Relef fund distribute from today | 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சம் : இன்று முதல் ஆளுக்கு ரூ.5,000 பணம் வங்கி கணக்கில் சேர்ப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சம் : இன்று முதல் ஆளுக்கு ரூ.5,000 பணம் வங்கி கணக்கில் சேர்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில், வெள்ள நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை, 30 லட்சத்தை தாண்டி உள்ளது. இதில் முதல் கட்டமாக, 14 லட்சம் பேருக்கு, ஆளுக்கு, 5,000 ரூபாய் பணம், இன்று முதல், அவர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்; மீதமுள்ள, 16.42 லட்சம் பேருக்கு, 11ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

'மழை வெள்ளத்தால் இறந்தவர் குடும்பங்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம்; குடிசை இழப்புக்கு, 5,000 ரூபாய், சிறப்பு நிவாரணம், 5,000 ரூபாய் என, மொத்தம், 10 ஆயிரம் ரூபாய்; நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்பு அடைந்தவர்களுக்கு, 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் படி, மழைக்கு பலியான, 421 பேரில், 245 பேர் குடும்பங்களுக்கு, தலா, நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; மீதமுள்ள குடும்பங்களுக்கு, சில நாட்களில் வழங்கப்பட உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. மொத்தம், 4.93 லட்சம் குடிசைகள் சேதமடைந்துள்ளன. மேலும், 25.48 லட்சம் வீடுகள் மற்றும் குடிசைகளை வெள்ளம் சூழ்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில், 14 லட்சம் குடும்பங்களின் விவரம், கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களில், 14 லட்சம் குடும்பங்களுக்கான நிவாரண தொகை, அவர்களின் வங்கி கணக்கில், இன்று வரவு வைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மீதமுள்ள குடும்பங்களுக்கு, அவரவர் வங்கி கணக்கிற்கு, ஜன., 11ம்தேதிக்குள் வரவு வைக்கப்படும்.

மொத்தம், 30.42 லட்சம் குடும்பங்களுக்கு, நிவாரண உதவியாக, 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி, சேலை, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.நிவாரணம் பெற்றவர்கள், அதை பெற்றதற்கு ஆதாரமாக, வங்கி கணக்கு புத்தகத்துடன், ரேஷன் அட்டையை காண்பித்து, ரேஷன் கடைகளில், பிப்ரவரி இறுதி வரை அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை பெறலாம் என்றும், முதல்வர் அறிவித்துள்ளார்.

4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை 30 லட்சம் : இன்று முதல் ஆளுக்கு ரூ.5,000 பணம் வங்கி கணக்கில் சேர்ப்பு

ரூ.700 கோடி நிவாரணம்:

* மழைக்கு, 3,785 மாடுகள், 8,136 ஆடுகள், 109 பன்றிகள், 85 ஆயிரத்து, 895 கோழிகள் இறந்துள்ளன. இதற்காக இதுவரை, 7.78 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது
* மழையால், 9 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர், 87 ஆயிரம் ஏக்கர் தோட்டக்கலை பயிர் சேதமடைந்துள்ளன. பாதிப்படைந்த, 68 ஆயிரத்து, 350 விவசாயிகளின் வங்கி கணக்குகளில், 29.48 கோடி ரூபாய், நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது
* இயந்திரப் படகு, கட்டுமரம், மீன் பிடி வலைகள், மீன் விதை பண்ணை பாதிப்புக்கு நிவாரண உதவியாக, 13கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
* மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேற்று மட்டும், 700 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய குழு மீண்டும் வருகை:

வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு, இரண்டாவது முறையாக, இன்று தமிழகம் வருகிறது. கடந்த டிசம்பரில், கொட்டித் தீர்த்த கன மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. 'மழையால், 8,481 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக, 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்; சேதத்தை மதிப்பிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு, 1,940 கோடி ரூபாய் ஒதுக்கியது; மத்திய குழுவையும் அனுப்பியது. மத்திய உள்துறை இணை செயலர் பிரசாத் தலைமையிலான குழுவினர், மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். முதல், மூன்று கட்டங்களில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்த மத்திய குழு, நான்காவது கட்டமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு செய்ய, இன்று தமிழகம் வருகிறது. இக்குழு, இரண்டு நாட்கள் பார்வையிட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், மத்திய அரசு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியை, தமிழகத்திற்கு வழங்கும்.



- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
06-ஜன-201602:29:13 IST Report Abuse

Rajeshசொந்த நாட்டில் அகதிகள் இவர்கள். இவர்களின் உரிமை கூட ஏதோ ஆட்சியாளர்களின் கருணையினால்தான் நிறைவேறும் போல இருக்கிறது. கேடு கெட்ட கழகங்களின் அவல ஆட்சியின் பிரதிபலிப்பு...

Rate this:
Raj - bangalore,இந்தியா
05-ஜன-201621:19:53 IST Report Abuse

Rajஅம்மா ஒரு தர்ம தாய், இதே கருணாவாக இருந்தால் மரணம் 1 லச்சத்தை தாண்டி இருக்கும், நீங்கள் செய்த உடனடி நடவடிக்கையால் பல்லாயிரம் உயிர்கள் காக்க பட்டது. இது போன்ற நஷ்ட ஈடு குறைவாக இருந்தாலும் கொடுக்கும் மனது யாருக்கும் வராது வாழ்க அம்மா தொடரட்டும் உங்கள் பொன்னான ஆட்சி.

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
05-ஜன-201616:51:20 IST Report Abuse

தமிழர்நீதி பணம் கொடுத்தால் ,நரபலி குற்றம் சரியாகிவிடுமா .

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X