அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சோழர் கால சிலை பறிமுதல்| Dinamalar

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சோழர் கால சிலை பறிமுதல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நியூயார்க்: தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட, 1,000 ஆண்டு பழமையான சோழர் காலத்து வெண்கலச் சிலையை, அமெரிக்க அரசு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.இந்தியாவை சேர்ந்த பிரபல சிலை கடத்தல்காரன் சுபாஷ் கபூர். இவன், தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, பழமை வாய்ந்த, அரிய சிலைகளை கடத்தி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில், அதிக விலைக்கு விற்று வந்தான். இதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாயை, அவன் சேர்த்துள்ளான்.அமெரிக்காவில், இண்டியானா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், சோழர் காலத்தை சேர்ந்த, சிவன் - பார்வதி சிலை இருந்தது. வெண்கலத்தாலான, 1,000 ஆண்டு பழமையான இச்சிலை, தமிழகத்தை சேர்ந்த ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்கத்துறையை சேர்ந்த, உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை பிரிவுக்கு, சோழர் கால சிலையை, அருங்காட்சியகம் ஒப்படைத்துள்ளது. 2004ல், தமிழகத்தில் இருந்து சிலை கடத்தப்பட்டதும், உண்மையை மறைத்து, போலி ஆவணங்களை காட்டி, அருங்காட்சியகத்துக்கு சுபாஷ் கபூர் விற்றதும், விசாரைணயில் தெரிய வந்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthilnathan - ramanathapuram,இந்தியா
19-நவ-201501:20:22 IST Report Abuse
senthilnathan இது பறிமுதல் போல தெரியவில்லையே மாற்றி வைப்பது போல உள்ளதே
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
19-நவ-201500:09:04 IST Report Abuse
Murugan அந்த சிலை நமது நாட்டிற்கு வந்துவிட்டதா? அதுதான் முக்கியம்.இதுமாதிரி திருடர்களை எல்லாம் விட்டு விடுவார்கள். எங்களை மாதிரி உப்பு, புளி எடுத்து செல்பவர்களைதான் துருவி, துருவி கஸ்டமசில் பார்ப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
18-நவ-201523:45:00 IST Report Abuse
metturaan அப்படியே நிறைய நம்ம ஆளுங்களும் ( செட்டில் ஆணவங்களையும் சேத்து ) மீட்டு வாங்க ... அடுத்த நாட்ட வளமாக்க போனவங்க நம்ம நாட்டையும் வளமாக்கட்டும் ...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-நவ-201522:49:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி 2001 முதல் 2006 வரை ஜெயலலிதாவின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்தது என்ற புள்ளி விவரத்தையும் நாம் சேர்க்க வேண்டும். அந்த காலகட்டத்தில் அம்மையாரின் பதவி போய் பன்னீரும், அதற்கு பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வரானது என்பதையும் அறிய வேண்டும்.. கமிஷன் கொடுத்தால் மெட்ராஸ் மியூசியத்தையும், கபாலீஸ்வரர் கோவிலையும் கூட கபூரிடம் விற்றிருப்பார் இந்த அம்மையார்.. நம்ம நல்ல நேரம் அவர் அதையெல்லாம் கேக்கல்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.