நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு கைகழுவுகிறதா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு கைகழுவுகிறதா

Added : டிச 01, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்: சாயல்குடி, கடலாடி பகுதியில் நிலத்தடிநீர் உவர்ப்பாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். இதையடுத்து 1999 ல் நரிப்பையூரில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ரூ.52 கோடியில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகாவில் 294 கிராமங்களுக்கு தினமும் 38 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த திட்டத்தை 1999-2003 வரை பெல் நிறுவனம் செயல்படுத்தியது. 2003-04 வரை குடிநீர் வடிகால் வாரியம் நேரடியாக செயல் படுத்தியது. அதன்பின் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது. இயந்திரங் களில் பழுது, வினியோகத்தில் குளறுபடி போன்ற காரணங்களால் குடிநீர் உற்பத்தி 13 லட்சம் லிட்டராக குறைந்தது. இதனால் 115 கிராமங்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்க ப்பட்டது.
2013 ஜனவரியில் மறு "டெண்டர்' விடாமல் திட்டம் முடங்கியது. இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் பல கோடி ரூபாயிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வீணாகி வருகின்றன. இதனை மீண்டும் செயல்படுத்தாமல், சாயல்குடி அருகே குதிரைமொழியில் புதிதாக மற்றொரு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் நரிப்பையூர் திட்டத்தை அரசு கைவிடும் நிலை உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X