உணவே மருந்து-5; எண்ணெய் குளியல் மற்றும் எண்ணெய் கொப்புளிப்பு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

உணவே மருந்து

உணவே மருந்து-5; எண்ணெய் குளியல் மற்றும் எண்ணெய் கொப்புளிப்பு

Updated : ஜன 09, 2016 | Added : ஜன 09, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சமையலுக்கு உபயோகப்படும் தாவர எண்ணெய்கள் அளவுக்கதிகமாக உபயோகித்தால் நிச்சயம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.. அதை தேவையான அளவு மட்டும் உட்கொள்ள வேண்டியது அவசியம்.. பெரும்பாலும் நம் முன்னோர்கள் தாவர எண்ணெய்களை சமையலுக்கு மட்டுமன்றி உடல் சூட்டை தணிக்கும் விதமாக உடல் முழுவதும் பூசி குளிக்கும் வழக்கத்தை கடை பிடித்து வந்திருக்கிறார்கள். இதை "சனி நீராடு” என்ற ஆத்திசூடி வரி வாழ்க்கை நெறியாய் சொல்லித்தருகிறது . சனி நீராடு என்றால் சனிக்கிழமை என்னை தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஒரு சாரர் பொருள் கொள்கிறார்கள்... இன்னும் சிலர் அசனி நீராடு என்பது மருவியே சனி நீராடு என்று ஆனதாகவும், அசனி என்றால் சாம்பிராணி இலை என்றும், குளிக்கும் பொது நீரில் சாம்பிராணி இலையை போட்டு குளிக்க வேண்டும். இதனால் உடல் வாசனையாகவும், நோய் தொற்று இல்லாமலும் இருக்கும் என்றும் பொருள் கொள்கிறார்கள்....


பரிமேழகரோ சனி என்றால் காரி என்றும், அதாவது விடிகாலை என்றும் பொருள் கொள்கிறார். அதாவது அதிகாலையில் நீராட வேண்டும் என்று சொல்கிறார். எது எப்படியோ... நம்முடைய அனுபவங்களை வைத்து பார்த்தால் நல்லெண்ணையை உடல் முழுவதும் பூசி மசாஜ் செய்து சற்று நேரம் கழித்து குளித்தால் உடல் சூடு தணிவதை கண்கூடாக உணரலாம்...உடல்சூடு தணியும்: இது மட்டுமல்லாமல் , காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெய் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம். கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.நோய்களை குணப்படுத்தும்: நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயநோய்கள், பர்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.'ஆயில் புல்லிங்' மூலமாக மிக எளிமையான முறையில் குணமாகியும் இருக்கிறார்கள். தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர். நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம் குறையும்.


-ஈஸ்வரி, பீனிக்ஸ் ஹெல்த் கேர், அக்குபஞ்சர் மற்றும் உணவு மருத்துவம், 92/10, நூறடி சாலை, வடபழனி, சென்னை. 9940175326


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
29-அக்-201614:02:50 IST Report Abuse
Ramshanmugam Iyappan பயனுள்ள தகவல்கள், நன்றி
Rate this:
Share this comment
Cancel
manirangasamy - udumelpet,இந்தியா
18-ஜன-201610:35:24 IST Report Abuse
manirangasamy அந்தக்கால உணவு முறைகளுக்கும் தற்கால உணவு முறைகளுக்கும், உள்ள வித்தியாசத்தையும் ,தற்கால பணிக்கு தகுந்தாற்போல்,தற்கால உணவு முறைகள் இல்லை என்பதையும் ,தமிழ்க்கலாசாரத்தை தொலைத்துவிட்டோம் என்பதையும் கார்பரேட்டின் உணவுமுறைக்கு அடிமைகளாகி விட்டோம் என்பதையும், பிணிகளைப்பற்றியும் சுருக்கமாக,தெளிவாக,சேவை உள்ளத்துடன் பறைசாட்டிய கட்டுரையாளருக்கு பாராட்டுகள் பல,, என்று விடியும் இந்த அடிமையின் மோகம் ....
Rate this:
Share this comment
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
11-ஜன-201600:44:15 IST Report Abuse
Desabakthan அருமையான தொடர். நல்ல பழக்க வழக்கங்களை இப்போதைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வாய்ப்பு. கடைபிடிக்க முயலுவதுக்கு இக்கால கட்ட அவசர வாழ்கையில் கடினமே. இந்த அம்மணிக்கும், மலருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் மேலும் சேவைகளுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X