Karunanidhi slams Jayalalithaa | அனைவர் முதுகிலும்'அம்மா ஸ்டிக்கர்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அனைவர் முதுகிலும் 'அம்மா ஸ்டிக்கர்'

சென்னை:தப்பித் தவறி, 2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள் முதுகில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 அனைவர் முதுகிலும்'அம்மா ஸ்டிக்கர்'

நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு, 94 ஆயிரத்து, 400 கோடி ரூபாயை எட்டி விட்டது.வருடந்தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே வாரியம், தமிழக மின் வாரியம் மட்டும் தான்.

ஆனால், அ.தி.மு.க., பொதுக்குழுவில்,'முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி விட்டார்' என, கூறி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். பொய்களுக்கு, போலி புகழாரம் என்பது இது தானோ.தப்பித் தவறி, 2016ல்,அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள்

Advertisement

முதுகில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவர்.மேலும், தமிழ்நாடு என்று இப்போதுள்ள பெயரை மாற்றி, 'அம்மா நாடு' என, வைத்து விடுவர்; ஜெயலலிதா ஸ்டிக்கர், 'மேட் இன் அம்மா நாடு' என, உலகப் புகழும் பெற்று விடும்.

Advertisement

வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhya - mumbai,இந்தியா
08-மார்-201612:34:26 IST Report Abuse

vidhyaபோன 5 வருஷமா நீங்க குஷ்பூ ஸ்டிக்கர் ஒட்டியதை நாங்களும் பார்த்தோம் தான..

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஜன-201610:56:34 IST Report Abuse

g.s,rajanபுகழ் அவர்களே, கருணா செய்யும் அட்டூழியத்திற்கு கருணாவைத் திட்டாமல் என்ன கொஞ்சுவார்களா ???.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஜன-201619:18:38 IST Report Abuse

g.s,rajanஏன் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுக உடன்பிறப்புகளின் கைவரிசையாக் கூட இருக்கலாம் .

Rate this:
மேலும் 136 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X