India must learn lesson from France | பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் அடித்தது 'லாடம்': இந்தியாவுக்கு பாடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் அடித்தது 'லாடம்': இந்தியாவுக்கு பாடம்

Added : நவ 22, 2015 | கருத்துகள் (255)
Advertisement

புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது.இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த ஒத்துழைப்பு தான்.


சர்ச்சையே இல்லை:

பயங்கரவாதிகள் பந்தாடப்பட்டபோது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. 'மனித உரிமை மீறல்' என யாரும் கத்தவில்லை. வீதிக்கு வந்து போராடவில்லை.இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன்பிறந்தவர்களையோ தேடிப்பித்து, 'தன் மகன் யோக்கிய சிகாமணி' என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளிபரப்பவில்லை.எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தி போடவில்லை.


இந்தியாவில் நடப்பது என்ன:

ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர்.கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க்கொண்டே இருக்கும்.ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது.அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்யும்.


பொறுப்பில்லா மீடியாக்கள்:

அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல். டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும். தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. 'பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலையில்லாத நான்கைந்து பேரை தேடிப்பிடித்து, இரவுகளில் விவாதம் நடத்தும்.மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இது தான் நடந்தது.ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது. இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (255)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - trichy,இந்தியா
25-நவ-201502:46:54 IST Report Abuse
sankar இனிமே ஸ்காட்லான்ட் யார்ர்டுக்கு அப்புறம் தமிழ் நாடு போலீஸ் பெஸ்ட் என்பதற்கு பதில் பிரான்ஸ் போலீஸ் க்கு அப்புறம் தமிழ்நாடுதான் என்று சினிமாவில் சொல்லிட்டா போச்சு
Rate this:
Share this comment
Cancel
J. Ramasubramanian - Salem,இந்தியா
24-நவ-201509:01:43 IST Report Abuse
J. Ramasubramanian இந்தச் செய்தியை படித்தவுடன் என் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படுத்தியது போலிருந்தது. நன்றி தினமலர்.
Rate this:
Share this comment
Cancel
மணி - COIMBATORE,இந்தியா
24-நவ-201508:37:41 IST Report Abuse
மணி நன்றி தினமலரே... உனக்கு ஆயிரம் நன்றிகள். நீ ஒரு முதுகெலும்பு உள்ள,- துணிச்சலான,-நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு நாளிதழ் என்பதை உணர்த்த இந்த ஒரு செய்தியே போதும்.உண்மைகள் அத்தனையையும் புட்டு புட்டு வைத்திருக்கிறாய்.பாரத திரு நாட்டின் மீது பற்று கொண்ட அத்தனை பெரும் நீ சொல்லியிருப்பதில் உடன்படுவார்கள். தினமலருக்கு கோடி வணக்கங்கள் ... பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் அடித்தது 'லாடம்': இந்தியாவுக்கு பாடம். பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது. இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த ஒத்துழைப்பு தான். பயங்கரவாதிகள் பந்தாடப்பட்டபோது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. 'மனித உரிமை மீறல்' என யாரும் கத்தவில்லை. வீதிக்கு வந்து போராடவில்லை. இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன்பிறந்தவர்களையோ தேடிப்பித்து, 'தன் மகன் யோக்கிய சிகாமணி' என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளிபரப்பவில்லை. எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தி போடவில்லை... இந்தியாவில் நடப்பது என்ன: ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர். கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது. அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளிதுமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்யும். பொறுப்பில்லா மீடியாக்கள்: அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல். டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும். தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. 'பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலையில்லாத நான்கைந்து பேரை தேடிப்பிடித்து, இரவுகளில் விவாதம் நடத்தும். மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இது தான் நடந்தது. ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது. இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். - மணி, கோவை
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
23-நவ-201523:35:45 IST Report Abuse
Murugan உண்மைதான் நண்பர்களே, இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அரசியல் வாதிகளின் சுயநல போக்கே காரணம். நாட்டின் தீவிரவாத பிரச்சனைக்கு அனைத்து கட்சிகளும் சேர்ந்து போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா
23-நவ-201520:33:14 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் பெயருக்கு ஏற்றார்போல் தினமலர் "உண்மையின் உரைகல்" என்பதை இந்த பதிவின் மூலம் நிரூபித்துள்ளது .... வாழ்த்துக்கள் ..... ஹிந்துக்களே ஒன்றிணைவோம் போலி மதசார்பின்மை கட்சிகளையும் , மீடியாக்களையும் புறக்கணிப்போம் ....
Rate this:
Share this comment
Jai - Delhi,இந்தியா
23-நவ-201521:06:03 IST Report Abuse
Jaiஇந்தியாவை தான் இந்து நாடு என்று சொல்ல முடியும். உலகத்தில் இந்துக்களுக்கு என்று இருப்பது இந்தியா மட்டும் தான்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Varadhaiyah - PUDHUCHERRY,இந்தியா
23-நவ-201519:40:54 IST Report Abuse
Srinivasan Varadhaiyah இங்கு சிறுபான்மை வோட்டு என்று அலைகிறார்களே யார் செத்தால் என்ன ? யார் வாழ்ந்தால் என்ன ? இந்த நாடு பாடம் படிப்பதாக தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
SanSar - chennai,இந்தியா
23-நவ-201519:37:01 IST Report Abuse
SanSar சபாஷ் சரியான கருத்து வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களும்தான். பரபரப்பை எதிர்பார்க்கும் மக்கள் உதவ முன்வருவதில்லை. பொறுப்பு எல்லோருக்கும் பொதுவானதே..............
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
23-நவ-201518:22:37 IST Report Abuse
Sham அற்புதம்... தினமலர்.... நம் தேசத்திலிருக்கும் 99% மக்களின் மனதிலிருக்கும் ஆதங்கத்தைக் கட்டுரையக்கிய எங்கள் தினமலருக்கு ஆயிரம்கோடி நன்றிகள்.... நான் தேசப்பற்றுமிக்க தினமலர் வாசகன் என்பதை தலை நிமிர்ந்து சொல்வேன்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-நவ-201518:11:59 IST Report Abuse
வெகுளி மனித உரிமை, மாடு எருமைன்னு சொல்லிட்டு திரியவரங்களுக்கு முதல்ல லாடம் கட்டனும். வெளிநாட்டு பணவரவை கண்காணிக்கணும். மத்ததெல்லாம் தானா சரியாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை