மத்திய அரசு விழாவை புறக்கணித்த எம்.பி.,க்கள்: அமைச்சரின் செயலால் அதிகாரிகள் அதிருப்தி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அரசு விழாவை புறக்கணித்த எம்.பி.,க்கள்
அமைச்சரின் செயலால் அதிகாரிகள் அதிருப்தி

மத்திய அரசு விழாவில் பங்கேற்பதை தவிர்த்த, மாநில அமைச்சர் மற்றும் எம்.பி.,க்களின் செயல், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 மத்திய அரசு விழாவை புறக்கணித்த எம்.பி.,க்கள்: அமைச்சரின் செயலால் அதிகாரிகள் அதிருப்தி

தமிழகத்தில், நான்கு தேசிய நெடுஞ்சாலைகளை, 2,766 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இம்மாதம், 19ல் கன்னியாகுமரியில் நடந்தது. மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில், 286 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கும், அடிக்கல் நாட்டப்பட்டது.

மத்திய அரசு சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய

சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தைச் சேர்ந்த, எட்டு எம்.பி.,க்கள், மற்றும்துறை அதிகாரிகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விழாவில், மாநில அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.பி.,க்கள் எட்டு பேர் பங்கேற்கவில்லை; மாநில நெடுஞ்சாலைத்துறை செயலர் ராஜீவ் ரஞ்சன் மட்டுமே பங்கேற்றார்.
விழாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், ''தமிழகத்தில், ஒன்பது மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை யாக தரம் உயர்த்த, 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாலைமேம்பாட்டு பணிகளை செய்ய இணை யமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி அளிக்கப்படும். முதல்வர் மற்றும் அமைச்சர்களை கலந்து பேசி, இத்திட்டங்களை செயல்படுத்தலாம்,'' என பேசினார்.
அமைச்சர் கட்காரியின் இந்த அறிவிப்பு,

Advertisement

பொதுமக்கள் மற்றும் துறை அதிகாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுஉள்ளது. எனினும், 'மாநில அமைச்சர் மற்றும் எம்.பி.,க்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தால், மத்திய அமைச்சருடன் கலந்து பேசி, கூடுதல் திட்டங்களுக்கு நிதி உதவி பெற்றிருக்கலாம்' என, துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநில அமைச்சர் மற்றும் எம்.பி.,க்களின் இந்த செயல், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர் --

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
23-ஜன-201601:03:50 IST Report Abuse

மதுரை விருமாண்டிமாநில அரசியின் சபை சார்ந்த கொடுஞ்சாலை துறையில் இருந்து ஆள் வரணுமுன்னா கமிஷனை முன்பணமாக் கொடுக்கோணும்.. இது மம்மிஜியின் பாலபாடமாச்சே..

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-ஜன-201614:55:27 IST Report Abuse

Pasupathi Subbianகூழை கும்பிடு போடும் இந்த கோழைகளால் நடக்கப்போவது ஒன்றும் இல்லை. ஆதலால் இவர்கள் வராததே மேல்.

Rate this:
krishnamoorthy - chennai,இந்தியா
22-ஜன-201612:46:08 IST Report Abuse

krishnamoorthyஇந்த மாதிரி விஷயத்தில் தி.மு.க எவ்வளோ மேல். நிச்சயம் அவர்கள் ஊழல் செய்திருப்பார்கள், ஆனால் நன்மையையும், சிறு தீமையையும் ஆளவிட்டு பார்த்தால் கடந்த 15 ஆண்டுகளில் வாஜ்பாயி, மன்மோஹன் அரசுகளின் மூலம் தமிழகம் எந்த அளவிற்கு பயனடைந்த்தது என்று தெரியும். அதே வேளையில் இந்த அம்மையாரின் அடாவடிதனத்தால் மத்திய அரசின் பல திட்டங்கள் முடக்கப்பட்டதும்,தெரியும். பா.ஜ.க உன்மையிலேயே நாட்டின் மீது அக்கறை கொண்டிருந்தால் இந்த அண்ணா. தி.மு.கவுடன் எந்த ஒட்டும் உறவும் வைத்துகொள்ளகூடாது. ஆனாலும் அதிலுள்ள பிராமணர்களான அருனின் நிலைதான் கட்சியின் நிலையென்றால் கூட்டு நிச்சயம். இதற்கும் நமது முஸ்லீம் லீக்கின் நபர் ஏதாவது கதை சொல்வார், அதற்கு குடியரசுவும் ஜால்ரா அடிப்பார்.

Rate this:
christ - chennai,இந்தியா
22-ஜன-201612:03:56 IST Report Abuse

christமத்திய அரசு உதவி செய்யவில்லை என்றால் என்னோடைய அரசுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வில்லை என புகார் புராணம் படவேண்டியது. உதவிகள் செய்ய காத்து இருந்தும் பொறுப்பற்ற முறையில் மக்கள் நலனில் அக்கரை இல்லாத இவர்களை வரும் தேர்தலில் தூக்கி எறிய வேண்டும் .

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜன-201611:55:41 IST Report Abuse

Chandramoulliசபை நாகரீகம் தெரியாமல் தமிழிசை , முரளிதர் ராவ் இங்கு அரசியல் பேசி பிரச்சனை உண்டு பண்ணுபவர்கள் . மேலும் மாநில பி ஜே பி தலைமை மாநில அரசுடன் முரண்பட்டு செல்கிறது . மத்திய உதவி இன்னமும் சரியான முறையில் கிடைக்கவில்லை . எல்லாவற்றிலும் அரசியல் . இங்கு உள்ளவர்களின் எண்ணங்கள் மாறினால் நல்லது . முன்னேற்றம் அடையும் .

Rate this:
பாரதி - Chennai ,இந்தியா
22-ஜன-201614:18:26 IST Report Abuse

பாரதி பிஜேபி மாநில தலைமை அதிமுகவிற்கு மத்தளம் வாசிப்பதற்க்காக ஏற்படுத்த படவில்லை...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஜன-201614:46:51 IST Report Abuse

K.Sugavanamஅதேதானே அவங்களும் சொல்லுவாங்க......

Rate this:
christ - chennai,இந்தியா
22-ஜன-201611:21:59 IST Report Abuse

christதலைவியின் உத்தரவு வரவில்லை இந்த அடிமைகளுக்கு அதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை இந்த அடிமைகள் .

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜன-201610:51:28 IST Report Abuse

Lion Drsekarஉண்மையைப் பேசினால் நேதாஜி கதிதான் , வந்தே மாதரம்

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
22-ஜன-201610:46:46 IST Report Abuse

ganapati sbமத்திய அமைச்சர்கள் சிலர் திறம்பட வேலை செய்து வருகின்றனர் அதில் கத்காரி குறிப்பிடத்தக்கவர் சாலை துறைமுகம் கட்டமைப்பில் வேகத்தை கூட்டியுள்ளார். பியுச்கோயல் சுரேஷ்பிரபு சுஸ்மா அருண்ஜெட்லி ரவிசங்கர் பரிக்கர் போன்றோரும் சிறப்பாக பனி புரிகிறார்கள். ராஜ்நாத்தும் ராதாமோகன் சிங்கும் வேகமெடுத்து வருகிறார்கள். நிதிஷ் உம்மன்சண்டி சித்தராமையா போன்றவர்கள் எதிர்கட்சியாக இருந்தாலும் பிரதமரை மத்திய அமைச்சர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சந்திப்பதை பாருங்கள். தமிழக மாநில அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்களது துறை அல்லது மாநிலம் சம்பத்தப்பட்ட கோரிக்கைகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்துவது மாநில மக்களுக்கு நல்லது.

Rate this:
ARUN - coimbatore,இந்தியா
22-ஜன-201614:33:25 IST Report Abuse

ARUNஅருண்ஜெட்லியின் திறன் இன்னும் அதிகமாக வளரவேண்டியுள்ளது.என்பதே பொருளாதார துறையில் இருப்பவர்களின் கருத்து....

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
22-ஜன-201617:36:20 IST Report Abuse

Chandramoulliநிதி இலாகா மிக மோசம் . உடன் சரி செய்ய வேண்டிய துறை . பி ஜே பி யில், நிதி துறையை கையாளும் அளவிற்கு பொருளாதார நிபுணர்கள் இல்லை . சு.சாமி - திறமை உண்டு ஆனால் அந்த பதவிக்கு சரியானவர் இல்லை . அருண் ஷோரி - தகுதியானவர் - உள்கட்சி சண்டை .3 ) HDFC தீபக் பாரிக் 4 ) பியுஷ் கோயல் தகுதியானவர் . மின்துறையை பிரமாதமாக கையாளுகிறார் . அவருக்கு மாற்று யார் . வெற்றி பெற்ற எம்.பி க்களில் தகுதியான நபர்கள் இல்லை ....

Rate this:
g k - chennai  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201610:33:21 IST Report Abuse

g kமக்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும் ஆனால் செய்வார்களா ஆயிரமோஇரண்டாயிரமோ பிச்சையிட்டால் உடனே கும்பிடு போட்டு ஓட்டு போட்டுவிடுவார்கள் நம் மக்களின் தரம் தெறிந்துதான் நம் அரசியல் வாதிகள் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்

Rate this:
gmk1959 - chennai,இந்தியா
22-ஜன-201610:11:31 IST Report Abuse

gmk1959அமைச்சர் அடிமைகளை விட அதிகமாக குனிய போகும் டெல்லி பாஜக தலைவர்களை விரைவில் காண தவறாதீர் விரைவில் நடைபெற போகும் மோடி அமித் சர்க்கஸில்

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement