Rain affect many districts | தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு

Added : நவ 09, 2015 | கருத்துகள் (10)
Advertisement
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையால் பாதிப்பு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால், தீபாவளி வியாபாரம், பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

மாவட்ட வாரியாக மழை நிலவரம் வருமாறு:

நாகப்பட்டினம்:
நாகையில், செல்லுார், சவேரியார் கோவில் தெரு, பாலையூர் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் மேடான பகுதிக்கு, இடம் பெயர்ந்தனர். கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1,500 விசைப்படகுகள், 4,500 பைபர் படகுகள், கரையில் நிறுத்தி வைக்கப் பட்டன. ஒரு லட்சம் மீனவர்கள், வீடுகளில் முடங்கினர்.விளை நிலங்களில், வௌ்ள நீர் புகுந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் வெள்ளநீர் பாய்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடலுார்: நேற்று முன்தினம் காலையில் இருந்து, கனமழை பெய்தது. ஒரே நாளில், கடலுார் மாவட்டத்தில், சராசரியாக, 70.78 மி.மீ., மழை கொட்டியதால், தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் இரவு 2:30 மணி முதல், மின்சாரம் நிறுத்தப்பட்டதால், மாவட்டம் இருளில் மூழ்கியுள்ளது.கடலுார் பகுதியில், நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், 9:30 மணி வரை, மணிக்கு, 50 - 75 கி.மீ., வேகத்தில், சூறைக்காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்தும், வேருடனும் சாய்ந்தும் விழுந்தன. கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டையில், பெரிய மரம் ஒன்று விருத்தாசலம் ரயில் பாதையில் விழுந்தது. ஆலப்பாக்கத்தில், சிதம்பரம் மார்க்க ரயில் பாதையிலும், மரங்கள் விழுந்தன.இதனால், காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில், முதுநகர் ரயில் நிலையத்தில், காலை, 8:15 மணிக்கு நிறுத்தப்பட்டது. சிதம்பரம் செல்ல வேண்டிய சரக்கு ரயில், முதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே, குடிசை வீடு இடிந்து விழுந்து, சமையல் தொழிலாளி பாலு, 45, இறந்தார்.ஜெயங்கொண்டான் கிராமத்தில் ஒரு வீடு, சின்னசேலம் கருந்தலாங்குறிச்சி காலனியில், ராமசாமி என்பவரின் வீடு இடிந்து விழுந்தன.திண்டிவனம், பாரதிதாசன் பேட்டையில் மழை நீர் புகுந்து, 18 கூரை வீடுகள் சேதமடைந்தன. திண்டிவனம், வகாப் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி அடுத்த கொங்கராம்பூண்டி கிராமத்தில், 19 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தன.

தர்மபுரி:தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில்,நேற்று அதிகாலை முதல், கன மழை பெய்தது. மழை சேதம் குறித்து கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஐந்து தாசில்தார், 25 வருவாய் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர்.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, கெலவரப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளன. எனவே, தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆறு செல்லும் பகுதிகளில், ஏழு குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில், கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சாலைகளில் விழுந்த மரங்களை, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக அகற்றினர். சேதமான மின்கம்பங்களை, மின்வாரியத்தினர் சீரமைத்தனர்.

திருச்சி:திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் முதல் அவ்வபோது லேசான மழையும், கனமழையும் பெய்தது. இதனால், நான்கு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள், நன்கு வளர்ச்சி அடையும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரியலுார் மாவட்டத்தில், நந்தியாகுடிகாடு என்ற இடத்தில், ஓட்டு வீடு சுவர் இடிந்து விழுந்து, ஜெகதாம்பாள், 60, என்பவர் இறந்தார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில், கடல் சீற்றத்தால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

சேலத்தில் 42.6 மி.மீ., மழை : சேலம் மாவட்டத்தில், நேற்று காலை, 10:30 மணிக்கு துவங்கிய மழை, இரவு வரை நீடித்தது. நேற்று முன்தினம், மாவட்டம் முழுவதும், 42.6 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையளவு விபரம் (மி.மீ.,): சேலம்,- 1.0; ஏற்காடு,- 3.8; வாழப்பாடி,- 1.0; ஆத்துார்,- 7.4; தம்மம்பட்டி,- 6.8; கெங்கவல்லி,- 11.2; வீரகனுார்,- 11.4. சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலுாரில் மழை இல்லை.

புதுச்சேரி:புதுச்சேரியில், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், கன மழையுடன் சூறைக் காற்று வீசியது. தாழ்வான பகுதிகளில், மழை வெள்ளம் சூழ்ந்தது. 25க்கும் மேற்பட்ட வீடுகள், இடிந்து விழுந்தன. அரியாங்குப்பத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், கயிறு திரிக்கும் தொழிலாளி சுந்தரமூர்த்தி,65, என்பவர் இறந்தார்.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில், 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அதிகாலை முதல் மின் வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் தடைபட்டது.பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட்டனர்.புதுச்சேரி துறைமுகத்தில், மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் வழக்கத்திற்கு மாறாக, 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. மாலையில், காற்றும், மழையும் ஓய்ந்ததால், புதுச்சேரி நகரின் கடை வீதிகளில், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகை மீனவர்கள் மீட்பு: நாகையை அடுத்த, கோடியக்கரையில் இருந்து, 7ம் தேதி, ஏழுமலை என்பவரின் நாட்டுபடகில், மீனவர்கள், மூன்று பேர் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது, திடீரென்று சூறாவளி காற்று வீசியதால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலையில் சிக்கிய மீனவர்கள், திசை மாறி இலங்கை கடல் எல்லைக்குள் சென்றனர்.அவர்களுக்கு அந்நாட்டு மீனவர்கள், தவறாக திசை காட்டியதால், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதிக்குள் வந்தனர்.இது குறித்து, அப்பகுதியில் மீன்பிடித்த, தங்கச்சிமடம் மீனவர்கள், மண்டபம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மரைன் போலீசார், கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு, மண்டபம் கரைக்கு வந்தனர்.

மழையால் ரயில்கள் தாமதம்: பலத்த மழையால், தென் மாவட்டங்களில் இருந்து, நேற்று காலை, சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட, ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன.சென்னை புறநகர் மின்சார ரயில் பாதையில், இரண்டு இடங்களில் மரம் விழுந்ததால், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

- நமது நிருபர் குழு -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kavish - Omalur tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-201506:25:24 IST Report Abuse
kavish ஓமலூரில் மழை அதிகம்
Rate this:
Share this comment
Cancel
chenduraan - pattanam  ( Posted via: Dinamalar Windows App )
09-நவ-201523:48:37 IST Report Abuse
chenduraan நம்ம தாத்தாவும் அம்மாவும் கல்லணைக்கு பதீலாக உள்ள பாதிபாதினய மட்டும் (கல்லானவ) கட்டினார்கள்
Rate this:
Share this comment
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
09-நவ-201522:53:30 IST Report Abuse
Santhosh Gopal வேலூர் நிலவரம் என்னங்க? வேலூர் என்ன பாவம் செய்தது? இந்த மாவட்டத்தை மட்டும் கண்டு கொள்வதில்லை? வேலூரில் கூட கன மழை இன்று நாள் முழுவதும் கொட்டி தீர்த்தது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், புதுகோட்டை மாவட்டங்களின் நிலவரங்கள் போடுகிறீர்கள், எப்போதும் வேலூர் மாவட்டத்தை மட்டும் போடமாட்டேன் என்கிறீர்கள். வேலூர் கூட தமிழ்நாட்டில் தான் உள்ளது நிருபரே. தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
kannan - covai  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201522:36:27 IST Report Abuse
kannan கரிகாலன் கல்லணை கட்டினான் என்று எல்லோரும் படித்துள்ளோம். கருணாநிதி பலவருடம் முதல்வராக இருந்துள்ளார். இவர் என்ன கட்டினார் என்று தெரியவில்லை ! ?
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-நவ-201506:47:12 IST Report Abuse
Kasimani Baskaranகள்ள ரயிலில் வந்து சென்னையில் பாதியை வாங்கி சரித்திரம் படைத்தவரை, ஈடு இணையில்லாத ஒரு அடிமைக்கூட்டத்தை உருவாக்கியவரை இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? இரண்டையும் விட்டாலும் திராவிடமதத்தை தோற்றுவித்ததை எப்படி மறந்தீர்கள்?...
Rate this:
Share this comment
SRH - Mumbai ,இந்தியா
10-நவ-201510:56:26 IST Report Abuse
SRHகல்லா கட்டினார்...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
10-நவ-201512:42:48 IST Report Abuse
K.Sugavanamரெயில் கள்ள ரயிலா? அல்லது கள்ளத்தனமாக ரெயிலில் வந்தாரா?...
Rate this:
Share this comment
Cancel
SRH - Mumbai ,இந்தியா
09-நவ-201522:05:01 IST Report Abuse
SRH வந்தா வெள்ளம் இல்லேன்னா பஞ்சம் .
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
09-நவ-201521:36:50 IST Report Abuse
தமிழர்நீதி நாலு வருசத்துக்கு தேவையான மழை கொட்டிகொடுதுள்ளார் கடவுள் . அதை சாலை , தெருவில் ஓடவிட்டு கடலுக்குள் தள்ளிவிட்டு வெள்ளம் வரவிட்டு வெள்ளாமை கரியவிட்டு, குளம் ஏரி வரத்து கால்வாய் கவனிக்காமல் அண்டை மாநிலத்திடம் நீர் பிச்சை கேட்க்கும் வேதனை .நீர் வந்தால் வெள்ளம் மழை நின்றால் வரட்சி .
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
10-நவ-201512:44:26 IST Report Abuse
K.Sugavanamபாதி நீர் பூமிக்குள்ளே தான் போயிருக்கு..கடல்ல கலக்குற நீர் மறுபடியும் மழையா மறு சுழற்சி ஆகப் போகுது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை