In Chennai, 50 million go to the flood damage covered several areas | சென்னையில் மேலும் பல பகுதிகளை சூழ்ந்தது வெள்ளம் 50 லட்சம் பேர் பாதிப்பு : தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்பு படை திணறல் Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையில், மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை சற்று குறைந்தாலும், தண்ணீர் வெளியேற வழியில்லாததால் மீட்புப் படை வீரர்கள் திணறி வருகின்றனர்.


தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வடகிழக்கு பருவ மழை, இடைவிடாது கொட்டித் தீர்த்தது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், நிலைமை மிக மோசமானது. சென்னையில், பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், வண்டலுார், தாம்பரம், அண்ணா நகர், கிண்டி, சைதாபேட்டை, தி.நகர் என, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. முதல் மாடி வரை தண்ணீர் புகுந்து விட்டதால், அடுக்குமாடி வீடுகளில் வசிப்போரும், மொட்டை மாடிகளில், உதவிக்கு யாராவது வர மாட்டார்களா என, தவம் கிடக்கின்றனர்.

ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளதால், மணலி, திருவொற்றியூர், ஆவடி, திரு.வி.க. நகர், மாதவரம் என, வெள்ளம் புகுந்த பகுதிகளின் எண்ணிக்கை, நீண்டபடி உள்ளது. எழும்பூர் புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் கூட தப்பவில்லை. சென்னையில், 90 சதவீத சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. இதனால், மக்கள் இடம் பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவல் படை, மாநில மீட்புப்படை, ராணுவம், கடற்படை என, மீட்புப் படைகள் குவிந்தாலும், நேற்று முன்தினம், மழை விடாததால், மீட்புப் பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை.

50 லட்சம் பேர் பாதிப்பு:

சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, 12 லட்சம் வீடுகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையில், 25 லட்சம் பேரும், அதைச் சார்ந்த புறநகர் பகுதிகளில், 25 லட்சம் பேர் என, 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில், 10 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து, மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேற்று மழை ஓரளவு விட்டதும், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், வெள்ளம் வெளியேற எந்த வழியும் இல்லாததால்,

பணிகளை துரித கதியில் செய்ய முடியாமல், மீட்புப் படையினரும் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையில், 30 குழுவினர், ஐந்து இன்ஜினியர்கள் கொண்ட குழு, தாம்பரம், முடிச்சூர், கொரட்டூர், பல்லாவரம், திருநீர்மலை, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், தி.நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று, 5,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னை விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. ரயில், பஸ் போக்குவரத்தும் முடங்கி விட்டது. மின் இணைப்பு துண்டிப்பால், மொபைல் போன் டவர்களும் செயல் இழந்ததால், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இது, மீட்பு பணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

இயல்பு நிலை எப்போது? :

தற்போது மழை விட்டுள்ள நிலையில், ஏரிகளில் நீர் திறப்பு குறைந்துள்ளது. மழை பெய்யாவிடில், மீட்புப்பணிகள் வேகமாக நடக்கும். ஒரு வாரம், பத்து நாட்களில் சென்னை இயல்பு நிலைக்கு மாறிவிடும். ஆனால், வானிலை ஆய்வு மையம், 'இன்னும் மழை பெய்யும்' என, எச்சரித்துள்ளதால், வெகு சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என, பேரிடர் நிவாரண மைய அதிகாரிகள் வெளிப்படையாக கூறினர்.

அதிகம் பாதித்த பகுதிகள்:


தென்சென்னை: மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ராமாபுரம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், எம்.ஜி.ஆர்., நகர், ஜாபர்கான்பேட்டை, நந்தனம், தி.நகர், வேளச்சேரி, அடையாறு, பெருங்குடி, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், மயிலாப்பூர்
மத்திய சென்னை: கொளத்துார், பெரம்பூர், கொரட்டூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எழும்பூர் புதுபேட்டை, மயிலாப்பூர்
வடசென்னை: திருவொற்றியூர், எண்ணுார், மணலி, புழல், சடையங்குப்பம், செங்குன்றம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், வியாசர்பாடி, ராயபுரம்.
புறநகர் பகுதிகள்: மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், மேடவாக்கம், பெரும்பாக்கம், அனகாபுத்துார், பொழிச்சலுார், கவுல்பஜார், குன்றத்துார், திருமுடிவாக்கம், பழைய பெருங்களத்துார், மணிமங்கலம் பி.டி.சி., குவாட்டர்ஸ், மண்ணிவாக்கம்.

ஆவின் பண்ணை மூடல்:

வெள்ளம் புகுந்ததால், அம்பத்துார் பால் பண்ணை மூடப்பட்டுள்ளது.ஊழியர் வரத்து குறைவால், சோழிங்கநல்லுாரிலும் உற்பத்தி குறைந்து, ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால், சென்னை மிதக்கிறது. இதன் தாக்கம் அம்பத்துாரையும் விட்டு வைக்கவில்லை.

அம்பத்துாரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்ததால், பால் உற்பத்தி, இரண்டு நாட்களாக முடங்கியுள்ளது. இங்கிருந்து தினமும், 3.5 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படும்.இதுதவிர, வெள்ள பாதிப்பால் ஊழியர் வராததால், சோழிங்கநல்லுார் ஆவின் பால் பண்ணையிலும், 90 சதவீத பணிகள் முடங்கின. இங்கு தினமும், 4.5 லட்சம் லிட்டர் பால் பதனிடப்பட்டு, வினியோகம் செய்யப்படும்.

இரண்டு நிறுவனங்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டதால், நேற்று சென்னையில், பால் வினியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. வெள்ளம் பாதிக்காத பகுதிகளில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டுமே, ஆவின் பால் வினியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'பால் பண்ணைகள் செயல்பாடு முடங்கியது உண்மைதான். தினமும், 11.5 லட்சம் லிட்டர் பால் வினியோகம் நடக்கும். நேற்று, 6 லட்சம் லிட்டர் பால் மட்டுமே வினியோகிக்க முடிந்தது. தென் சென்னை பகுதிகளில் முற்றிலும் வினியோகம் முடங்கியது. இன்று, ஓரளவு பால் வினியோகத்தை சீர்படுத்த முயற்சித்து வருகிறோம்' என்றனர்.

தனியார் பாலும் பாதிப்பு:

சென்னையில், ஆவின் நிறுவனம், 11.5 லட்சம் லிட்டர்; தனியார் பால் நிறுவனங்கள், 13.5 லட்சம் லிட்டர் என, 25 லட்சம் லிட்டர் பால் வினியோகம் நடக்கும். வெள்ள நீர் தேக்கம், போக்குவரத்து முடக்கத்தால், தனியார் பால் விற்பனை, 7 லட்சம் லிட்டர் அளவுக்கு மட்டுமே நடந்தது. ஒரே நாளில், 12 லட்சம் லிட்டர் பால் வினியோகம் குறைந்துள்ளது என, பால் முகவர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஆவின் பால், தனியார் பால் கிடைக்காமல் பல இடங்களிலும் மக்கள்
திண்டாடினர்.

வெளியேற்றம்:

கந்தன்சாவடி முதல் சோழிங்கநல்லுார் வரையில் உள்ள, சாப்ட்வேர் நிறுவனங்களின் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், சோழிங்கநல்லுார், பெருங்குடி, துரைப்பாக்கம்,கந்தன் சாவடி பகுதிகளில் உள்ள விடுதிகளில் வசிக்கின்றனர். இதில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, கோயம்பேடு, சென்ட்ரல் என, புறப்பட்டு சென்றனர். விடுதிகள் அனைத்தும், 'ஹவுஸ்புல்' ஆகின.

- நமது நிருபர் குழு -

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணாச்சலம் - பட்டுக்கோட்டை,இந்தியா
05-டிச-201506:42:54 IST Report Abuse

அருணாச்சலம்சென்னை மாநகராட்சியை முதலில் சுருக்க வேண்டும் , திருத்தணி முதல் திண்டிவனம் வரை ,மாமல்லபுரம் முதல் அரக்கோணம் வரை இப்படி ஒரு நகரம் மிக பெரியது என்று சொல்லிகொள்வதில் எந்த பயனும் இல்லை .ஏன் பெங்களூரை எடுத்துக்கொள்ளுங்கள் சிறிய மாநகராட்சி அதையே மூன்றாக பிரிக்க போராங்களாம் ,ஆதலால் சென்னை மாநகராட்சியை பிரித்து உள் கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்தால் வரும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும் .

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
05-டிச-201506:29:20 IST Report Abuse

Ambika. Kஇடற்கையை அழித்தால் அது நம்மை அழித்துவிடும். அதற்க்கு உதாரணம் இது . இன்றும் 500 ருபாய் சதுர அடி தாம்பரத்திற்கு மிக அருகே என்றதும் ஓடுகிறோம். இதற்க்கு எந்த கட்சியின் டிவி சன்னலும் விதி விலக்கு அல்ல . கூடவே ஒரு சினிமா நடிகர் / கை வேறு இந்த இடத்தை விட்டால் நமக்கு வேறு கதியே இல்லை என்று பிதற்றல் . நம்மில் எவ்வளவு பேர் அந்த இடம் வீடு கட்ட லாயக்க அது நீர் நிலையா அல்லது ஆறு குளமா என்று பார்கிறோம எதுவும் இல்லை.

Rate this:
selva - karaikudi,இந்தியா
05-டிச-201506:28:27 IST Report Abuse

selvaமுதலில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு யாரை பற்றியும் விவாதிக்கலாம். தயவு செய்து இயற்கையோடு vilaiyadatheergal. மணல் அள்ளுவதை நிறுத்துங்கள். குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். நம்மை நாமெய் காப்பற்றி கொள்ள வேண்டும். சென்னைக்கு Singapore மாதிரி கழிவு நீர் சிஸ்டம் vendum.

Rate this:
N G Aravind G Aravind - Lagos,நைஜீரியா
05-டிச-201506:27:10 IST Report Abuse

N G Aravind G Aravindமுதல்வர் தண்ணீரில் குதித்து நீந்தி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவீர்களா? 60 வயதில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான உடல் நிலை இருப்பதில்லை. யதார்த்தம், ஆத்திரம் இரண்டுக்கும் வேறு அளவுகோல் உள்ளது. பேச வேண்டும் என்று பேச கூடாது. வாட்சப், முக நூல் போன்ற வலைதளங்களில் தவறான தகவல் பகிர்வது, அந்த நடிகன் குடுக்க வில்லை, இந்த அரசியல் வாதி வர வில்லை, உதவி கேட்டால் உபத்திரவ வ்யாக்யானங்கள் பேசுவது என்று எப்போதுமே எதிர் மறையான எண்ணங்கள் கொண்ட எவருக்கும் கடுகு அளவு கவலையும் கடல் அளவு தான். ஊரையே புரட்டி போட்ட மழையை எதிர்கொண்டு தன்னார்வ நண்பர்கள் செய்யும் நற்பணிகளை ஆதரிப்போம். அவர்களுக்கு உதவுவோம். அவரவர் தங்கள் குடியிருப்பு பகுதியில் அரசு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு உதவுவோம். உடன் இருப்போம். இது போன்ற நெகடிவ் எண்ணங்களை முறியடித்து ஒருங்கிணைந்து செயல் படுவோம். மனிதம் தழைக்க முடிந்த வரை உதவுவோம்.

Rate this:
Paddy Padmanabhan - Chennai,இந்தியா
05-டிச-201506:14:59 IST Report Abuse

Paddy Padmanabhanஅமைச்சர்களும், தொண்டர்களும் மக்களோடு திண்டு சேவை செய்ய வெண்டிய நேரம் இது.அதிமுக செய்த மிகப்பரிய தவறு அம்மாவை மாத்திரம் நம்பீருப்பது. அம்மாவும் மற்றவர்களை முன்னிறுத்தி உதவிபுரிந்து இருக்கலாம்.

Rate this:
malar - chennai,இந்தியா
05-டிச-201506:13:02 IST Report Abuse

malarஇன்று மழை நின்று விட்டது என்று கேள்விப்படுகிறேன். கடவுளுக்கு நன்றி. மழை பற்றின வானிலை அறிக்கை பற்றி அநேகம் கருத்துகள் படித்தேன். நவின சாதனங்களை கொண்டு மிகவும் துல்லியமாக வானிலை யை அரிக்கைஇடலாம். ஆனால இந்த மாதிரியான நிலைமைக்கு அதுஎ ந்த அளவிற்கு பயன் படுமே ன்று யோசிக்க வேண்டும். எதோ கொஞ்சம் மழை வெயில் என்றால் சரி நம் நிகழ்சிகளை அதற்கு ஏற்றார்போல மாற்றி அமைத்து கொள்ளலாம் . இது அப்படி இல்லை. ஒரு வேலை வானிலை அறிக்கை பயங்கர மழை வரும் வெள்ளம் வரும் மூழ்கிவிடும் என்றே சொன்னார் என்று வைத்து கொள்வோம் .. என்ன செய்ய போகிறோம்? வீட்டை ஒழித்து கொண்ண்டு எங்கே போக போகிறோம்?உணவு பொருட்கள் ஸ்டாக் செய்து எங்கே வைக்கபோகிறோம்? படகுளை தயாராக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிறுத்த போகிறோமா? தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களை உணவு பொருட்களாலும் பால் பாக்கெட் களாலும் நிரப்பி வைக்கபோகிரோமா? என்னதான்செய்ய முடியும்? ஒரு நாலைந்து குடைகள் எவ்ண்டுமானால் வாங்கி வைத்து கொள்ளலாம். இது பூராபூரா இயற்கை... ஆனால் அறிக்கை வந்த பிறகு எதுவும் செய்ய முடியாது என்பது எவ்வளவு உண்மையோ சாதாரண காலங்களில் முன் யோசனையாக சிறப்பான ஏற்பாடுகள் , உள்கட்டமைப்பு செய்து வைத்து கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயமான கடமை என்பதும் அப்பட்டமான உண்மை. அந்த விஷயத்தில் தமிழ் நாடு மிக மிக மோசமாக இருந்து இருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. நாட்டிலே ஓரளவிற்குமேலே. ஜாதி இனவெறி பேதங்களும் , தனிமனித பாராயணமும், , லனஜ்ம் துரோகம், சுய நலமும். மிஞ்சினால் அதுகளிலேயே கவனம் செலுத்தினால் நாட்டின் நலனில் அக்கறை காட்ட முடியாமல் போய்விடும் . இந்த சூழ்நிலை மறுபடி வேறு ரூபத்திலும் வராமல் பாத்து காத்து கொள்ள வேண்டியது மக்கள் பொறுப்பு

Rate this:
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
05-டிச-201502:05:38 IST Report Abuse

Naz Malickஉலகத்தில் உள்ள எல்லா நகரங்களிலும் ஆறுகள் ஓடுகின்றன . infact ஆறு இருப்பதால் தான் அங்கு நகரமே உருவாகிறது. ஆனால் சென்னையில் மட்டும் தான் ஆற்றுக்குள், கால்வைக்குள் , சேரியும், colony களும் உருவாகி தண்ணீர் போக்கு வரத்தை முற்றிலும் நிப்பாட்டி அசிங்கமாக வாழ்கிறார்கள். ஒரு சில ஆயிரம் வோட்டுக்காக இந்த இரு கட்சிகளும் மாறி மாறி சென்னையை ஒரு பெரிய slum city ஆக மாற்றி இருக்கிறார்கள் . Rivers and all the other waterways running in a city is a National Asset. The waterways belongs to the city and its citizens. But it is a pity that the Government is allowing a certain section of people to occupy the waterways, slums and live there for ever. The end result is the flooding, creation of Various diseases, Mass sufferings and Death.

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
05-டிச-201501:53:17 IST Report Abuse

kuppuswamykesavanபூமி அதிக வெப்பம் உண்டாகி , அதிக கடல் நீர் ஆவி ஆகி, அதிக உயர மேகம் உண்டாகி , அதிக கணம் கொண்ட மழை கொட்டுகிறது , இந்த நிலை மாற, உலக makkal எல்லோரும் , பூமிக்கு உதவி செய்யணும்.

Rate this:
GUNA - bangalore,இந்தியா
05-டிச-201501:45:02 IST Report Abuse

GUNAசென்னை மிதக்கிறது. பார்த்து பார்த்து கட்டமைத்த வெனிஸ் கூட இப்படி மிதக்காது. சாலையில் மார்பளவு தண்ணீர்,வீடுகள் மூழ்கியது,ஏடிம் இல்லை,மிண்சாரம் இல்லை,போன் இல்லை, கடை, உணவு, குடிநீர், போக்குவரத்து இல்லை. இயற்கை தனது பாடத்தை நடத்த தொடங்கியுள்ளது.அரசுக்கு 2500 கோடி நிதி. மழை நிவாரணத்திற்க்கு 2500 கோடி நிதி என கூறுவது தவறு. என்னதான் மழை அதிகம் என்றாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்த பணத்தையெல்லாம் சுருட்டி கொண்டும் இலவசம்கொடுக்க பயன்படுத்தி அடிப்படை ஆதாரமாண நீர் நிலம் குளம் குட்டை, ஏரி ,கழிவு நீர்சாக்கடையை தொலைத்த அரசியல்வாதிகள் இன்றும் பத்து கார்களில் படைசூழ மழைநீரை வேடிக்கை பாா்க்க கிளம்புகிறார்கள். மற்ற மாவட்டங்கள் நிலை இன்னும் மோசம் யாரும் கவனிப்பார் போல் இல்லை. கிடைத்த கோடிகளில், என்ன பண்ண முடியும் என இறங்கி வேலை செய்பவனுக்கு தெரியும்.ஆனால் நம் அரசு எ[எப்படி கணக்கு காமிக்கலாம் என இப்போதே புத்தி தீட்ட ஆரம்பித்து இருக்கும். சமூக வலைதலங்களில் ரஜினி கொடுக்கவில்லை அந்த நடிகன் கொடுக்கவில்லை இந்த நடிகன் கொடுக்கவில்லை என கிழித்து கொண்டிருக்கிறார்கள் இதை சொல்பவர்களில் எத்தனை பேர் என்ன கிழித்தார்கள் என்று தெரியவில்லை . பேசும் இதே ஆட்களில் பெரும்பாலானோர் என்ன உதவி செய்தார்கள் ?அல்லது பக்கத்தில் அள்ளாடுபவருக்கு பத்து ரூபாய் கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. நம்மவர்களுக்கு யாரிடம் எதை கேட்பது யாரை எங்கே வைப்பது என்று புரிவதேயில்லை.அவன்அவனது வேலையை செய்வதற்க்கு உன் வேலையை விட்டு கட்- அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து தூக்கி வைத்து கொண்டாடி இப்போது லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு கள்ளசந்தையில் வாங்குவது நம் தவறு. உண்மையில் கமல்ஹாசனின் நேற்றைய பேட்டி நியாயமான ஒன்றுதான். அவனொன்றும் அரசு இல்லை அவன் சம்பாதித்ததை கொடுக்காததை திட்டுவதும் சரியில்லை. இனியும் பாலபிஷேகம் நடந்த கொண்டேதான் இருக்கும். அவன் நடிகன் என்பது உரைக்க போவதே இல்லை. ஏரி /சாக்கடை வசதி /குளம்/நீர் இருந்தால் என நூறு அறிவுரைகள்,குற்றம்,போராட்டம்,விவாதம் என இப்போது செய்பவர்கள் யாரும் இதற்க்கு முன்பு இது விஷயமாக செய்ததில்லை அல்லது நீர் வடிந்ததும் இதைபற்றி கவலை பட போவதும் இல்லை. சாதரண மக்கள் வீடுகட்டும்போது நீர் நிலத்தடியில் சேர இடம் விட போவதில்லலை. வசதிபடைத்தவர்கள் ஏரி குளம் விட்டு வைக்காமல் , பணக்காரர்கள் மணல் மலையை கொள்ளை அடிக்காமல இருக்க மோவதும் இல்லை. அவரவர் சக்திக்கு தகுந்த படி இயற்கையை கொள்ளை அடித்துகொண்டேதான் இருப்போம். இயற்கையும் ஒரே அடியாக திருப்பி கொடுக்கும்.தனி மனிதர்களாக இயன்ற வரை இயற்கையை நோண்டி கொண்டே இருப்போம். வடக்கத்திய ஊடகம் அப்படித்தான் இதில் புதிதொண்றும் இல்லை. அவர்களை பொறுத்தமட்டில் தமிழகம் இந்தியாவில் இல்லை நம்மை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.அவர்கள் பிரச்சனை இந்திராணி வழக்கு. நமக்கிருக்கும் வேதாளம் வசுல் , தெறி தலைப்பு, இந்த வாரம் பட ரிலீஸ் இல்லை போன்ற பிரச்சனைகள் போல. பேருந்து கட்டண கொள்ளை/ ஆகார விலை கொள்ளை /அரசு மெத்தனம் போன்றவற்றின் நடுவில் இக்கட்டான நிலையில் டோல் கட்டண தடை,இளைஞர்களின் தன்னலமற்ற உதவிகள் ,.தனி மனிதர்களின் உணவு இருப்பிட உதவிகள,கர்ப்பிணி பெண்களுக்கு முன்ணுரிமை கொடுக்கும் ஆட்களும், பல்வேறு காரணங்களால் தம்மால் உதவிட முடியவில்லை எனினும் உண்மையாக வருந்தும் உள்ளங்களும் ஆறுதல். எவ்வளவு மழைபெய்து எவ்வளவு நீர் கிடைத்தாலும் இன்னும் ஐந்து மாதத்தில் மீண்டும் தண்ணீருக்கு கர்நாடகா கேரளாவிடம் பிச்சைதான் எடுப்போம்.

Rate this:
murali - Chennai,இந்தியா
05-டிச-201501:12:59 IST Report Abuse

muraliகுடிப்பது சோசியல் status aghivitadhu. lanjam vanguthu 90% makkal thavaragavey ninaipathillai. Makkal indraya arasiyaluku palagi vitargal. Thanaiyae ariyamal arasiyalvathigal , Athikarigal seyium thavaru seikirarakal. Pavam seiyum pothu atharkana thandanai nichayam. Pavam seithom thandanai anubavikirom. Oorukaka oolikatha ayyavumkum, ammavukum sandaipodamal avarar ayyavaium ammavai kapathuvathi patri yochiungal. Nllavarkal vetpalargala nirkumpothu deposit ilaka vaikirom. Athu thirutu arasiyavathikallu nalluku nall athiga balam serkirathu

Rate this:
மேலும் 69 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X