'ஆதார்' அடையாள அட்டை வைத்திருக்கும் இளைஞர்கள் 92 சதவீதம் : வரலாற்று சாதனை படைக்கிறது மத்திய அரசின் திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
92 சதவீதம் !
ஆதார்' அடையாள அட்டை வைத்திருக்கும் இளைஞர்கள்...
வரலாற்று சாதனை படைக்கிறது மத்திய அரசின் திட்டம்

புதுடில்லி:நாட்டின், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில், 92 சதவீதம் பேருக்கு, 'ஆதார்' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், தகுதி உடையவர்களுக்கு மட்டும் சென்றடைவதோடு, நிதியுதவிகளில் மூன்றாம் நபரின் தலையீடு தடுக்கப்பட்டுள்ளது.

'ஆதார்' அடையாள அட்டை வைத்திருக்கும் இளைஞர்கள் 92 சதவீதம் : வரலாற்று சாதனை படைக்கிறது மத்திய அரசின் திட்டம்

நாட்டில் உள்ள, 128 கோடி மக்கள்தொகையில், 2015, டிசம்பர் 31 வரையில், 95 கோடி பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2009ல் தொடங்கப்பட்டு, இதுவரை, 7,100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள, இந்த திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 92 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரலாற்று சாதனை நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்டது. இது, உலக நாடுகள் எங்கும் காண முடியாத சாதனையாக, மத்திய அரசு வட்டாரங்கள் கருதுகின்றன. சமையல் காஸ் உள்ளிட்ட சில திட்டங்களுக்கான மானியம், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள, தனி நபர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.


எவ்வித சிக்கலும் இன்றி, மானிய பலன்கள், சமையல் காஸ் பெறுபவர்களுக்கு கிடைக்கிறது. அரசின் மானியங்களை பெறக் கூடியவர்களாக உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 92 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை கிடைத்துள்ளதால், அரசு மற்றும் பிறவிண்ணப்பங்கள் வெளிப்படையானதாகவும், குழப்பம் இன்றியும் நடைபெறுகின்றன.மேலும், ஆதார் வாயிலாக, மானியங்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதால், போலி பெயர்களில் சுருட்டுவது, லஞ்சம், ஊழல் தடுக்கப்படுகிறது.

ரூ.60 ஆயிரம் கோடி தப்பும்!

*அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களைப் பெறுபவர்களில், 15 சதவீதம் பேர் போலியான, பொய்யான பெயர்களில் அந்த பலன்களை அனுபவித்து வந்தனர். ஆதார் அதிகரிப்பால், அந்த முறைகேடுகள் களையப்படுகின்றன
* ஆண்டுக்கு, 3.5 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இது, நேரடியாக பயனாளிக்கு கிடைக்கும் போது, 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை, போலிகளுக்கு செல்லாமல் தடுக்கப்படும்.

'ஆதார்' என்றால் என்ன?
* ஒவ்வொருவருக்கும், 12 இலக்க எண்கள் வழங்கப்படுகிறது. அதில், பெயர், வயது, முகவரி, புகைப்படம் இடம்பெற்றுள்ளது
* விரல் ரேகைகள், கண் மணியும் பதிவு செய்யப் படுகின்றன. இதனால் ஒருவர் பெயரில், ஒரு ஆதார் அட்டை தான் பெற முடியும்
* இதுவும் ஒரு அடையாள அட்டை தான். ஆனால், இந்த அட்டையை வைத்து இந்தியக் குடியுரிமை

Advertisement

உட்பட எந்த உரிமையையும் கோர முடியாது
* ஆதார் அட்டை பெறாதவர்கள், ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற விவரங்களையும், ஆன்லைன் மூலமாகவே திருத்திக் கொள்ளலாம்.

சட்ட அங்கீகாரம் இல்லை!:

கடந்த 2010 முதல் ஆதார் அட்டை வழங்கப் படுகிறது.கர்நாடக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசுவாமி, 2012, நவம்பரில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். எவ்வித சட்டப் பாதுகாப்பும் இல்லாமல், ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டுஉள்ளதால், அதை கட்டாயமாக்கக் கூடாது என கோரினார்.

அதன் பிறகு, மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது வரை, ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்லை.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Kovilpatti.,இந்தியா
22-ஜன-201619:16:10 IST Report Abuse

தமிழன்வெளிநாடுகளில் இதை (சிடிசன் கார்டு ) எப்பொழுதும் உடன் வைத்திருக்க வேண்டும். இது நமக்கு புதிது..... பயன்பாடு முழுமை அடைந்தால் வெற்றி பல மடங்கு........

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஜன-201614:36:39 IST Report Abuse

K.Sugavanamஅன்று எதிர்ப்பு...இன்று புளகாங்கிதம்..நடுவால என்ன மற்றம் வந்ததோ.. ஆடாருக்கே வெளிச்சம்..

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜன-201615:13:35 IST Report Abuse

Nallavan Nallavanஆட்சி மாறும்போது ஆதார் அட்டைக்கு வேலை செய்யும் கான்ட்ராக்டர் என்ன சொல்லியிருப்பாரு ???? முன்னாடியே "வேணும்கிற" அளவுக்குச் செலவு பண்ணிட்டேன் -ன்னு சொல்லியிருப்பாரு .... அதுல சமரசம் வந்திருக்கும் .......

Rate this:
Subbu - chennai,இந்தியா
22-ஜன-201614:03:28 IST Report Abuse

Subbuஇந்த ஆதார் அட்டைக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைக்க வேண்டும், மேலும் வெளிநாட்டவர்கள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள் போன்ற பலர், சட்ட விரோதமாக பலர் பல பான் கார்ட்/ஒட்டர் ஐ.டி. வைத்து இருப்பதை போல இதிலும் வாங்க விடக்கூடாது. இதை வைத்து இருப்பவர்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படவேண்டும். ரேஷன் கார்டுகளில் பல முறைகேடுகள் போலிகள் உள்ளன, ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைத்து விவரங்கள் ஆராயப்பட்டு போலி கார்டுகள் நீக்கம் செய்யப்படவேண்டும். ரேஷன் பொருட்கள் உண்மையான ஏழை மக்களுக்கு மட்டுமே போய் சேர வேண்டும், இதில் பல்வேறு தரப்பு கோடி, கோடியான ருபாய் ஊழல்கள் உள்ளன, இதை சரி செய்தால் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் மிச்சம் ஆகும்.

Rate this:
Indian - India,இந்தியா
22-ஜன-201613:09:22 IST Report Abuse

Indianஆதார் ஒரு மனிதன் மரணத்துக்கு பின் அந்த தகவலை சேகரித்து, அந்த அட்டையை Invalid ஆக்கி...Database ஐ செய்கிறதா? இல்லை என்றால்...அந்த தகவல்கள் முழுமை என்று கொண்டு..ஒரு முடிவுக்கு வரமுடியாது... வேண்டுமென்றால்... Driving Licence, Ration Card போல இன்னும் ஒரு அடையாள அட்டை என்று தான் இருக்கும்.

Rate this:
twodotzero - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-201612:56:17 IST Report Abuse

twodotzerotypo error? 29% or 92% ? எனக்கு தெரிந்தவரை நிறைய பேரிடம் இந்த அட்டை இல்லை.

Rate this:
Divaharan - Tirunelveli,இந்தியா
22-ஜன-201612:43:06 IST Report Abuse

Divaharanகருப்பு பணம் ஊழல் பணம் இவற்றை ஒழிக்க ஆதார் உதவும்

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
22-ஜன-201610:27:01 IST Report Abuse

தாமரை எங்கள் பழனியில் பதிந்துள்ள பலருக்கும் இன்னும் வந்தே சேரவில்லை. ஏனோ?

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜன-201613:36:38 IST Report Abuse

Nallavan Nallavanகார்டு வரவில்லை என்றால் முறையாகப் புகார் செய்ய இணையத்தில் வசதி உள்ளதே .... கருத்து எழுதும் உங்களுக்கு இது கடினமான காரியமா தாமரையே ????...

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
24-ஜன-201618:12:18 IST Report Abuse

தாமரை அதையும் செய்து கொண்டுதானிருக்கிறேன் நண்பரே.இருந்தாலும் தகவல் தொடர்பு சாதனங்கள்மூலம் இவை வெளிப்படும்போது நடவடிக்கை வேகம் பெறும்....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-ஜன-201609:22:52 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லோருக்கும் ஆதார் அட்டை கொடுத்த பிறகு மார்தட்டலாம்.

Rate this:
vandu murugan - chennai,இந்தியா
22-ஜன-201612:49:24 IST Report Abuse

vandu muruganஅது வரைக்கும் எதை தட்டுறது...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-201604:02:40 IST Report Abuse

Kasimani Baskaranஆதரை 100% அடையாள அட்டையாக கொண்டுவந்து அரசாங்கம் வழங்கும் எல்லாவிதமான சேவைகளுக்கும் பயன்படுமாறு நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.. ஆள் மாறாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும்..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement