Opinion poll about Next CM | அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கருணாநிதிக்கா ஸ்டாலினுக்கா? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கருணாநிதிக்கா ஸ்டாலினுக்கா?

சென்னை: அடுத்த முதல்வராகும் வாய்ப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கா அல்லது அவர் மகனும், கட்சியின் பொருளாளருமான ஸ்டாலினுக்கா என்பதை, தனியார் கருத்துக் கணிப்பு நிறுவனம் கணித்து, பரபரப்பான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கருணாநிதிக்கா ஸ்டாலினுக்கா?

சட்டசபை தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பைச் சேர்ந்த, வேலுார் மாவட்ட வழக்கறிஞர் திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளிலும், 5,176 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவில்லை என, 77.9 சதவீதம் பேரும், மது பிரச்னையைத் தீர்க்கவில்லை என, 70.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., ஆட்சி நன்றாக இருந்ததாக, 32.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என, 39 சதவீதம் பேரும், வாய்ப்புள்ளது என, 25.9 சதவீதம் பேரும், நெருங்கி வருவது போல் உள்ளது என, 13 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வை தவிர, அவற்றுக்கு ஈடாக எந்த மாற்றுக் கட்சியும் இல்லை என, 56.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த இரு கட்சிகள் மீது, 15 சதவீத இளைஞர்கள், பெண்கள்அதிருப்தி தெரிவித்துள்ளனர். பா.ம.க., தலைமையிலான ஆட்சிக்கு சாத்தியம் என, 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இலவச திட்டங்கள் தேவையில்லை என, 71 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்து, கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு அதிக அளவில் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.அடுத்த முதல்வராக தகுதி, திறமை மற்றும் வாய்ப்பு கருணாநிதிக்கு, 70.99 சதவீதமும், ஸ்டாலினுக்கு, 69.61 சதவீதமும், ஜெயலலிதாவுக்கு, 65.99 சதவீதமும் உள்ளது.

தி.மு.க.,வுக்கு, 35.6 சதவீதம், அ.தி.மு.க.,வுக்கு, 33.1 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. மூன்றாவது அணியால் ஓட்டுகள் சிதறி, அ.தி.மு.க.,வுக்கு வெற்றி சாதகமாகலாம். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின், 'நமக்கு நாமே' சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பண்பாடுமக்கள் தொடர்பக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை லயோலா கல்லுாரி ஊடகத் துறையின் பேராசிரியராக இருந்த ராஜநாயகத்தின் வழிகாட்டுதலோடு, கருத்துக் கணிப்பு எடுத்ததாகக் கூறியுள்ளது குறித்து, ராஜநாயகத்திடம் கேட்டோம்.

Advertisement

அவர், ''இந்த கருத்துக் கணிப்புக்கும், எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

பின்னணியில் தி.மு.க.,?

கருத்துக் கணிப்பு முடிவுகளை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், அந்த இயக்கத்தினர் வெளியிட்ட போது, அவர்களுடன் இருந்தவர்களில் பெரும்பான்மையினர், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதன் பின்னணி மற்றும் நம்பகத்தன்மை குறித்து, கேள்வி எழுந்துள்ளது.


'சம்பந்தமில்லை'லயோலா விளக்கம்:

கருத்துக் கணிப்பு குறித்து சென்னை லயோலா கல்லுாரி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:பண்பாடு மக்கள் தொடர்பக இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டதாகக் கூறியிருக்கும் கருத்துக் கணிப்புக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களோ அல்லது இந்நாள் மாணவர்களோ, கல்லுாரி நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கருத்துக் கணிப்பு எதையும் எடுக்கவில்லை.இவ்வாறு அந்த தரப்பில் கூறப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (176)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRIVEL - chennai,இந்தியா
09-மார்-201611:25:17 IST Report Abuse

SRIVELஉங்களின் கொள்கைகள் சாரி கொள்கைகள், குடும்ப ஆட்சி, 2 G உழல், ரௌடீசம், உங்கள் குடும்ப ஆதிக்கம், மக்களின் சொத்துகளை சுரண்டல், போன்றவரை மக்கள் ம்றக்கவிலை,

Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
10-ஜன-201621:30:20 IST Report Abuse

a natanasabapathyதமிழ்நாடு இவர்களின் குடும்ப சொத்தா ஏலம் விடுவதற்கு? இரண்டு பெருமே இல்லை. இந்தியன் நண்டு கதைதான்.

Rate this:
SAMPATH - TIRUNELVELI,இந்தியா
08-ஜன-201615:42:04 IST Report Abuse

SAMPATHஅடுத்து தி.மு.கதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். அப்போது கருணாநிதிதான் முதல்வராவார். தான் அடுத்து வரமுடியுமா என்ற நப்பாசையில் ஸ்டாலின்தான் இத்தகைய மாற்றுக் கருத்துக்களை, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உலவவிடுகிறார்.

Rate this:
மேலும் 173 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X