விருகம்பாக்கம் ஏரி மாயம்: வளசரவாக்கத்தில் 40 நாள் வெள்ளம்| Dinamalar

விருகம்பாக்கம் ஏரி மாயம்: வளசரவாக்கத்தில் 40 நாள் வெள்ளம்

Updated : ஜன 23, 2016 | Added : ஜன 12, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சமீபத்திய பெருமழை வெள்ளத்தில், வளசர வாக்கம் மண்டலத்தின், 145, 146, 147, 148, 149 ஆகிய ஐந்து வார்டுகள், மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரியின் உபரி நீரால், முழுமையாக வெள்ளத்தில் சிக்கின. தீபாவளிக்கு மறுநாள் தேங்கிய மழைநீர், டிச., கடைசி வாரத்தில் தான் வடிந்தது. குடியிருப்புகளில், 40க்கும் மேற்பட்ட நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றதால், பலர் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.அத்தனை நாட்கள், ஐந்து வார்டுகளில் வெள்ளம் தேங்க என்ன காரணம்? நமது நிருபர் குழுவின் கள ஆய்வில், பல உண்மைகள் தெரியவந்தன.
வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டில் மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரி உள்ளது. 14௮வது வார்டில் விருகம்பாக்கம் ஏரியும், பல தாங்கல்கள், குளங்களும் இருந்திருக்கின்றன; தற்போது எவையும் இல்லை. அவற்றில், ஆலப்பாக்கம் ஏரியின், போக்கு மற்றும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் தான், ஐந்து வார்டுகளிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் எப்படி வெளியேறியது?மொத்தம், ௧௪௦ ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆலப்பாக்கம் ஏரி, ஆக்கிரமிப்பால், தற்போது ஒரு ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி விட்டது.  காட்டுப்பாக்கம், நுாம்பல், தெள்ளியரகரம், செட்டியார் அகரம், வானகரம், சிவபூதம், மேட்டுக்குப்பம், ஓடமான் நகர், ஷேக் மானியம் ஆகிய பகுதிகளில் இருந்து, ஆலப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்துள்ளது. ஆலப்பாக்கம் பிரதான சாலை - கிருஷ்ணா நகர் 1வது பிரதான சாலை சந்திக்கும் இடத்தில் ஒரு கலங்கல் இருந்தது. அந்த கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், ஒரு கால்வாய் மூலம், கிருஷ்ணா நகர் வழியாக, நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தில் உள்ள, கங்கை அம்மன் கோவில் முன்புள்ள குளத்தை நிரப்பும்அங்கிருந்து, மற்றொரு கால்வாய் மூலம், விருகம்பாக்கம் ஏரிக்கு நீர் செல்லும். தற்போது இந்த கால்வாய், மழைநீர் வடிகாலாக சுருங்கி விட்டது. சமீபத்திய மழை வெள்ளத்தை வெளியேற்ற, இந்த வடிகால், முற்றிலும் உருக்குலைக்கப்பட்டு விட்டது. விருகம்பாக்கம் ஏரியில் இருந்து, ஒரு கால்வாய் மூலம், மேட்டுக்குப்பம் மடுவுக்கும், யானை மதகு என சொல்லப்பட்ட பெரிய மதகு மூலம், பாசன வயல்களுக்கும் நீர் செல்லும். இந்த யானை மதகில் இருந்து தான், விருகம்பாக்கம் கால்வாய் புறப்பட்டிருக்க வேண்டும் என, கருதப்படுகிறது. இந்த கால்வாய் ஒரு காலத்தில், ௯௦ அடி அகலமுள்ளதாக இருந்திருக்கிறது. தற்போது, ௧௦ முதல் ௬௦ அடி அகலம் வரை இருக்கிறது.தற்போதைய விருகம்பாக்கம் கால்வாய், கோயம்பேடு சின்மயா நகர் வழியாக, சூளைமேட்டில், கூவம் ஆற்றில் இணைகிறது.அதேபோல், இன்றைய நெற்குன்றம், கோவர்த்தனம் நகர், பாலவிநாயகம் நகர் பகுதிகளில், ஒரு காலத்தில், தாங்கல் இருந்துள்ளது. ஆலப்பாக்கம் ஏரி நீர், இந்ததாங்கலில் நிரம்பி, பின், விருகம்பாக்கம் ஏரிக்கு வந்திருக்கிறது.வேறு எங்கே பாதிப்பு?மதுரவாயல் பகுதி கூவம் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க, தற்போதைய மழைநீர் வடிகால்கள் மூலம் அந்த வெள்ளம் திரும்பி பாய்ந்து, குடியிருப்புகளில் புகுந்து விட்டது. அதேபோல், வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டில் உள்ள, எம்.எஸ்.பி., நகர், ஓம் சக்தி நகர், பிள்ளையார் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, வி.ஜி.பி., அமுதா நகர் ஆகிய நகர்கள், மதுரவாயல் பகுதி கூவம் ஆற்றின் கரையோரம் உள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்டன. மேலும், 143வது வார்டு, ஸ்ரீராம் நகர், வி.ஜி.என்., நகர், கஜலட்சுமி நகர், நொளம்பூர் பேஸ் - 1, சென்னை புறவழிச்சாலையின் அணுகுசாலை ஆகியவை, அம்பத்துார் ஏரி மற்றும் அயனம்பாக்கம் ஏரி உபரி நீரால் பாதிக்கப்பட்டன.
அழிப்பதில் மும்முரம்!கடந்த, 1980களில் இருந்து, விருகம்பாக்கம் ஏரி, படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏரி, வருவாய் துறை ஆவணத்தில் மட்டும் தான் உள்ளது. இந்த நிலையில், மேட்டுக்குப்பம் கங்கை அம்மன் கோவில் குளத்தை, குடிநீர் வாரியம் முற்றிலுமாக துார்த்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நீர்நிலைகளைக் காக்க வேண்டிய அரசு துறைகள், அவற்றை அழிக்கும் பணியை மட்டும் மும்முரமாகச் செய்து கொண்டிருக்கின்றன.ஒருவேளை, ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரமிக்கப்படாமல் முழுமையாக இருந்தால், விருகம்பாக்கம் ஏரி மறையாமல் இருந்தால், வளசரவாக்கமே வெள்ளத்தில் மிதந்திருக்காதோ என, நினைக்கத் தோன்றுகிறது. - நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X