ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு

Updated : ஜன 18, 2016 | Added : ஜன 18, 2016 | கருத்துகள் (116)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு, சென்னை முதன்மை அமர்வு சிறப்பு கோர்ட்டில் இன்று (18ம் தேதி) நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக, கருணாநிதி, கோர்ட்டில் நேரில் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருடன் பொருளாளர் ஸ்டாலினும் வந்திருந்தார்.
4 ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு சாதித்தது என்ன? என்ற தலைப்பில், நவம்பர் மாதம் வார இதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டது. இந்த கட்டுரையை திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையாக வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதை பரிசீலித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன், வழக்கு ஆவணங்களை ஜனவரி 18ம் தேதி நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு கருணாநிதிக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.இதுபோன்ற வழக்குகளில் கருணாநிதி இதுவரை நேரில் ஆஜரானதில்லை. அதனால் இந்த வழக்கிலும் ஆஜராவதற்கு தடை வாங்கலாம் என கருணாநிதிக்கு நெருக்கமானவர்கள் கூறி உள்ளனர்.


நேரில் ஆஜராக முடிவு

: இந்நிலையில், கடந்த வாரம் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஆட்சி அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக அதிமுக அரசு எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து ஒடுக்க நினைக்கிறது. ஜெயலலிதா என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். ஆனாலும் திமுக., வழக்கறிஞர்கள் என்னை சந்தித்து, இந்த வழக்கில் இடைக்காலத் தடையாணை பெறலாம் என்று யோசனை தெரிவித்த போது, அது தேவையில்லை என்றும் நானே நேரில் நீதி மன்றத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்திருக்கிறேன். ஜனவரி 18ம் தேதி காலை 10.30 மணியளவில் கோர்ட்டில் ஆஜராக உள்ளேன் என தெரிவித்திருந்தார்.


பலத்த பாதுகாப்பு:

வழக்கை விசாரிக்கும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்ற வளாகத்தில் முதல் மாடியில் உள்ளது. மேலே செல்ல லிப்ட் வசதி உண்டு. எனவே லிப்ட் மூலமாக கருணாநிதி இன்று கோர்ட்டில் ஆஜரானார். கோர்ட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட்டில் ஏற்கனவே மத்திய படை பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
20-ஜன-201607:12:09 IST Report Abuse
ezhumalaiyaan இந்த செய்தியை மட்டும் 3 நாட்களாக தினமலர் வைத்திருக்கும் ரகசியம் என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
19-ஜன-201610:57:37 IST Report Abuse
Chandramoulli நீதிமன்ற வளாகத்தில் இருந்து கருணாநிதி அவர்கள் திரும்பும் போது, நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். விஜயகாந்த் அவர்களுடன் கூட்டணி , மற்றும் பத்திரிகை அவமரியாதை பற்றிய கேள்விக்கு கை அசைத்து விட்டு சென்று விட்டார் . இவர் மட்டும் ஏடா கூடமா பதில் அளித்து இருந்தால் விஜய்காந்தூ அவர்கள் எப்படிப்பட்ட பதில் அளித்து இருப்பார் என்று ஊகம் செய்ததை நினைத்து மஞ்ச துண்டு சென்று விட்டார்
Rate this:
Share this comment
Cancel
tamilarasan k - madurai,இந்தியா
19-ஜன-201609:12:53 IST Report Abuse
tamilarasan k அவதூறு வழக்குகேல்லாம் எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதற்காக நானும் ரவுடிதான் என்று தலைவர் ஆஜராகி விட்டார்..இதே தைரியம் ஏன் 2ஜி வழக்கில் இல்லை..மனைவி தயாளுவை கோர்ட் அழைத்தபோது அவருக்கு மறதி நோய் என்று சொல்லி ஏன் தப்பித்தார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X