சனத்குமார நதியில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சனத்குமார நதியில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

Added : டிச 08, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தர்மபுரி: சனத்குமார நதியில் மண்டியுள்ள புதர்களை தூர் வாரி, கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அன்னசாகரம் ஏரி மற்றும் அதியமான் கோட்டை ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பச்சையம்மன் கோவில் அருகே ஒன்று சேர்ந்து, சனத்குமார நதியாக மாறி, வேடியப்பன் திட்டு, வெளிப்பேட்டை தெரு, அக்ரஹார தெரு, குப்பாகவுண்டர் தெரு, டேகீஸ் பேட்டை, காமாட்சியம்மன் தெரு, மதிகோன்பாளையம் மற்றும் பல கிராமங்களில் வழியாக சென்று, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. பல ஆண்டுகளாக அன்னசாகரம் ஏரி மற்றும் அதியமான் கோட்டை ஏரி வறண்டு கிடந்ததால், சனத்குமார நதியில் தண்ணீர் இன்றி, புதர்கள் வளர்ந்து மண்டியுள்ளது. மேலும், இந்த நதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டது. பல இடங்களில், விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு பெய்த கனமழையால், அன்னசாகரம் ஏரி மற்றும் அதியமான் கோட்டை ஏரி நிரம்பி, உபரி நீர் சனத்குமார நதியில் திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இரண்டு ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், நதி ஆக்கிரமிப்பு மற்றும் ஆற்றில் மண்டியுள்ள புதர்களால், தண்ணீர் ஆற்றில் செல்லாமல், தர்மபுரி நகருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பல வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உள்ளது. உடனடியாக இந்த நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, நதியில் மண்டியுள்ள புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X