நேசம் வளர்ப்போம்..தேசம் காப்போம் :இன்று- உலக சகிப்புத்தன்மை தினம்| Dinamalar

நேசம் வளர்ப்போம்..தேசம் காப்போம் :இன்று- உலக சகிப்புத்தன்மை தினம்

Added : நவ 16, 2015 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 நேசம் வளர்ப்போம்..தேசம் காப்போம் :இன்று- உலக சகிப்புத்தன்மை தினம்

“மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பி பயலேஇது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவல”என்ற பாடல் வரிகள் நாம் அறிந்ததே. இந்த வரிகளில் வருவது போல்தான் இன்றைய உலக நிலை. சகிப்பு தன்மை இல்லை; சகிப்புத்தன்மை இல்லை என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன, மொழி, மத பேதமின்றி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.மனித நாகரிகத்தின் முன்னோடிகளாக, மேற்கத்திய நாகரிகத்தின் முகவரிகளாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கடந்த நுாற்றாண்டு வரை வெள்ளையர்களே உலகில் சிறந்தவர்கள், ஆங்கிலமே சிறந்த மொழி என்ற கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவர்களின் காலனியாதிக்க செயல்பாடுகள், உலகின் பல நாடுகளில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்தது. அவை மக்கள் மனங்களிலிருந்து சகிப்புத்தன்மை என்ற நற்குணத்தை அசைத்துவிட்டது. 1905-ல் ஆங்கில அரசு மேற்கொண்ட, வங்கப்பிரிவினை இந்தியாவில் இந்து--இஸ்லாமியரிடையே பிளவை ஏற்படுத்தியது வரலாற்று உண்மை.
சகிப்புத்தன்மை :ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பது சகிப்புத்தன்மை என விளக்கம் கொள்ளலாம். சகிப்புத்தன்மை என்பது ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி. அந்த உணர்வை எந்த ஒரு சமூக நம்பிக்கைகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் உருவாக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவான முகவுரை “இந்தியா ஒரு சமயச்சார்பற்ற சகிப்புத்தன்மை கொண்ட நாடு” என விளக்குகிறது.ஆனால் சமயச்சார்பற்ற மற்றும் சகிப்புத்தன்மையுடைய பார்வை என்பது ஏதோ ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே தேவை என்ற பார்வை இருப்பதாக கருதப்படுகிறது. இது இந்திய குடிமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பொதுவான அம்சம்.
ஏற்றத்தாழ்வு :துன்பமும், துயரமும் நிறைந்ததாக இந்த உலகம் இருக்கிறது. அச்சமும், வெறுப்பும், சந்தேகமும், நம்பிக்கையற்ற தன்மையும் மனித மனங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை. மனித சமூகத்தை, நாகரிக பாதைக்கு அழைத்து வந்த பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், இன்று மனிதர்களிடையே சரிசெய்ய இயலாத பிரிவினைகளை உண்டாக்கி வருகிறது. ஆற்றல்மிகு அறிவியல் கண்டுபிடிப்புகள், 'நான்தான் பெரியவன்' என்ற மனோபாவத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது. இவை மனித சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நுாற்றாண்டில் உலகப் போர்கள் மூலமாகவும் வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும் அரங்கேறிய, மனித குல பேரழிவுகள் இன்றைய மனித சமூகத்திற்கு எவ்வித பாடத்தையும் கற்றுத்தரவில்லை என்பதை, உலகில் நிகழும் வெடிகுண்டு சப்தங்கள் உறுதி செய்கின்றன.
பலமானவர்கள், பலமானவர்களை மட்டுமே மதிப்பார்கள் என்ற நிலைப்பாட்டினால்தான் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயுத உற்பத்தியில் கோடிகளைக் கொட்டி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒன்றாகி வரும் உலகில் கடின உழைப்பு, விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை தெளிவான ஆன்மிக உணர்வு, பட்டினியால் வாழும் மக்களிடம் காட்டும் மனித நேயம், கல்வி வேலைவாய்ப்பில் நேச மனப்பான்மை, சர்வதேச நல்லுறவு ஆகியவற்றை பேணுவதன் மூலம் ஏற்றத்தாழ்வை நீக்க முடியும்.
யார் சகிப்புத்தன்மைஉடையவர் :கருத்து வேறுபாடுகள் எழுதல் என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று. ஆனால் வேறுபாடுகளை களைவதற்கான வழி அறவழியாக இருக்க வேண்டும். சகிப்புத் தன்மையற்றவர்களின் தேர்வே வன்முறை மார்க்கம். வன்முறை என்னும் வாள் முனையில், யாருடனும் நல்லுறவு பேண இயலாது; யாருக்கும் நல்வாழ்க்கை வழங்க இயலாது. எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே சகிப்புத்தன்மையுடையவர். அவர் தன்மீதான விமர்சனங்களுக்கு அறவழியிலேயே விளக்கங்களை தருகிறார். தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது, பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல்பவரே சகிப்புத்தன்மையுள்ளவர் எனக்கருதலாம்.
சகிப்புத்தன்மை வளர :உலகம் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கிறது. இன, மத சச்சரவுகள், வகுப்பு பூசல்கள் ஆகியவற்றை இல்லை என மறுக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ முடியாது. ஆனால் இவற்றுக்கான தீர்வை சமாதான முறையில், சகிப்புத்தன்மை உணர்வுடன் நாம்தான் காண வேண்டும். உலக அளவில் சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டால்தான் சகிப்புத்தன்மை வளரும். இதற்கான முயற்சி ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரிடத்திலிருந்தும் தொடங்கப்பட வேண்டும்.
“மதங்கள் என்பது தீவுகள் போன்றது. அன்பு, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களால் அவற்றை இணைத்தால் மத ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும்”“மத உணர்வு ஆன்மிக உணர்வாக மலர வேண்டும்” என்ற மறைந்த மாமேதை அப்துல்கலாமின் வரிகளை, சகிப்புத்தன்மை விரும்புவோர் அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.மக்கள் மனங்களிலிருந்து வெறுப்பைத் துடைத்து அழிப்பதே சகிப்புத்தன்மை நாடுவோரின் முக்கிய பணி என உணர வேண்டும். பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள் பிராந்தியங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் மனித நேய உணர்வுகளை நமது குழந்தைகளுக்கு போதிப்பதன் மூலம் சகிப்புத்தன்மை வளரும்.
புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, ஜாதி மதப்பித்து என்னும் சனி(இருள்) தொலைந்து, சமத்துவம் என்னும் ஞாயிறு (ஒளி) பிறக்க அன்பு, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.-முனைவர் சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர்தேவாங்கர் கலைக்கல்லூரிஅருப்புக்கோட்டை.78108 41550

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-நவ-201516:31:11 IST Report Abuse
Endrum Indian இந்துக்களில் தான் நாஸ்திகர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்களில் I.S.I.S. இருக்கின்றார்கள். இவ்வளுவு தான் சகிப்புத்தன்மையில் வித்தியாசம்.
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
20-நவ-201508:16:42 IST Report Abuse
ashakசைமன் எலியுட் ஆரம்பித்த கொலைகார கூட்டம் தான் ஐ எஸ் எஸ், ஆர் எஸ் எஸ் ம் ஐ எஸ் ம் ஒன்றுதான், கடவுளே இல்லை என்று சொல்லுபவர்கள் எப்படி ஹிந்துக்கள் ஆவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
16-நவ-201515:17:33 IST Report Abuse
Sivagiri சகோரத்துவம் என்றால் ஹிந்துக்கள் - கிறிஸ்த்தவர்கள் மீது கொண்டிருக்க வேண்டியது . . . மனிதநேயம் என்றால் ஹிந்துக்கள் - முஸ்லிம்களின் மீது கொண்டிருக்க வேண்டியது . . . இதுதான் கொஞ்சநாள் முன்பு வரை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் இடது சாரிகளின் கொள்கைகளாக கோஷங்களாக இருந்தது . . . இப்போது புதிதாக சகிப்புத்தன்மை என்ற புதிய கோஷத்தை ஹிந்துக்களின் மீது திணிக்கிறது இந்த போலி மதவாதசந்தர்பவாத சகுனி கூட்டம் . . . இதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த கட்சிகளும் அதன் தலைவர்களும் கொஞ்சம் விளக்கமாக வெளிப்படையாக தெரிவிக்க - அறிவிக்க வேண்டியதாக மக்கள் எதிர்பார்கிறார்கள் . . . . இவர்கள் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் - தேசத்தில் பதற்றம் ஏற்படுத்தாமல் தைரியமாக பாரபட்சம் இல்லாமல் அறிவிக்க வேண்டியது இப்போதைய தேவை . . .
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
16-நவ-201508:28:11 IST Report Abuse
R.Srinivasan இங்குள்ள எதிர்க்கட்சிகள் இந்துக்களுக்கு எதிராக இப்போது புதிதாக எழுப்பியுள்ள கோஷம்.....சகிப்புத்தன்மை.....இவ்வளவு நாள் இங்கு அனைத்தும் சகிப்புத் தன்மையுடன்தான் நடந்ததா?.....இங்கு சகிப்புத் தன்மை இல்லாமல் இருந்தால் இவர்களெல்லாம் இப்படி வாய் கிழிய பேசிக்கொண்டு இருக்க முடியுமா?.....
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
16-நவ-201508:21:48 IST Report Abuse
Girija சும்மாவது இந்த ரகுராம் ராஜன் கொளுத்தி போட்டான்ன்யா சகிப்புதன்மை பற்றி காரணமில்லாமல், இப்போ எல்ல அரசியல்வாதிகளும் மகா சகிப்புத்தன்மை கொண்ட இந்திய பொது மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி தினமும் பாடம் எடுக்கிறார்கள். இதற்க்கு ஒரு விழா வேறு சகிப்புத்தன்மை நாள் என்று, ஏட்டு சுரைக்காய் கவைக்கு உதவாது எனபது போல, இந்த ரகுராம் ராஜனால் குடியிருப்பு கட்டுமான தொழில் நசித்துவருகிறது, வீடு கடன் வட்டி திடிரென்று உயர்ந்ததால் ஏற்கனவே கடன் பெற்றவர்கள் தவணை கட்ட முடியாமல் வீதிக்கு வந்துவிட்டனர், சென்னையில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் வீடுகள் வாங்க ஆளில்லாமலும் சுமார் பத்து லட்சம் புதிய குடி இருப்புகள் வங்கி கடனில் முழ்கி ஏலத்தில் உள்ளது இதை தினமும் செய்திதாள்களில் காணலாம்.வீடு கட்டி அவஸ்தைபடுவதைவிட வாடகை வீட்டில் வசிப்பது லாபகரமானது என்று உள்ளது இதனால் மக்கள் சேமிப்பு பற்றி அக்கறையில்லாமல் பணத்தை செலவழிக்கின்றனர், காணும் இடம் எல்லாம் ஷாப்பிங் மால்கள், துரித உணவகம் என்று முளைத்து உள்ளது. உறுதியாக திரும்பவரும் வீட்டுகடனுக்கு 7% மேல் வட்டி விதிக்கக்கூடாது என்ற சாதாரண பொருளாதாரம் கூட ரகுராம் ராஜனுக்கு தெரியவில்லை, தங்கம் ஏன் லாக்கரில் முடங்கி கிடக்கிறது? இந்த வீட்டு கடன் விவகரதினால் தான்? வட்டிவிகிதம் குறைவாக இருந்தால் வீடு கட்ட மக்கள் தாங்கள் முடக்கி வைத்திருக்கும் தங்கத்தை தாமாகவே மாற்றி வீடு கட்ட முதலீடு செய்வர், நாட்டில் வர்த்தகம் அதிகரிக்கும் மக்களிடையே பணபுழக்கம் அதிகரிக்கும், இதை ரகுராம் ராஜனுக்கு எந்த அரிஸ்டாட்டில் வந்து சொல்லணும்?
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
16-நவ-201508:08:09 IST Report Abuse
Cheenu Meenu “மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பி, இப்ப அப்படி உண்டு என்றால், இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை விட்டு வைக்கலாமோ ??
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
16-நவ-201507:42:18 IST Report Abuse
K.Sugavanam மதவாத,மாட்டுக்கறி அரசியலை விடுத்து,அனைத்து மதங்களும் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் விட்டுக்கொடுத்து மனித நேயத்துடன் பழக உலக சகிப்புதினமான இன்று உறுதி மொழி எடுப்போம்..
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
20-நவ-201508:17:29 IST Report Abuse
ashakவேதம் காலம் வரை புத்த காலம் வரை பசு மாமிசம் சாப்பிட்ட ஹிந்துக்களின் நோக்கம் என்ன?...
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
20-நவ-201508:18:40 IST Report Abuse
ashakதன நாவினாலும் கரத்தாலும் மற்றவரை துன்புறுத்தாதவனே உண்மையான முஸ்லிம் - நபி மொழி...
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
20-நவ-201508:19:04 IST Report Abuse
ashakதன் நாவினாலும் கரத்தாலும் மற்றவரை துன்புறுத்தாதவனே உண்மையான முஸ்லிம் - நபி மொழி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை