karunanidhi questions Jayalalithaa | கடிதம் எழுதினால் போதுமா: கருணாநிதி கேள்விக்கணை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கடிதம் எழுதினால் போதுமா?
கருணாநிதி கேள்விக்கணை

சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குவது சரியாக இருக்காது' என, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்ஹி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதினால் போதுமா: கருணாநிதி கேள்விக்கணை

தமிழக ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர், டில்லி சென்று ஏமாற்றத்தோடு, மதுரை திரும்பியுள்ளனர். 'ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது' என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு, மத்திய அரசுக்கு, ஒரே ஒரு கடிதம் எழுதிவிட்டு, தன் பணி முடிந்து விட்டதாக கருதி, வழக்கம் போல துாங்கிக் கொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிஅளிக்கக்கோரி, முதல்வரோ, மூத்த அமைச்சரோ, டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பண்டிகை வருவதற்கு, ஒரு சில நாட்களே உள்ளன.

Advertisement

மத்திய அரசு, மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜல்லிக்கட்டு நடத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatasubramanian Rajesh - ambattur,chennai,tamilnadu,இந்தியா
06-ஜன-201605:42:58 IST Report Abuse

Venkatasubramanian Rajeshகருணாநிதி வாய் மூடி கொண்டு இருந்தால் தமிழ்நாடு மக்களுக்கு நன்மை 92 வயசு அனாலும் பதவி வெறி கொண்டு அலையும் இவரை என்ன என்று சொல்வது தன மானம் உள்ள தமிழ் மக்கள் சிந்தித்து செயல் பட வேண்டும்

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஜன-201605:38:54 IST Report Abuse

g.s,rajanஆனாலும் கருணாவே கடிதம் எழுதுவதில் உம்மை மிஞ்ச இன்னொரு ஆள் இனிப் பொறந்துதான் வரணும் .

Rate this:
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
06-ஜன-201602:34:15 IST Report Abuse

கீரன் கோவைசும்மா இலங்கைப் பிரச்சினைக்கு கடிதம் மட்டும் தானே எழுதினாய் என்று கேட்காதீர்கள். வரலாறு மறந்து விட்டதா? தமிழ் மக்களை ராணுவம் ஒட்டு மொத்தமாகக் கொன்றபோது தமிழினத் தலைவர் கடிதம் எழுதியதோடு விட்டாரா? மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தி அதைக் காரில் வந்து பார்வையிட்டார். திமுக எம்பிக்களின் ராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்துக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக கடற்கரையில் இரண்டரை மணி நேரம் ............சாகும் வரை............ உண்ணாவிரதமிருந்தார். எல்லாம் மறந்து விட்டதா?

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X