மன்மோகன் அரசை கவிழ்க்க சதி நடந்ததா? Dinamalar
பதிவு செய்த நாள் :
மன்மோகன் அரசை கவிழ்க்க சதி நடந்ததா?

புதுடில்லி:மன்மோகன் சிங் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அரசுக்கு தெரிவிக்காமல், ராணுவத்தின் இரு பிரிவுகள் டில்லியை நோக்கி
சென்றதாக கூறப்பட்டது.

 மன்மோகன் அரசை கவிழ்க்க சதி நடந்ததா?


இந்த விவகாரத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி மீண்டும் கிளப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த, 2012 ஜன., 16ல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஹரியானா மாநிலம், ஹிசார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தின் தரைப்படை பிரிவு, டில்லியை நோக்கி சென்றதாக, ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. அதே நாளில், உ.பி., மாநிலம், ஆக்ராவில் இருந்து

மற்றொரு ராணுவப் பிரிவும், டில்லியை நோக்கி சென்றதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ராணுவ பிரிவுகள், டில்லியை நோக்கி சென்ற தகவல், மத்திய அரசுக்கே தெரியாது என்றும், மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியை

கவிழ்க்கவே அவை சென்றதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற, காங்., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரியிடம், 2012ல், ராணுவ பிரிவுகள், டில்லியை நோக்கி சென்ற சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த திவாரி, 'ராணுவத்தின் பிரிவுகள், டில்லியை நோக்கி சென்றது உண்மையே; அச்சம்பவம் துரதிருஷ்டவசமானது' என, தெரிவித்தார். இச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் ராணுவ தளபதியாக பதவி வகித்தவரும்,தற்போதைய மத்திய அரசில், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை இணை அமைச்சராக பதவி வகிப்பவருமான வி.கே.சிங், திவாரியின் கருத்தை மறுத்துள்ளார். அவர் நேற்று கூறுகையில், ''முன்னாள் அமைச்சர்

Advertisement

மணீஷ் திவாரி கூறிய கருத்து, முற்றிலும் தவறானது. தற்போது அவருக்கு எந்த வேலையும் இல்லாததால், இப்படி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, நான் எழுதிய புத்தகத்தை படித்து, அவர் விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

கடந்த, 2012ல், ராணுவத்தின் படை பிரிவுகள், டில்லி நோக்கி சென்றதாக கூறப்படும் செய்தியில் துளியும் உண்மை இல்லை. இக்கருத்தை கூறிய திவாரி, கேபினட் குழு உறுப்பினராகவோ, சம்பந்தப் பட்ட முடிவை எடுக்கும் குழு உறுப்பினராகவோ அப்போது பதவி வகிக்கவில்லை.
அபிஷேக் சிங்வி காங்., செய்தித் தொடர்பாளர்

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201615:09:49 IST Report Abuse

K.Sugavanamநெருப்பில்லாம புகை வந்திருக்க முடியாது..அந்தப் பத்திரிகை மீது வழக்கொன்றும் பதியப் படவில்லையே..

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201613:53:02 IST Report Abuse

Chandramoulliகாங்கிரஸ் கட்சி ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் நடந்தது கூட பிரதம மந்திரிக்கு தெரியவில்லை என்கிற பொது மிக வருத்தமாக உள்ளது . இவர்களிடம் போய் நாட்டை ஒப்படைப்பதா >>>>>>> மிக கேவலம் . காங்கிரஸ் கட்சி இனிமேல் ஆட்சிக்கு வர லாயக்கு இல்லை . கை சின்னம் இல்லை என்றால் எவரும் காங்கிரஸ் கட்சியை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்

Rate this:
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
11-ஜன-201612:06:00 IST Report Abuse

Ravichandran Narayanaswamyஇந்த தூங்கு மூஞ்சை யார் எழுப்பினது - சோனியா வீட்டிற்கு பால் வாங்கி தந்துட்டாரா - நாயெல்லாம் குளிச்சாகிவிட்டதா - சந்தானம் பாஷையில் சொல்வதானால் - சில மூஞ்சை அஞ்சு நிமிஷத்துக்கு மேல் பார்க்க முடியாது - நாட்டை சீரழித்த ஊமைத்துரை - ஜெய் ஹிந்த்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X