மகாமக விழா சிறப்பு மலர் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகாமக விழா சிறப்பு மலர் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு

Added : டிச 27, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:கும்பகோணம் மகாமகத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இதில், பக்தர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடக்கும் மாசி மக திருவிழாவில், இங்கு, ஒரு லட்சம் பக்தர்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில், 35 லட்சம் பேரும் பங்கு பெறுகின்றனர். 2016 பிப்ரவரி, 22ல், மகாமக திருவிழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, பல கோடி ரூபாய் மதிப்பில், குளம் சீரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. இதில், மகாமகம் குறித்த வரலாறு, தகவல்கள், கும்பகோணம் சுற்று வட்டார கோவில்களின் சிறப்புகள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இதில், பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மகாமகம் குறித்த அரிய தகவல்கள், புகைப்படங்கள் இருந்தால், அவற்றை இம்மாத இறுதிக்குள் வழங்கலாம் என, அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X