AAP's Lokpal 'mahajokepal', Bhushan tears into Kejriwal | 'லோக்பால் இல்லை; வெறும் ஜோக்பால்': பிரசாந்த் பூஷன் கிண்டல்| Dinamalar

'லோக்பால் இல்லை; வெறும் ஜோக்பால்': பிரசாந்த் பூஷன் கிண்டல்

Added : நவ 28, 2015 | கருத்துகள் (14)
Advertisement
'லோக்பால் இல்லை; வெறும் ஜோக்பால்': பிரசாந்த் பூஷன் கிண்டல்

புதுடில்லி:''டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்குப் பதிலாக, 'ஜோக்பால்' மசோதாவை உருவாக்கியுள்ளார்,'' என, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டலடித்துள்ளார்.
ரகசியம் காக்கின்றனர்:டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில், லோக்பால் மசோதாவை மாநில அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதா பற்றிய விவரங்கள், இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் கூறியதாவது:டில்லி, ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, 'ஜன் லோக்பால்' மசோதாவில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. தற்போது, கெஜ்ரிவால் அரசு தயாரித்துள்ள மசோதாவில், முன்னர் கூறப்பட்டவற்றில், பல அம்சங்கள் இடம் பெறவில்லை. அந்த மசோதாவையே நீர்த்துப் போக வைக்கும் விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அதனால் தான், இந்த மசோதா பற்றிய விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்காமல் ரகசியம் காக்கின்றனர்; இதில், வெளிப்படைத் தன்மை இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அவர்களை விசாரிப்பதற்கான கடுமையான விதிமுறைகள் எதுவும், இந்த மசோதாவில் இடம் பெறவில்லை.
மிக மோசமானது : தன்னிடம் யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே, மசோதாவில், நீர்த்துப் போகும்படியான விஷயங்களை, கெஜ்ரிவால் இடம்பெறச் செய்துள்ளார். முந்தைய, காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மசோதாவை விட, தற்போதைய மசோதா மிக மோசமானது. இது, லோக்பால் மசோதா இல்லை; மகா ஜோக்பால் மசோதா. இந்திய அரசியல் வரலாற்றில், வேறு எந்த அரசியல் தலைவரும், கெஜ்ரிவாலைப் போன்ற மோசடியை செய்தது இல்லை. இதற்கு பொறுப்பேற்று, தன் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ராம்லீலா மைதானத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து என்ன கூறப் பட்டதோ, அதில் உள்ள அனைத்து அம்சங்களும், தற்போதைய மசோதாவில் இடம் பெற்றுள்ளன. ஒரு கமா, முற்றுப் புள்ளியை கூட மாற்றவில்லை. குமார் விஸ்வாஸ்ஆம் ஆத்மி நிர்வாகி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
29-நவ-201518:28:21 IST Report Abuse
jay எதுக்கு எடுத்தாலும் கூத்து போடும் கேரிஜ்வால் இப்போ எங்கே காணோம்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-நவ-201517:51:03 IST Report Abuse
Endrum Indian ஒருக்காலும் பதவியில் உள்ள கூமுட்டைகள் தங்களை கட்டுப்படுத்தும் லோக்பால் பில் வரைமுறை செய்யமாட்டார்கள், அதுவும் இந்த கேஜரி எல்லாம் ஒரு போர்ஜெரி. இது நமது ஜோக்பால் இந்தியன் பீனல் கோட் படித்தால் தெரியும். அதில் இருக்கும் சட்ட வரைமுறை குற்றவாளி எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்று ஆராய்ந்து எழுதப்பட்டது போல் இருக்கும். இதை செய்தது யார், வழிமொழிந்தது யார், இதே கூமுட்டை அரசியல்வாதிகள் தானே. இது வெறும் மக்கள் ஏமாற்று "Dhokepal"dhoke- என்றால் இந்தியில் ஏமாற்று என்று அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
MAHA - Trichy,இந்தியா
29-நவ-201517:29:08 IST Report Abuse
MAHA MR . Kejrival please consider this comments. Try to avoid your mistakes. Ezhil. (T.Nadu)
Rate this:
Share this comment
Cancel
Thanjai puthiyavan - Jeddah,சவுதி அரேபியா
29-நவ-201517:11:35 IST Report Abuse
Thanjai puthiyavan வருமுன்னே வம்பா? பொறுத்திருந்து பார்க்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
29-நவ-201516:50:46 IST Report Abuse
Cheran Perumal இந்த கெஜ்ரி ஒரு காமெடி பீஸ் என்று மக்கள் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
SRH - Mumbai ,இந்தியா
29-நவ-201510:17:46 IST Report Abuse
SRH போர்ஜெரின்னு நான் ஒண்ணும் சும்மா சொல்லல .எப்படி பிக் பாக்கெட் அடிக்கிறது நமக்கு தெரியவே தெரியாதோ அதைப்போலவே இவர் நாட்டை ஏமாற்றுவதை மக்கள் உணரபோவதில்லை .பிகாரிகளை விட தலைநகர் வாசிகள் அடிமுட்டாள்கள் என்றால் அது மிகையாகது .
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201510:10:37 IST Report Abuse
Kasimani Baskaran கேஜ்ரிவால் லாலுவின் யோசனையை பின்பற்றியிருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
29-நவ-201509:15:52 IST Report Abuse
Agni Shiva கோல்மால் என்ற பெயருக்கு பொருத்தமான இந்த வால், புதியதாக கொண்டு வர இருக்கும் ஜோக்பால் நிச்சயமாக நடைமுறைக்கு வராது. ஏன் என்றால் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற எந்த மாநில லோக்பாலிலும் மத்திய அரசின் அதிகாரிகளோ அல்லது அமைச்சர்களையோ உள்படுத்தவில்லை. (அது மத்திய அரசில் நிறைவேற்றுபட்டிருக்கின்ற மத்திய லோக்பால்லில் இருக்கிறது). ஆனால் இந்த கோல்மால் மத்திய அரசு இந்த ஜோக்பால்லிற்கு ஒப்புதல் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் இந்த கோல்மால் ஜோக்பாலில் சேர்த்திருக்கிறார். இன்னொரு திருட்டுத்தனம் என்னவென்றால் டெல்லி முதலமைச்சர் இந்த ஜோக்பாலில் வரவில்லை. அதை பற்றி எதுவுமே கூறப்படவில்லை. ஆக அடுத்த நாடகத்திற்கு தயாராகிவிட்டார். மட்டுமின்றி புகார் நிருபிக்கப்படவில்லை என்றால் புகார் கொடுத்தவர் ஒரு ஆண்டு சிறை தண்டனையாம். அந்த தண்டனைக்கு எதிராக எந்த நீதிமன்றமும் குறைக்க முடியாதாம். நினைத்து பாருங்கள், ஒன்றேமுக்கால் ஆண்டிற்கு முன்னால் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுத்தவர்கள் மீது வீசி ( அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்.)கூறி விளம்பரம் தேடி கொண்ட இந்த சந்தர்ப்பவாதி, தற்போது குற்றச்சாட்டு கூறினால் ஒரு ஆண்டு தண்டனையாம்.மேலும் பொதுமக்கள் பார்வைக்கு எதையும் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்கும் இந்த ஜோக்பால் இந்த கோல்மால்லின் கட்டுமர பரிணாமத்தை காட்டுகிறது. ஆயிரம் லல்லுவையையே முழுங்கி ஏப்பம் விடும் இந்த சர்ந்தப்பவாதியை இன்னியுமா நம்புகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
29-நவ-201508:09:20 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் And the Oscar award for best actor goes to துடைப்ப கட்டை....
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
29-நவ-201508:03:39 IST Report Abuse
N.Purushothaman பேசாமல் நோ பால்ன்னு சொல்லிடலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை