பஞ்சபூத மகா சாந்தி ரத ஊர்வலம் துவக்க விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சபூத மகா சாந்தி ரத ஊர்வலம் துவக்க விழா

Added : ஜன 03, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிதம்பரம்: சமர்ப்பணம் சேவை மையம் சார்பில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அச்சம் நீங்கிட பஞ்சபூத மகா சாந்தி ரத ஊர்வலம் துவக்க விழா நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது. கடலுார், புதுச்சேரி சமர்ப்பணம் சேவை மையம் சார்பில் சிதம்பரம் கீழக்கு சன்னதியில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஜ., மாவட்ட பொருளாளர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். சிதம்பரம் மவுனம் சுவாமிகள் மடம் அதிபர் மவுன சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினார். சமர்ப்பணம் சேவை மையம் தலைவர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். கடலுார் ஈஷா யோகா ஒருங்கிணைப்பாளர் பாலு பஞ்சபூத மகா சாந்தி ரதத்தை துவக்கி வைத்தார். மகா சாந்தி ரதம் சிதம்பரம் பகுதி கிராமப்புறங்களுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி இயற்கை வளம், பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிகழ்ச்சியில் டாக்டர் பாண்டியன், கணபதி, ராமநாதன், ராதாகிருஷ்ணன், வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ், மோகனசுந்தரம், ராஜேந்திரன், ஜோதிகுருவாயூரப்பன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., இயக்க தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் சபேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X