Poltical parties trouble to helpers | நிவாரண உதவி என்ற பெயரில் விளம்பரம் தேடும் கட்சிகளின் கூத்து ஆரம்பம் Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

வெள்ள நிவாரண உதவி என்ற பெயரில், விளம்பரம் தேடும் அரசியல் கட்சிகளின் கூத்து, ஆரம்பமாகி உள்ளது. உதவிப் பொருட்களில், முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டி வினியோகிக்க உத்தரவிடப்பட்டிருப்பதும்; போக்குவரத்தே இன்னும் சீராகாத நிலையில், நிவாரணப் பொருட்களை, அறிவாலயம் அனுப்பி, அங்கிருந்து வினியோகிக்க, தி.மு.க., முடிவு செய்திருப்பதும், விளம்பரம் தேடும் செயல் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டிச., 1ம் தேதியில் ஆரம்பித்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும், சென்னை நகரை தண்ணீருக்குள் மிதக்க விட்டுள்ளது. இந்த பேராபத்தில் இருந்து மக்களை மீட்டு, நிவாரண உதவிகளை அரசு ஒரு பக்கம் செய்து கொண்டிருக்க, அதையும் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நிவாரணப் பொருட்கள் வந்து குவிகின்றன. ஏராளமான தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், தங்களால் இயன்ற உணவு, உடைகள், அத்தியாவசியப் பொருட்கள், மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை ஏற்றிய வாகனங்களுடன், சென்னை மற்றும் கடலுார் மாவட்டத்தில், குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஜெ., படம் ஒட்டி...

இப்படி நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை ஆங்காங்கே மறிக்கும் ஆளுங்கட்சியினர், 'நிவாரணப் பொருட்கள் அனைத்திலும், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டித்தான் வழங்க வேண்டும்' என உத்தரவிடுகின்றனர்; தயாராக வைத்திருக்கும், ஜெயலலிதாவின் படத்தை, ஒட்டி அனுப்புகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள் ஏற்றிய லாரிகளை, பூந்தமல்லிக்கு அருகில் பெங்களூரு நெடுஞ்சாலையில் மடக்கிய, அ.தி.மு.க.,வினர், நிவாரணப் பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்டி அனுப்பியதாக, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் புகார்கூறுகின்றனர்.

அதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பொருட்களை, தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலையில் மடக்கி, பொருட்கள் மீது, ஜெயலலிதா படங்களை ஒட்டி அனுப்பிய கூத்தும் நடந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், 'நாங்கள் சொல்லும் இடங்களில்தான் நிவாரணப் பொருட்களை கொடுக்க வேண்டும்; இல்லையென்றால், நிவாரணப் பொருட்களை கொடுக்க அனுமதிக்க மாட்டோம்' என அடாவடியாக வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த செயல்களில், ஆளுங்கட்சி கவுன்சிலர்களும், அவர்களது ஆதரவாளர்களும் அதிகளவில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தங்கள் பகுதிக்கு, அவற்றை கொண்டு சென்று, அதை தாங்களே வழங்கியதாக, மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கும் முயற்சி இது என கூறப்படுகிறது. இதற்காகவே, 'வெள்ள நிவாரணப் பொருட்கள்' என எழுதி ஒட்டப்பட்ட வாகனங்களை மறிப்பதற்காக, ஆளுங்கட்சியினர் காத்திருக்கும் காட்சிகளை காண முடிவதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.



ஆங்காங்கே ஒப்படைப்பு:

ஆளுங்கட்சியினரின் வற்புறுத்தலுக்கு அடிபணியாமல், ஆங்காங்கே உள்ள மகளிர் திட்ட அலுவலர்களிடம் பொருட்களை ஒப்படைத்து சென்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஆளுங்கட்சியினர் தான் இப்படி நடந்து கொள்கின்றனர் என்றால், தி.மு.க.,வும் இதில் விளம்பரம் தேடவே முயற்சிக்கிறது. 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்க முன்வரும் கட்சியினர், அதை சென்னை, அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

ஏற்கனவேசென்னைக்கு வரும் வழிகளில், கடும் போக்குவரத்து பாதிப்பு இருக்கும் சூழலில், ஆங்காங்கே நிவாரணப் பொருட்களை, அமைதியாக வழங்கிக் கொண்டிருந்தவர்களை, குறுகிய அரசியல் லாபத்துக்காக, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் திசை திருப்பி விட்டு உள்ளன.

மற்ற கட்சிகளும் ஆலோசனை:

வெள்ள நிவாரணத்தை வைத்து, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., செய்யும் அரசியலைப் பார்த்து, மற்ற கட்சிகளும் இந்த வழியை யோசிக்கத் துவங்கி உள்ளன. இதற்கிடையில், 'பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்கள் மீது, முதல்வர் படம் ஒட்டுவது போன்ற காரியங்களில் யார் ஈடுபட்டாலும், அந்த தகவலை உடனடியாக, தலைமைக் கழக கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

பாதுகாக்க வேண்டும்:

சென்னைக்கும், கடலுாருக்கும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்கள், கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து கிடக்கின்றன. அவை போதிய பாதுகாப்பில்லாமல், கொள்ளை போகும் அவலம் உள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நிவாரணப் பொருட்களை வாங்கும் அரசு, அதை பாதுகாப்பாக மக்களிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஜெ., படம் தானே அச்சிடணும்; படமும், பசையும் கொடுங்க!'ஒரு வாய் தண்ணீருக்கு அல்லாடும் நம் மக்களுக்கு உதவத் தானே நாங்கள் முயற்சி செய்கிறோம். இதிலும் அரசியல் செய்வதா? எக்கேடு கெட்டுப் போகட்டும்... அவர்கள் விருப்பப்படியே, ஜெ., படத்தையும், அதை ஒட்ட பசையையும் எங்களிடம் கொடுக்கச் சொல்லுங்க... அதையும் ஒட்டித் தொலைக்கிறோம்' என, தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், மிகுந்த மன வேதனையுடன் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (253)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
10-டிச-201501:47:57 IST Report Abuse

Rajeshப.ம.க மற்றும் தே.மு.தி.க போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் உடனடியாக பொது நலம் கருதி கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் மூலம் நம் தமிழ் நாட்டின் சொத்து எவ்வளவு சூரையாடப்ட்டு இருக்கிறதென்ற செய்தியை சேகரித்து வெளியிட வேண்டும். இப்படி செய்தாலே அவர்கள் நினைப்பது நடக்கும் செய்வார்களா? தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் ஆட்சி நமக்கு இனியும் வேண்டாம். இன்னொன்று இலவசமும் வேண்டவே வேண்டாம். நமக்கு வேண்டியது சுத்தமான சுகாதாரமான சமூகம். குடியும் வேண்டாம் இலவசமும் வேண்டாம். 2016 ஒரு நல்ல முடிவை எடுப்போம். தி மு க மற்றும் ஆ தி மு க இன்றைய மற்றும் முன்னால் அமைச்சர்களின் சொத்துக்கள் எவ்வளவு. ஜனநாயகத்தின் நாலாவது தூணாகிய மீடியா இதை வெளியிட வேண்டும். எங்கள் யாருக்கும் இலவசம் வேண்டாம், நல்ல சுகாதாரமான காற்று மற்றும் அடிப்படை வசதி போதும் வீடும் நாடும் நன்றாக இருக்கும். ஆட்சியாளர்கள் ஒழுங்காக அவர்களின் வேலையை செய்தாலே போதும். இன்று இருக்கும் கல்விக்கனவான்களால் தான் இந்த மொத்த சேதமே உண்டாகியது. அரசு என்றைக்கு ஏரி, ஆற்று படுகையில் கல்லூரிகள் கட்ட அனுமதித்ததோ அன்றே நமக்கெல்லாம் இயற்கை இந்த விதியை எழுதிவிட்டது. கல்லூரிகளில் ஏழைகளுக்கு சீட் கொடுக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த பாழாய் போன பணத்தை வைத்துகொண்டு என்னத்த சாதிக்க போகிறார்களோ உண்மையிலேயே தெரியவில்லை. இன்னும் எவ்வளவோ குமுறல்கள் நெஞ்சில் உள்ளன ஆனால் அதை சொன்னால் அச்சில் ஏறாது முடிவாக சமுதாயத்தில் இருந்து திருடிகிற பாவப்பட்ட பணம் அவர்களின் சந்ததிக்கு நல்லதில்லை.

Rate this:
k. kandaswamy - karaikal,இந்தியா
08-டிச-201508:19:56 IST Report Abuse

k. kandaswamyதேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை அவமதித்தீர்கள். வழக்கு, விசாரணை, சிறைத்தண்டனை,மேல் முறையீடு, மறுதீர்ப்பு, மீண்டும் தேர்தல் என்றெல்லாம் மனம் பதைபதைக்க வைத்தீர்கள்.மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதை மறந்தீர்கள். இனிமேல் இப்படியெல்லாம் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? .

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
08-டிச-201506:56:25 IST Report Abuse

Barathanதமிழ் மக்களே, தமிழ் நாட்டை ஒரு உண்மையான தமிழன் -விவசாயியோ அல்லது உழைக்கும் வர்க்கத்தை ஒரு தொழிலாளி ஆள வேண்டும். தயவு செய்து இந்த சினிமாகாரங்களை குறிப்பாக வேறு மாநிலத்திலிருந்து பிழைப்புக்காக சினிமா மூலமாக தமிழ் நாட்டின் CM ஆகி வந்தவர்களுக்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள். தமிழ் நாட்டை ஒரு உண்மையான தமிழன் ஆள வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.( திராவிட கட்சிகளை தவிர்த்து - இவர்கள் 60 ஆண்டு ஆட்சி போதும் இப்போ மக்கள் படும் அவதிக்கு இந்த இரு பெரும் DMK, ADMK களே காரணம் ).

Rate this:
s krishnamoorthy - uppathur 626205,இந்தியா
08-டிச-201506:52:20 IST Report Abuse

s krishnamoorthyஇத்தகு அதிகாரிகளும் பொது மக்களின் தீராத சொத்து சேர்க்கும் வெறிதான் கரணம் .

Rate this:
Rajan. - singapore,சிங்கப்பூர்
08-டிச-201505:10:54 IST Report Abuse

Rajan. எல்லா ஊழல்க்கும் தலமை தான். தலைமைக்கு கப்பம் கட்ட சொன்னால் கப்பத்தை கட்டிவிட்டு கையை நக்கதன் செய்வான் . தலைமை ஒழுங்காக இருந்தால் ஊழல் இருக்காது

Rate this:
swaminathan - chennai,இந்தியா
07-டிச-201507:10:45 IST Report Abuse

swaminathanநாம் மானம் உள்ள தமிழனாய் இருந்தால் ஊழல் பெருச்சாளியான இவ் இரண்டு திராவிட கட்சிகளை தவிர்த்து 2016ல் வேறு ஒரு கட்சிக்கு வியப்பு அளிப்போம்

Rate this:
JV Simhan - Houston,யூ.எஸ்.ஏ
08-டிச-201502:37:21 IST Report Abuse

JV Simhanplease do it....

Rate this:
Maran - Birmingham,யுனைடெட் கிங்டம்
08-டிச-201507:18:09 IST Report Abuse

Maranஇரண்டு பெருச்சாளிகிட்ட இருந்து தப்ப்லாம்னு வேறு வழிய பாத்தா அங்க ஒரு முரட்டு மொதல வாய ஆன்னு பொளந்துக்கிட்டு கோரபசியோட பாக்குது...ம்ம்ம்....என்ன செய்யலாம் மானமுள்ள தமிழா?...

Rate this:
Nanban Sankar - Chennai,இந்தியா
07-டிச-201507:05:53 IST Report Abuse

Nanban Sankarதமிழர்கள் ஒன்று சேர்வது என்பது துயரத்தில் மட்டும் தான். பின்பு மறந்து மன்னித்து விடுவார்கள் என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். நமது சுயநலம் அதில் உள்ளது. இளைய தலைமுறை சிந்தித்து வருகிற தேர்தல் மaaற்று ஏற்பாடு செய்யுங்கள். நாட்டுக்காக நாமும் நமது சுயநலத்தை விட்டுக்குடுக்க்க முன் வர வேண்டும். இளைய தலைமுறை நினைத்தால் சாதிக்கமுடியும்.

Rate this:
மோடுமுட்டிசாமி - Chennai,இந்தியா
07-டிச-201507:05:10 IST Report Abuse

மோடுமுட்டிசாமிஇது வரை முதல்வர் தொலைகாட்சியில் நேரடியாக தோன்றி மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.

Rate this:
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
07-டிச-201506:59:35 IST Report Abuse

Ramasami Venkatesanஒன்று மனதில் கொள்ளவேண்டும் - பசியாலும், வீடு இழந்து, வெள்ளத்தால் பலவும் இழந்த மக்கள், பொருட்களின் மேல் ஒட்டியிருக்கும் படத்தையா பார்க்கப்போகிறார்கள் - கையில் கிடைத்ததும் பிய்த்து எறிந்து உணவையோ, பொருட்களை அடையப்போகிறார்கள். படத்தில் இருப்பவர் நேரில் பார்த்தால் தலை குனிவு. மக்கள் படங்களையா பார்க்கப்போகிறார்கள் அவர்கள் இருக்கும் நிலையில் . இந்த மாதிரி சமயங்களில் ஓட்டு வங்கியா உயரப்போகிறது சில சமயம் அந்த படத்தில் உள்ளவர் மேல் வெறுப்பாகவும் மாறலாம். உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் சரி. மக்களின் மனம் பொட்டலங்களின் உள்ளே உள்ள பொருளின் மீது இருக்குமே தவிர, கட்டியிருக்கும் பேப்பர்களையும் படங்களையும் கசக்கி எறியபோகிரார்கள்.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
07-டிச-201506:45:52 IST Report Abuse

Barathanபட்டுகோட்டையார் சொன்னது ஞாபத்துக்கு வருகிறது. "திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" திருடுவது,, புறம்போக்கில் வீடு கட்டுவது, ரோடு இரண்டு ஓரங்களிலும் குப்பைகளை கொட்டுவது, கலப்பு திருமணம் என்றபெயரில் சொத்துக்க்காகவும் திருமணம் செய்து கட்டபஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று குறுக்கு வழியில் சீக்கிரம் பணம் பெற்று உழைக்காமாலே முன் வரவேண்டும் என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

Rate this:
மேலும் 241 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement