Rs. one lakh crore loss in chennai | 100 ஆண்டு இல்லாத மழையால் சென்னை, புறநகரில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :

Dinamalar Banner Tamil News

Advertisement

தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்ததால், சென்னை மற்றும் புறநகரில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், எப்போது வீடு திரும்புவோம் என, ஏக்கத்தில் காத்திருக்கின்றனர். மீண்டும் மழை பெய்வதால், நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், 14 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கி உள்ளனர்.
* சென்னை மாநகராட்சியின் கணக்கு படி, வீடுகள் என்ற கணக்கில், 11 லட்சம் கட்டடங்களுக்கு வரி

வசூலிக்கப்படுகிறது. ஒரு கட்டடத்தில், ஒரு குடும்பம் மட்டும் இல்லை. ஒன்று முதல், ஐந்து குடும்பங்கள்வரை வசித்து வருகின்றன. இந்த கணக்கு படி, 30 லட்சம் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளில், வெள்ள நீர் புகுந்து அனைத்து உடைமைகளும் பாழாகி விட்டன.
* ஒரு குடும்பத்திற்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, 30 லட்சம் குடும்பங்களுக்கு, ஒட்டு மொத்தமாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர வணிக நிறுவனங்கள், கிடங்குகள், ஓட்டல்கள், கடைகள், சிறு,நடுத்தர, குறுந்தொழில்கள், ஒரு மாதத்திற்கு மேலாக முடங்கிக் கிடக்கின்றன.


மக்களின் உழைக்கும் திறனும் முடங்கியுள்ளது. இப்படி, ஒட்டுமொத்த பாதிப்புகளையும் கருத்தில் கொண்டால், தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்கின்றனர், நிதித் துறை ஆலோசகர்கள்.

இந்நிலையில், 'வங்கக் கடலில், மேலும், ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது; இரண்டு நாட்களுக்கு கன மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தி உள்ளது. 'கன மழை பெய்தால், மீட்புப் பணி பெரும் சவாலாக அமையும்' என, பேரிடர் மீட்புக் குழுவினரும் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) மற்றவர்களை குறைகூறுவதை விட, பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று யோசிப்பது தான் இந்த நேரத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும்

Rate this:
ARUN KUMAR - TRICHY,இந்தியா
09-டிச-201514:40:16 IST Report Abuse

ARUN KUMARவெள்ள பாதிப்பை மீண்டும் மீண்டும் காட்டி மக்களுக்கு பீதியை கிளப்புவதை விட்டு விட்டு மக்கள் பணியில் ஈடுபடுவதை டிவி சேனல்கள் ஈடுபடுவது மக்களுக்கு செய்யும் அரும்பணி ஆகும். இந்த மாதிரி புரளிகளால் மக்கள் மீண்டும் சென்னை திரும்பாமல் சொந்த ஊரில் இருக்கிறார்கள். தயவு செய்து பத்திரிகைகள் இதை தெளிவு படுத்தவும்.

Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
07-டிச-201520:56:35 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)வெள்ளம் வரும்பொழுது ஒரு அரசு என்ன செய்யவேண்டும் ? கோவில்களை திறந்துவிட்டு, மதுக்கடைகளை மூடியிருக்க வேண்டும். முன்பு கோவில்கள் ஆயிரம் கால் மண்டபங்களுடன் மேடேற்றி கட்டப்பட்டது, தூண்களில் விதவிதமாக ஒலி வருவதை கேட்பதற்கு மட்டுமா? ஊரில் எந்த இயற்கை சீற்றங்கள் நடந்தாலும், குறைந்தபட்சம் ஐந்தாயிரம் பேரையாவது காக்கும் பொருட்டு தானே ? கோவிலுக்குள்ளேயே அன்னதான சத்திரங்கள் அமைக்கப்பட்டதும் அதற்குதானே ? பிற மத வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட்ட நிலையில், அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருந்த கோவில்களை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்ககூட எதற்காக இவ்வளவு தாமதம் ? ஆறு நிலநடுக்கங்களை தாண்டியும் நிற்கும் தஞ்சை பெரியகோவிலை விட பழமையான கோவில்கள் சிதையாமல் இருக்கும் இடம் தமிழ்நாடு. மக்கள் சிலர் கோவிலில் தஞ்சம் அடைந்தபொழுது, அவர்களை இருங்கள் என்றோ, வெளியேறுங்கள் என்றோ பல கோவில்களில் கூறிவில்லை. மாறாக அதிகாரிகளிடம் உத்தரவு வருவதற்காக காத்திருந்தார்கள் என்று செய்தி படித்தது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. கோவில்களில் இருந்த பொருட்களின் பாதுகாப்பு வேண்டி தான் திறக்கவில்லை என்று வேண்டாம். கோவில்களின் சொத்தை அரசாங்கம் கொள்ளயடித்ததைவிட, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள். உண்மையில் எந்த காரணங்களுக்காக கோவில் மண்டபங்களும் அன்னதான சத்திரங்களும் அமைக்கபட்டனவோ, அதன் அர்த்தமே சிதைந்துவிட்டது. எதாவது எதிர்பாத்து செய்வது தானம், எதையும் எதிர்பாராமல் செய்வது தர்மம் என்று நினைத்து, எதையும் எதிர்பாராமல் உதவி செய்த பல ஹிந்துக்களை தலைகுனிய செய்துவிட்டது இந்த அரசு..

Rate this:
vensus - tamilnadu,இந்தியா
08-டிச-201500:37:12 IST Report Abuse

vensusமனம் வேதனை அடைகிறது. எப்போது என் தமிழ் தேசம் மாற்றம் அடையும். அரசியலில் புது மாற்றம் வரும்.நல்ல தலைவர்கள் உருவர்கள்?...

Rate this:
Velai - Ahmadabad,இந்தியா
07-டிச-201519:55:35 IST Report Abuse

Velai பாப்பான் கால்வாயை, ஒரு பிராமணனுடைய கால்வாய்ன்னு நினைச்சுண்டு இவர்கள் அனைவரும் சேர்ந்து அதை அமுக்கி விட்டார்கள். விடுமா கால்வாய். அப்படியே ஒரே அமுக்கு... சென்னையே திக்கு முக்காடி போச்சு..

Rate this:
periasamy - Doha,கத்தார்
07-டிச-201519:49:59 IST Report Abuse

periasamyஇலவசங்களை மட்டும் கொடுக்கும் அரசுகளால் தமிழக தலைநகர் வாசிகளை பிறரிடம் கையேந்த வைத்துவிட்டார்கள்

Rate this:
karthick youngster - lesiabhik,ஆப்கானிஸ்தான்
07-டிச-201519:45:08 IST Report Abuse

karthick youngster இத்துணை கோடி ரூபாய் பணமாய் கொடுத்தவர்கள் அத்துணையையும் பொருட்களாய் கொடுத்திருந்தால் கண்டிப்பாக மக்களை போய் சென்றடைந்திருக்குமே அப்பாவி பணக்காரர்களே

Rate this:
SRH - Mumbai ,இந்தியா
07-டிச-201519:29:58 IST Report Abuse

SRHசில்வர் அயோடைட ப்ளைட்ல போய் கடல்ல கூடியிருக்கும் மேகக்கூட்டங்களில் தூவினால் கடல் பரப்பிலேயே மழை பெய்து விடும் .இப்படிக்கு வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி ஸ்ரீராம்

Rate this:
Alaat Aarumugam - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201519:29:04 IST Report Abuse

Alaat Aarumugamதவறு செய்தவன் தண்டனை அனுபவித்துதான் ஆகணும். மழையே பெய்யாத ஊருல தண்ணி, வெள்ளம்னு பிதற்றும் முட்டாள்கள் சென்னைவாசி. எங்க கடலூரைப் பாருங்கள். எங்களுக்கு உதவ இதுவரை யாரும் வரலை. ஓய்வு எடுக்க வேண்டியர்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தினால் இப்படி தான் இருக்கும்.

Rate this:
rangrajan srinivasan - சென்னை,இந்தியா
07-டிச-201519:15:53 IST Report Abuse

rangrajan srinivasanஆறு.,ஏரி,குளம் குட்டைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றினால் மாத்திரம் அல்ல / கோயில் நிலங்களை மீட்டு அந்தந்த கோயிலுக்கு சேர்த்துவிட்டால் கர்நாடக அரசு கேட்காமலே தண்ணீரை போதும்போதும் என்கிற அளவுக்கு திறந்து விடும். ஆம் கன்னடியன் கால்வாய் வெட்டியது ஓர் கன்னடர் தாம் அது மட்டும் அல்ல கோயில் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு அவர்கள் நிவந்தங்கள் பல எழுதி வைத்து இருக்கிறார்கள். அவற்றை அழித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அதுதான் தண்ணீர் தர மறுக்கிறார்கள். ஓர் உதாரணம்: ஒவ்வொரு மாமாங்கம் போதும் நாம் கேட்காமலே (12 வருடங்களுக்கு ஒரு முறை) 5 டி எம் சி தண்ணீர் திறந்து விடுகிறார்களே

Rate this:
Subramania Bhattar - madurai,இந்தியா
07-டிச-201519:07:37 IST Report Abuse

Subramania Bhattarஅய்யா புதியதலைமுறை, மக்கள்,சன்,கலைஞர் சத்தியம் கேப்டன் தொலைக்காட்சி உரிமையாளர்களே தயவுசெய்து உங்களது ஜெயலலிதா எதிர்ப்பு பிரசாரத்தை இந்த அசாதாரண சூழலில் பொய்யான செய்திகளை அடிக்கடி ஒளிபரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தாதீர்கள். எரிகிற வீட்டில் பிடிங்கியது ஆதாயம் என்று நடக்காதீர்கள்.

Rate this:
மேலும் 133 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement