். நமக்கு சோகம் என்பதே ஆகாது. இருந்தாலும் எப்படியோ நடித்து ஒரே 'டேக்'கில் 'ஓகே' வாங்கி விட்டேன். என் நடிப்பை பார்த்து தம்பி ராமையா ஆச்சரியப்பட்டார். அவரிடம், என் அம்மாவின் பெயர் ராஜாத்தி, இந்தப் படத்தின் ஹீரோயின் பெயரும், என் அம்மாவின் பெயர் தான். அவரை நினைத்து அழ வேண்டும் என்றபோது, நான் என் அம்மாவை நினைத்து அழத் தொடங்கினேன் என்றதும் கட்டிப்பிடித்து பாராட்டினார். படம் முடிந்ததும் எடிட்டர் லெனின், அவருடையவீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார்.* அடுத்து என்ன...?'முருகா வள்ளியோடு ஊர்வலம்'- படத்தை இயக்குனர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த அய்யனார் இயக்குகிறார். இதில் ஜான் விஜய், சிங்கம்புலி, தேவதர்ஷினி நடிக்கின்றனர். அடுத்தது சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் இயக்கும் படத்தை நானே தயாரித்து ஹீரோவாக நடிக்கிறேன்.* தொடர்ந்து படம் தயாரிப்பீர்களா?ஆமாம், நானும் புதியவன் என்பதால் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளோம். தமிழ் சினிமா திறமையுள்ளவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. எனக்கும் அந்த வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.pcrocker10@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X