அமைச்சர் நத்தம் அறிவிப்பால் 'குடி'மகன்கள் குஷி ' : மது விலக்கை அமல்படுத்தவே முடியாதாம்' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர் நத்தம் அறிவிப்பால் 'குடி'மகன்கள் குஷி ' : மது விலக்கை அமல்படுத்தவே முடியாதாம்'

சென்னை: ''தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவே முடியாது,'' என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், 'குடி'மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர். மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.

அமைச்சர் நத்தம் அறிவிப்பால் 'குடி'மகன்கள் குஷி ' : மது விலக்கை அமல்படுத்தவே முடியாதாம்'

தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகள் எல்லாமே, இதை ஆதரித்து குரல் கொடுத்தன. தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது, இதற்கு அரசு செவி சாய்க்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடத்திலும் இருந்தது.

இந்நிலையில், இந்தப் பிரச்னை நேற்று சட்டசபையில் ஒலித்தது. தே.மு.தி.க., உறுப்பினர் பார்த்தசாரதி இதை கிளப்பினார். அதற்கு ஆதரவாக, தி.மு.க., - மா.கம்யூ., கட்சி உறுப்பினர்களும் பேசினர்.அது பற்றிய பரபரப்பு விவாதம் வருமாறு:

தே.மு.தி.க., - பார்த்தசாரதி: 'பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என, அனைத்து கட்சிகளும், கோரிக்கை விடுத்துள்ளன; ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மதுக்கடைகளை மூடி, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தமிழகம் ஏன் இருக்கக் கூடாது?

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: யார் தான் இந்தக் கோரிக்கையை வைப்பது என்ற விவஸ்தை இல்லையா; இது தொடர்பாக, சட்டசபையில் பல முறை பேசி உள்ளேன். நடைமுறை சூழ்நிலையில், தமிழகத்தில், மது விலக்கு சாத்தியமல்ல. மது விற்பதில், எங்களுக்கும் உடன்பாடு இல்லை. ஆனாலும், வருத்தத்தோடு தான் இதை

செய்கிறோம். இந்தப் பிரச்னைக்கு பதில் அளிக்க, கருணாநிதி கூறிய கருத்தை இரவல் வாங்குகிறேன். 'எரிகிற நெருப்பு ஜூவாலைக்கு மத்தியில், கற்பூரம் பாதுகாப்பாக இருக்க முடியாது' என, அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

தி.மு.க., - துரைமுருகன்: மது விலக்கை அமல்படுத்த முடியுமா, முடியாதா; அதை கூறுங்கள்.நத்தம் விஸ்வநாதன்: மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், மது விலக்கை அமல்படுத்தினால், அதை ஆதரிக்கும் முதல்ஆளாக, முதல்வர் ஜெயலலிதா இருப்பார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., - சவுந்திரராஜன்: மது விலக்கை அமல்படுத்தினால், வருவாய் இழப்பு ஏற்படும் என, பயப்படுகிறீர்கள்.

விஸ்வநாதன் : அது, ஒரு காரணம். மதுக்கடைகளை மூடினால், தமிழகத்திற்கு வர வேண்டிய வருவாய், பக்கத்து மாநிலங்களுக்கு சென்று விடும். 'நம் வீட்டு கோழி, பக்கத்து வீட்டில் முட்டையிட எப்படி அனுமதிக்க முடியும்' என, கருணாநிதியே கேட்டிருக்கிறார்.

துரைமுருகன்: இந்த அரசு, மது விலக்கை கொண்டு வராது.விஸ்வநாதன் : மத்திய அரசு அமல்படுத்தினால், மாநில அரசும் அமல்படுத்தும்.தி.மு.க., - ஸ்டாலின்: உடனடியாக, அனைத்து கடைகளையும் மூட முடியாவிட்டால், படிப்படியாக குறைக்கலாம்; அதை அரசு செய்யுமா?

விஸ்வநாதன்: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில், கடை மூடப்படுகிறது. சவுந்திரராஜன்: சேலம் பகுதியில், கடையை மூடும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படவில்லை.

விஸ்வநாதன்: அரசிடம் சொன்னால், நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில், மார்க்சிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது, மது விலக்கை அமல்படுத்தவில்லை. அங்கு ஒரு கொள்கை, இங்கு ஒருகொள்கையா?

மார்க்சிஸ்ட் கம்யூ., - பாலபாரதி: அங்கு, அரசு மதுபானங்களை விற்கவில்லை.விஸ்வநாதன்:

Advertisement

தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதற்காக, பொதுஉடைமை கொள்கைப்படி, அரசே கடைகளை நடத்துகிறது.

பார்த்தசாரதி: மது விலக்கை அமல்படுத்த முடியுமா, முடியாதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். அதை விடுத்து, விவஸ்தை இல்லை என்று சொல்லாதீர்கள். நீங்கள் எல்லாம்
உத்தமர்களா? இவ்வாறு விவாதம் நடந்தது.

மது குடிப்போர் சங்கம் வரவேற்பு

நத்தம் அறிவிப்புக்கு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இச்சங்க தலைவர் செல்லபாண்டியன் அறிக்கை:தமிழகத்தில், 37 சதவீத ஆண்கள், 8 சதவீத பெண்கள் என, மொத்தம், 45 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர். எங்களால் அரசுக்கு நாள்தோறும், 70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எல்லா கட்சிகளும் மது விலக்கு கேட்கின்றன. முதலில், அவர்கள், தங்கள் கட்சியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மது குடிக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்க வேண்டும்; அதன்பிறகு, மது விலக்கு கேட்க வேண்டும்.
கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில், ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார். இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார். மது குடிப்போருக்கு தனி மருத்துவமனை; தனி வாகன எண் போன்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும், நத்தம் விரைவில் நிறைவேற்றுவார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-201621:41:13 IST Report Abuse

கேசவன் கிடாமங்கலம்..மது குடிப்போர் கட்சியில் இருக்ககூடாது என மதுவிலக்கு கோரும் கட்சி தலைமை அறிவிக்க முடியுமா? . .தில் இருந்தா அறிவிங்க பார்ப்போம்..... . . எல்லாம் தேர்தல் வேசம்..எல்லா கட்சி தேர்தல் அறிக்கைலயும் இது இருக்கும் (மதுவிலக்கு)

Rate this:
prabhaharan.v - kovilpatti,இந்தியா
22-ஜன-201619:15:10 IST Report Abuse

prabhaharan.vஅரசு மருத்துவமனையில் குடிப்பழக்கம் உள்ளவர்க்கு சிகிச்சை தடை செய்யவேண்டும்.

Rate this:
sathi - karur,இந்தியா
22-ஜன-201618:06:34 IST Report Abuse

sathiநேரம் குறைக்கலாமே

Rate this:
ARUN - coimbatore,இந்தியா
22-ஜன-201616:32:54 IST Report Abuse

ARUNலாட்டரி சீட்டு தடை செய்ததால் அதன் வருமானம் அண்டை மாநிலங்களுக்கு செல்லவில்லையா..மது விற்பனையை தடை செய்தால் கள்ள சாராய சாவு அதிகரிக்கும் என்கிறார்கள்.சரி பரவாயில்லை .கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாமே. நீண்ட வரிசையில் நின்று தான் மது வாங்கவேண்டும் எனும் சூழ்நிலை வரும்போது,குடிப்போரின் எண்ணிக்கை குறையுமே.

Rate this:
Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா
22-ஜன-201616:22:48 IST Report Abuse

Kumar Saranathan Parthasarathyஜல்லிகட்டை தடை பண்ண துடிக்கிற உச்சம் மக்களுக்கு ,உடலுக்கு, கெடுதல் என்று மத்ய சர்க்காரை இந்தியா முழுமைக்கும் தடைப் பண்ணச்சொல்லி சட்டம் இயற்றட்டும் அப்ப இங்க நாங்களும் மூடுறோம் .அம்மா எதையும் புதிதா தொடங்கலே . ஏற்கனவே இருந்ததை தொடர்றாங்க .மத்ய சர்கார் அந்த இழப்புகளுக்கு ஈடு கட்டட்டும் ( எல்லா மாநிலங்களுக்கும் ) அப்ப தமிழரசி கையால மூடுறோம் .

Rate this:
Ramesh RK - Theni,இந்தியா
22-ஜன-201614:43:00 IST Report Abuse

Ramesh RKவிஸ்வநாதன்: தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதற்காக, பொதுஉடைமை கொள்கைப்படி, அரசே மது பான கடைகளை நடத்துகிறது. அப்ப தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி, தனியார் மருத்துவமணை அரசே ஏற்று நடத்தலாமே.

Rate this:
zakir hassan - doha,கத்தார்
22-ஜன-201618:34:12 IST Report Abuse

zakir hassanஅவற்றால் மிடாஸ்க்கு ஏதும் வருமானமில்லை, பிறகெப்படி சார்...

Rate this:
kmish - trichy,இந்தியா
22-ஜன-201614:42:16 IST Report Abuse

kmishமுன்னோடி மாநிலம் முன்னோடி மாநிலம் னு சப்ப கட்டு கட்டுறீங்க, இதுலயும் நடவடிக்கை எடுத்து சப்ப கட்டு கட்ட வேண்டியது தானே, ஏன் அடுத்த மாநிலத்தோட ஒப்பீடு பண்றீங்க

Rate this:
zakir hassan - doha,கத்தார்
22-ஜன-201618:36:31 IST Report Abuse

zakir hassanமது விற்பனையில் மட்டும் தான் முதன்மை மாநிலம்...

Rate this:
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
22-ஜன-201614:35:12 IST Report Abuse

PRAKASHகள்ளசாராயம் வந்தால் உயிரிழப்பு பெருகுமாம் .. டாஸ்மாக் சாராயம் மட்டும் என்ன அமுதமா >??

Rate this:
Christopher Raj - Kanyakumari,இந்தியா
22-ஜன-201614:31:50 IST Report Abuse

Christopher Rajஆண்களில் மது குடிப்போர் பல கோடிபேர் இருக்கும்போது, கட்சிக்காரர்களே வண்டிவண்டியாக மது குடிக்கும்போது மதுவிலக்கு என்று இவர்கள் போடும் கூப்பாடு, பெண்களை ஏமாற்றும் செயலே அன்றி வேறொன்றும் இல்லை... மதுவிலக்கு சாத்தியமே இல்லை...

Rate this:
Oru Indiyan - Chennai,இந்தியா
22-ஜன-201614:51:49 IST Report Abuse

Oru Indiyanஇது சரி என்றால், கஞ்சா, தாசி, ஊசி போன்ற பலவற்றையும் அரசே நடத்தலாமே...சிங்கப்பூர் சேகரன் சொன்ன மாதிரி.."துத்தேறி"...

Rate this:
Raj - Chennai,இந்தியா
22-ஜன-201614:20:44 IST Report Abuse

Rajமனிதன் தொன்றுதொட்டு பழக்கம், தனிமனித உரிமை, கள்ள சாராயத்தை ஒழிக்க முடியாது, அண்டை மாநிலங்களில் உள்ளது, இதனால் வரும்வருமான வரவு நின்று நஷ்டம் ஏற்படும் இது போல பல காரணங்களை கூறி சமுதாயத்திற்கு கேட்டது என தெரிந்தும் அதை நியாயபடுத்தி மது விளக்கு கிடையாது என வாதிடும் அரசின் செயல் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசு செய்ய கூடியதா? இங்கு கூறியுள்ள அதனை காரணங்களும் பொருந்தகூடிய இதேபோன்று மோசமான பல கொடிய செயல்களும் சமுதாயத்தில் உள்ளனவே விபசாரம், கொள்ளை, திருட்டு போல பல இதற்க்கு நிகரான கொடும் விசயங்களையும் இதேபோல நியாயபடுத்தி தமிழக அரசு நடத்தலாமே

Rate this:
APS Raja - Chennai,இந்தியா
22-ஜன-201616:46:30 IST Report Abuse

APS Rajaமணல் கொள்ளை போன்றவற்றை அரசு தானே நடத்துகிறது...

Rate this:
மேலும் 117 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement