மொழிபெயர்ப்பில் 'கலாசார புரிதல்' அவசியம் : எழுத்தாளர் சுப்பாராவ் 'நேர்காணல்'| Dinamalar

மொழிபெயர்ப்பில் 'கலாசார புரிதல்' அவசியம் : எழுத்தாளர் சுப்பாராவ் 'நேர்காணல்'

Added : டிச 16, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மொழிபெயர்ப்பில் 'கலாசார புரிதல்' அவசியம் : எழுத்தாளர் சுப்பாராவ் 'நேர்காணல்'

மொழிபெயர்ப்பு என்பது வெறும் வார்த்தை மாற்றங்கள் அல்ல; கலாசார பரிமாற்றங்கள். மொழிபெயர்ப்புக்கு முன் அந்த மொழி குறித்த கலாச்சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்,மதுரையைச் சேர்ந்த மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ச.சுப்பாராவ்.மதுரை தியாகராஜர் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்த இவர், எல்.ஐ.சி.,யில் உயர்நிலை உதவியாளராக பணியாற்றுகிறார். பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா உட்பட 22 ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.'பிடல் -கே, ஒரு புரட்சிகர நட்பு' என்ற புத்தகம் எழுதியதற்காக சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கி கவுரவித்துள்ளது.குருவி, தாத்தாவின் டைரிக் குறிப்பு, இரண்டாவது ஞானம் என்ற 3 சிறுகதை தொகுப்புகள், 'வாசிப்பை நேசிப்போம்' என்ற தலைப்பில் புத்தகம் என இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் அவருக்கென தனியிடத்தை தக்கவைத்துள்ளது. திண்டுக்கல்புத்தக திருவிழாவில் அவரோடுசிறு நேர்காணல்...* படிப்பு, வேலையைத் தாண்டி மொழிபெயர்ப்பு எழுத்தில் ஈடுபட்டது எப்படி.எல்.ஐ.சி., ஊழியர்கள் சங்கத்தின் சுற்றறிக்கை பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் இருக்கும். அதை நான் மொழிபெயர்த்து தருவேன். ஒருமுறை சென்னை பாரதி புத்தகாலயாவிற்கு புத்தகத்தைமொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 22 புத்தகங்களை மொழிபெயர்த்துவிட்டேன்.* நேரடி எழுத்துக்கும், மொழி பெயர்ப்புக்கும் உள்ள வித்தியாசம்.ஆங்கில புத்தகங்களை மொழிபெயர்ப்பது எளிது. ஏனென்றால் நாம் அவர்களிடம் இருந்து தான் ஆங்கிலம் கற்றுக் கொண்டோம். வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பது சவாலானது. பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா புத்தகங்கள் ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புக்கு முன் அந்த மொழி குறித்த கலாசாரத்தை அறிந்து கொண்டேன். அதற்கான புத்தகங்களை முதலில் தேடி படித்தேன்.சில நேரங்களில் அந்த கலாசாரத்தில் கூறப்பட்டுள்ள ஒரு வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கு, நாட்கணக்கில் இணையத்தில், புத்தகத்தில் தேடினேன். ஏனென்றால் கலாச்சாரத்தை பொறுத்து தான் வார்த்தைகள் அமைகின்றன. மேற்கத்திய கலாசாரத்தில் வீடு கட்டினால் 'ஹவுஸ் வார்மிங்' நிகழ்வு என்பார்கள். அங்கே அவர்களுக்கு வெப்பம், வெதுவெதுப்பு தேவை. அதை தமிழில் எழுதும் போது 'மனம் குளிர' என்று தான் எழுத வேண்டும்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன்டோன் செக்காவ் எழுதிய இரண்டு ரஷ்ய நாவல்களை, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தேன். மொழிபெயர்ப்பு என்பது வெறும் வார்த்தை மாற்றங்கள் அல்ல; கலாசார பரிமாற்றங்கள்.* புத்தகங்கள் படித்தலின் அவசியம் குறித்து...ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வாழ்ந்த அரசர்கள் நீண்ட பாசன கால்வாய்களை இணைத்து, 50 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஒன்றிணைத்தனர். அப்பொழுதே சீனாவில் 6 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன.இந்த தொலைநோக்கு பார்வை சீனர்களுக்கு இருந்தது ஆச்சரியமான ஒன்று. அப்பொழுதே சீன அரசு அதிகாரிகளுக்கு தேர்வுமுறை இருந்துள்ளது. இத்தகவல்களை 16 ஆண்டுகள் ஐரோப்பா முழுவதும் சென்று வந்த 'செரிஸ் ஹார்மன்' என்ற எழுத்தாளர், 'பீப்பிள்ஸ் ஹிஸ்ட்ரி ஆப் தி வேர்ல்டு' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். பள்ளி,- கல்லுாரிகளின் படிப்பு ஊதியத்திற்கும், தேவைக்குமான ஒன்று. உயிரை விட்டு உடல் பிரியும் வரை நம் கூட இருப்பது படிப்புமட்டுமே. படிப்பை நேசிப்பது அவசியம்.* திருக்குறள் வாழ்வியல் குறித்து..உலகியல் வாழ்க்கைக்கான கருத்தியல் பொக்கிஷமாக நமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் திருக்குறள். வெறும் படிப்போடு நிறுத்தி விடாமல் கருத்துக்களை உள்வாங்கி, அதன் மூலம் வாழ்வின் செயல்பாடுகளை வகுத்தால் வாழ்க்கை வளமாகும், என்றார். வரும் ஜனவரியில் 'உலக மக்களின் வரலாறு' என்ற இவரது மொழி பெயர்ப்பு புத்தகம், சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவர உள்ளது. இவரை வாழ்த்த 94421 82038.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை