Bengal golbal business summit in Kolkata | தமிழகத்திற்கு எப்போது வரும் அரசியல் நாகரீகம்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு எப்போது வரும் அரசியல் நாகரீகம்?

Updated : ஜன 08, 2016 | Added : ஜன 08, 2016 | கருத்துகள் (81)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழகத்திற்கு எப்போது வரும் அரசியல் நாகரீகம்?

கோல்கட்டா : டில்லியில் ஒரே மேடையில் எதிரும் புதிருமான கட்சி தலைவர்கள் கலந்துகொள்வது சர்வசாதாரணமாக நடக்கும் விஷயம். இதே போன்று, மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்று, அரசியல் நாகரீகத்தை பறைசாற்றினர்.
மேற்குவங்க மாநிலத்தி்ல தனியார் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இவற்றால் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி நடக்கும் மேற்குவங்க மாநிலத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 2.43 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளன. இவற்றை முறியடிக்கும் வகையில், பெங்கால் குளோபல் பிசினஸ் மாநாட்டிற்கு மேற்குவங்க அரசு திட்டமிட்டிருந்தது. அந்த மாநாடு இன்று (07ம் தேதி) துவங்கி 9ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டின் துவக்க விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மாநில அரசின் துரித நடவடிக்கைகளால், தனியார் முதலீடு அதிகரித்துள்ளதாகவும், இதற்காக மாநில அரசிற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக மத்திய அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
டில்லியில் தேசிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களின்போது கூடும் அரசியல் தலைவர்கள், கட்சி, பேதம் பாராமல் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசிக்கொள்வர். ஆனால், தமிழ்நாட்டிலோ, ஒரே அரசியல் தலைவரின் பிறந்த நாளைக் கூட தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர். இதில் முன்னணி கட்சிகள் மட்டுமல்லாது சிறிய கட்சிகளும் விதிவிலக்கல்ல.

காவிரி பிரச்னையி்ல, அண்டை மாநிலமான கேரளாவில் கூட முதல்வருடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓன்று சேர்ந்து, தங்கள் தரப்பு நியாயத்தை பிரதமரிடம் தெரிவிக்கின்றனர்.
நமது மாநிலத்திலோ, ஒரு அரசியல் கட்சிக்கு மற்றொரு கட்சி, ஏதோ எதிரி போன்றே பாவித்து வருகிறது. தலைவர்கள் மட்டுமல்லாது தொண்டர்கள் கூட பேசிக்கொள்வது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். புதிய அரசியல் நாகரீகம் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) தமிழகத்தில் ஒரே குடும்பத்தில் இருபவர்களே ஒருவருக்கொருவர் சந்தித்து பெசிகொல்வதில்லை? அதேபோல் மற்ற கட்சியினருக்கு தங்கள் கடியினர் மற்ற கட்சியுடன் பேசினால் அவர்கள் கட்சி தாவிவிடுவார்கள் என பயம், அதனால் மற்ற கட்சியினருடன் பேசக்கூடாது பேசினால் கட்சியை விட்டு தூக்கி எறிவார்கள் அரசியலை பொருத்தவரை தமிழகத்தில் அநாகரிகம் தான் தொடரும் கட்சி வேறு மனித தன்மை வேறு என்று எப்போது அனைத்து கட்சிகளும் உணர்கின்றனரோ அன்று தான் அரசியலில் நாகரிகம் வரும் மேலும் மற்றவர் சொல்லும் நல்லதை கேட்கவேண்டும், மற்ற கட்சியினரை மதிக்கவேண்டும், மற்றவர்கள் நல்லது செய்தால் அவர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் புதிதாக வரும் ஒரு எம்.எல்.எ நல்ல விஷயத்தை முன் வைத்தால் அதனை எற்றுகொள்ளகுடிய அளவுக்கு சகிப்புத்தன்மை வரவேண்டும் இப்போதைக்கு தமிழகத்தில் சகிப்புத்தன்மையின்மை தான் சரசியல் கட்சிக்குள் இருக்கிறது என்பது தான் எதார்த்த உண்மை?
Rate this:
Share this comment
Cancel
Lokesh Raju - Chennai,இந்தியா
10-ஜன-201613:55:49 IST Report Abuse
Lokesh Raju தமிழக மக்கள் அதற்கு மயக்கத்தில் இருந்து வெளியே வர vendum....திராவிட கட்சிகளை தேர்தலில் மண்ணை கவ்வ வேய்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
10-ஜன-201613:08:09 IST Report Abuse
மஸ்தான் கனி நல்ல தலைவர்களை உருவாக மத்திய மாநில அரசியல் ஆரம்ப பள்ளியில் பாடமாக வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X