'ஆடை கட்டுப்பாடு கோரி மனுவே கொடுக்காத போதுஎப்படி அது குறித்து உத்தரவு போட முடியும்?' Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆடை கட்டுப்பாடு கோரி மனுவே கொடுக்காத
போது எப்படி அது குறித்து உத்தரவு போட முடியும்?'

மதுரை: 'கோவில்களில் பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும்' என, கட்டுப்பாடு விதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தடை விதித்தது.

 'ஆடை கட்டுப்பாடு கோரி மனுவே கொடுக்காத போதுஎப்படி அது குறித்து உத்தரவு போட முடியும்?'


திருச்சி, துவரங்குறிச்சி அருகே, ராஜு என்பவர், 'போலீஸ் பாதுகாப்புடன் கோவில் திருவிழாவில், கிராமிய ஆடல், பாடல் நடத்த அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.பாரம்பரிய உடைதனி நீதிபதி, 'எந்த ஒரு சமூகமும், தலைவர்களை வாழ்த்தி பாடக்கூடாது. பக்தர்கள் அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்திருந்தால் கோவிலில் அனுமதிக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது' என, இடைக்கால உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,

'கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் பாரம்பரியவேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும்.

'இந்த ஆடைகட்டுப்பாட்டை, 2016, ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமல்படுத்த, அறநிலையத் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது. இதை எதிர்த்து, அறநிலையத் துறை செயலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
எங்கள் தரப்பில் விளக்கம் கோராமல், தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு கோவிலுக்கும், தனித்தனி பழக்க வழக்கம், பாரம்பரியம், தனித்துவம் உள்ளது. ஒரே சீரான ஆடை கட்டுப்பாடு பின்பற்ற முடியாது. திருச்செந்துார் கோவிலில், ஆண் பக்தர்கள், மேலாடை அணியாமல் செல்லும் நடைமுறை உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பெரிய கோவில்களுக்கு, வட மாநிலத்தினர், வெளிநாட்டினர்வருகின்றனர். அவர்களை, குறிப்பிட்ட ஆடைகள் அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்க முடியாது.

ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை: இது மக்களின் பழக்க வழக்கம், உணர்வுகள் சம்பந்தப்பட்ட

Advertisement

பிரச்னை. தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டத்தில், பக்தர்கள் அணிந்து வர வேண்டிய ஆடைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய உத்தரவு எதுவும் தேவையில்லை. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டது. நீ

திபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு, இம்மனுவை விசாரித்தது. அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, ''அக்கியம் பட்டியில் கோவிலில் திருவிழா கலை நிகழ்ச்சி நடத்தவே, மனுதாரர் அனுமதி கோரியுள்ளார். ஆடை கட்டுப்பாடு பற்றி, அவர் எவ்வித நிவாரணமும் கோராத நிலையில், தனி நீதிபதி தானாக முன்வந்து உத்தரவிட்டுள்ளார்,'' என்றார். பின், தனி நீதிபதி உத்தரவிற்கு, ஜன., 18 வரை,நீதிபதிகள் தடை விதித்தனர்.

Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
12-ஜன-201618:59:54 IST Report Abuse

Sathish தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் உடைக்கட்டுப்பாடு வராவிட்டால் பாலியல் குற்றங்கள் நிச்சயமாக குறையவே குறையாது. அதிகரிக்கத்தான் செய்யும்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஜன-201617:40:27 IST Report Abuse

K.Sugavanamசாமி கும்புடுலாமில்லா..இல்லா அதுக்கும் அதாவது கண்டிஷன்க உண்டா?

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஜன-201617:39:09 IST Report Abuse

K.Sugavanamவிவஸ்தையே இல்லாம போச்சுது..

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X