நெல்லை சி.எஸ்.ஐ., கவுன்சில் கூட்டத்தில் நாற்காலி வீச்சு: பிஷப்பிற்கு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை சி.எஸ்.ஐ., கவுன்சில் கூட்டத்தில் நாற்காலி வீச்சு: பிஷப்பிற்கு எதிர்ப்பு

Added : நவ 13, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லை சி.எஸ்.ஐ., டயோசீசன் கவுன்சில் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நாற்காலி வீசப்பட்டது.திருநெல்வேலி சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ டயோசீசனின் கவுன்சில் கூட்டம் நேற்று டயோசீசன் அலுவலகத்தில் நடந்தது. பிஷப் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் குணசிங் செல்லத்துரை முன்னிலை வகித்தார். 110 பாஸ்டர்கள் (குருமார்கள்) உட்பட 311 டயோசீசன் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மூன்று முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றை பிஷப் வாசித்தார். நெல்லை திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் சங்கத்திற்கு ஒரு ஆண்டுக்கு காணிக்கையாக வழங்கும் தொகையை 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்துவது, குருமார்களின் ஓய்வு வயதை 65ல் இருந்து 67ஆக அதிகரிப்பது, குருமார்கள் முடிவெடுத்தால் அந்தந்த சபையில் இருந்து யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற முக்கிய முடிவுகளை அறிவித்தார். இவற்றை அமல்படுத்த சி.எஸ்.ஐ., திருமண்ட மூலச்சட்டத்தை திருத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வாய்மொழியாக அவற்றை அறிவிக்க கூடாது. ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை பிஷப் கண்டுகொள்ளவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பிஷப் அருகே சென்று கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். நாற்காலிகள் வீசப்பட்டன. பிரச்னை வராமல் தடுக்க உதவிகமிஷனர் மாதவன், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். குருமார்களின் ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம், தற்போதைய பிஷப் கிறிஸ்துதாஸ் பொறுப்பு காலமும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X