வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிய... பாலைவனமாக மாறிய "மலட்டாறு'| Dinamalar

தமிழ்நாடு

வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிய... பாலைவனமாக மாறிய "மலட்டாறு'

Added : நவ 26, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விழுப்புரம்: மலட்டாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் கன மழை பெய்தும், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. பல நூறு ஏக்கர் பரப்பில் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விழுப்புரம் பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்த ஆறுகள், அணைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த ஆற்றின் துணை ஆறான மலட்டாற்றில் தண்ணீர் வராததால், இதை நம்பியுள்ள ஆனாங்கூர், பில்லூர், குச்சிப்பாளையம், அரசமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மலட்டாற்றில் உள்ள தண்ணீரை நம்பி, இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.கன மழை பெய்தும், மலட்டாறு செல்லும் வழியில் பலர் ஆக்கிரமித்து, பயிர் சாகுபடி செய்துள்ளதால், தண்ணீர் தடையின்றி ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மலட்டாறு, தற்போது வறண்ட பூமியாகவே, தண்ணீரின்றி பாலைவனம்போல் மாறிவிட்டது.இந்நிலையில் ஆனங்கூர் ஏரி நிரம்பி வெளியேறி, பானாம்பட்டு- ஆனாங்கூர் சாலையின் நடுவே தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. அங்கு சாகுபடி செய்துள்ள பல ஏக்கர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மக்கள் தண்ணீரை திருப்பி விடுவதற்காக தார் சாலையின் நடுபகுதியை உடைத்து, நீரை வேறு வழியாக மாற்றும் பணியை செய்துள்ளனர். இதனால் தண்ணீர் விவசாய நிலங்களின் ஓரமாக பயிர்களுக்கு பாதிப்பின்றி செல்கிறது.இருந்த போதிலும் ஆனாங்கூர் தரைபாலத்தில், ஏரியிலிருந்து வெளியேறிய மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் கடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். பில்லூர், ஆனாங்கூர், பானாம்பட்டு உள்ளிட்ட பகுதி மக்கள் வாகனங்களை ஓட்டி செல்லவும், விவசாய பயிர்களை சுமந்து செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் தண்ணீரை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
கிராமங்களில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் தேங்கியுள்ள மழைநீரை விவசாய நிலங்களுக்கு திருப்பி விடுவது மட்டுமின்றி, மலட்டாற்றில் தண்ணீர் வராமல் இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
26-நவ-201519:47:41 IST Report Abuse
Mohan Sundarrajarao அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதை பற்றியும் அக்கறை கிடையாது. தங்களுடைய பாக்கெட் நிரம்பினால் போதும். மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். எப்போது வரும் கல்கி அவதாரம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X