தனியாக நிற்க யாரும் முன்வரவில்லை! சட்டசபையில் சண்டை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தனியாக நிற்க யாரும் முன்வரவில்லை!
சட்டசபையில் சண்டை

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வும், - தி.மு.க.,வும் தனித்து போட்டியிட தயங்குவது, நேற்று சட்டசபையில், வெட்ட வெளிச்சமானது.

 தனியாக நிற்க யாரும் முன்வரவில்லை! சட்டசபையில் சண்டை

'தனித்து போட்டியிட தயாரா' என, இரண்டு கட்சியினரும் சவால் விட்டும், தயார் என்று சொல்ல, அவர்களில் யாரும் முன்வரவில்லை.சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:

தி.மு.க., - துரைமுருகன்: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக, நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும், மக்களிடம் எடுபடாது.

சென்னையில், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை என, மழை நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நீங்கள் நுழைய முடியாது. அப்பகுதிகளில், தனியாக சென்று நீங்கள் ஓட்டு கேட்கமுடியுமா; நான் சவால் விடுகிறேன்.

அமைச்சர் பன்னீர்செல்வம்: இது, சவால் அல்ல; சவடால். டிச., 1ம் தேதி பெருமழையினால் வெள்ளம் ஏற்பட்டது என்பது, மக்களுக்கு தெரியும். நீங்கள், அதை அரசியலாக்க பார்ப்பதும் தெரியும்.

அமைச்சர் வைத்திலிங்கம்: வெள்ளத்தை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கு, மக்கள் சரியான பாடம்புகட்டுவர்.

தி.மு.க., - அன்பழகன்: யாருக்கு பாடம் புகட்ட உள்ளனர் என்பது தேர்தலில் தெரியும்; 1996 தேர்தலில், பர்கூரில் தோற்றுள்ளீர்கள்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தி.மு.க.,வை இனி எந்த நேரத்திலும், மக்கள் ஏற்க மாட்டார்கள்.

Advertisement

இதை லோக்சபா தேர்தலிலேயே, மக்கள் உணர்த்தி விட்டனர். அதே நிலை, சட்டசபை தேர்தலிலும் ஏற்படும்.

அமைச்சர் வைத்திலிங்கம்: கூட்டணிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; தைரியமிருந்தால், தனித்து நிற்க தயாரா?

துரைமுருகன்: நீங்கள் எல்லாரையும் கழற்றி விட்டு, தனித்து நிற்க தயாரா?இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
t.v.nathan - nagapattinam,இந்தியா
22-ஜன-201623:01:21 IST Report Abuse

t.v.nathanஅதிமுக மற்றும் திமுக இருவரும் தனித்து போட்டியிட்டால் மூன்றாவது அணியான மக்கள்நல கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். திரவிடகட்சிகள் காணமல் போய்விடும். இரண்டு கட்சிகளும் மக்களை தனியாக சந்திக்க துணிவு கிடையாது .காரணம் இரண்டுகட்சிகளும் ஊழல் கட்ச்சிகள் மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என்பது நிதர்சன உண்மையாகும் .

Rate this:
vinoth - vedaranyam,இந்தியா
22-ஜன-201622:00:33 IST Report Abuse

vinothஇப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்புடி.............யாரு பெரியாளுன்னு மோதி பர்த்திடவேண்டியதுதானே. ம்ம் ஆரம்பமாகட்டும்

Rate this:
Cheenu Meenu - cheenai,இந்தியா
23-ஜன-201600:04:01 IST Report Abuse

Cheenu Meenuஎப்படி தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து கருணாநிதியா ???...

Rate this:
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
22-ஜன-201620:06:00 IST Report Abuse

Vinod Kஉண்மையில் சொன்னவேண்டுமேன்றல், அணைத்து கட்சிகளும் சுயேச்சை உட்பட தனித்து தான் நிற்க வேண்டும் எந்த தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் சட்ட சபைக்கு வரலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அந்தந்த மாவட்டத்தை ஆட்சிபுரியட்டும். அணைத்து ஆட்சியரோ அல்லது பெருவாரியான ஆட்சியரோ தேர்வு செய்யும் சட்டசபை உறுப்பினர் அவரது நன்னடத்தை மக்களை அணுகும் முறை, தங்கள் தொகுதியில் அவர்கள் செய்த பணிகள், நேர்மை இவற்றை வைத்து தேர்வு செய்து அவரை முதல்வர் ஆக்கலாம். அவர் சரியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை எணில் அவரை மாற்றி வேறு தகுதியானவரை பரிந்துரை செய்யலாம். அவ்வாறு செய்யும்போதோ அல்லது பதவியில் இருந்து எடுக்கும் போதோ உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்களுக்க எடுக்கபட்டால் என்று மக்கள் கருதினால் ஆட்சேபம் தெரிவித்து கவர்னரிடம் ஒரு பொதுவான மனுவாக அனுபிவைகலாம் அல்லது சமர்பிக்கலாம். இதனால் மக்கள் விரும்பும் உண்மையான மனிதர் ஆட்சி அதிகாரத்தில் அமருவார். இதை செய்ய உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையாம் மற்றும் குடியரசு தலைவர் இவர்கள் இதை செயலாக வேண்டும்.

Rate this:
crimson - Tharhuna,லிபியா
23-ஜன-201602:12:20 IST Report Abuse

crimson அருமையான கருத்து. ஆனால், முக்கால் வசி குற்ற வாளிகளே பாராளுமன்றத்தில் இருக்கும் போது இது போன்ற சட்ட திருத்தத்திற்கு அனுமதி கிடைக்குமா? 1988 ஆம் முழுவதும் கவர்னர் PC அலெக்சாண்டர் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடை பெற்றது. எங்கும் ஊழல் இல்லை. எந்த கட்சி காரனும் வாய் திறக்க முடியாது. போலீஸ் கைகள் கட்டப்படவில்லை. எந்த விலை ஏற்றமும் ஏற்பட வில்லை. இவருக்கு ஆலோசகராக 4 IAS காரர்கள் மாத்திரமே இருந்தனர். தேவை இல்லாத செலவும் மிச்சம். ஆனால், நமது குடி உரிமை சட்டம் இதற்கு தொடர்ந்து அனுமதிப்பதில்லை. இதனால். தான், சட்ட விரோதிகள், சட்ட சபையில் கோலோச்சும் நிலை ஏற்படுகிறது. எனவே அடிப்படை மாற்றம் தேவை....

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
22-ஜன-201618:10:32 IST Report Abuse

Barathanஇந்த திராவிட கட்சிகள் கூட்டணிக்கு காத்திருப்பதை பார்த்தால், PMK 50 to 60 வெற்றி பெற்று விடுவார்களானால், இந்த MLA களின் அதாவது PMK தயவில் DMK வோ ADMK வோ ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வரும் போல தோன்றுகிறது. எப்படியோ தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழன் CM ஆக வரவேண்டும்.

Rate this:
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
22-ஜன-201620:30:06 IST Report Abuse

பெரிய ராசு நீங்க மரம்வேட்டினு தெளிவா தெரியுது...

Rate this:
Cheenu Meenu - cheenai,இந்தியா
23-ஜன-201600:07:53 IST Report Abuse

Cheenu Meenuபா ம க கதை,...காத்த கிளி கதை போல் ஆகும்....

Rate this:
Sivasankar M - Puducherry,இந்தியா
22-ஜன-201617:41:03 IST Report Abuse

Sivasankar Mமுதலில் இந்த அ தி மு க காரனுங்க நிமிர்ந்து நிற்கட்டும் அப்புறம் தி மு க வ தனியா நிக்குறத பற்றி பேசட்டும், நேரா நிக்க முடியாதவன் தனியா நிக்குறத பற்றி பேசறாங்க

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஜன-201617:28:04 IST Report Abuse

இந்தியன் kumarலோக்சபா election என்றால் திமுக ஆதிமுக தனித்து நிற்கும் சட்டமன்ற தேர்தல் என்றால் மட்டும் கூட்டணி தேவை படும், அப்போது தானே முதல்வர் ஆக முடியும் சுய நலம் . இரண்டு சுய நல கட்சிகளை புறக்கணித்து ம ந கூ அல்லது பாமக-பாஜக கூட்டணிக்கு வாக்கிடுங்கள் , மாற்றி யோசியுங்கள் . இந்தியன் குமார்

Rate this:
B.J.P. MADHAVAN - Chennai,இந்தியா
22-ஜன-201616:31:45 IST Report Abuse

B.J.P. MADHAVANநமது பாரத பிரதமர் மோடிஜியின் சாதனைகள் தான் இதற்கு முக்கிய காரணம் என்பது எனது கருத்து. இந்த இரண்டு ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பா.ஜ.க. தொண்டர்களின் கருத்து.

Rate this:
911Tamil - Somerset,சிங்கப்பூர்
22-ஜன-201615:35:32 IST Report Abuse

911Tamilஎல்லா வார்த்தையையும் செதுக்கியவருக்கு நமக்கு நாமே என்பது மக்களால் எப்படி மாற்றப்படலாம் என்று நினைக்கும் பக்குவம் இல்லை - அப்படி இருந்தும் பகுத்தறிவாளர் உலகத்திலேயே அறிவாளி என்று சொல்லிக்கொள்வதில் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை - என்ன செய்வது - காலத்தின் கட்டாயம் - 28 சீட்டுக்கு மேல் திமுகவால் எடுக்க முடியாது - அதற்கே அவர்கள் தலைகீழ் நின்று மக்களிடம் மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டும் - ஜெய் ஹிந்த்

Rate this:
Cheenu Meenu - cheenai,இந்தியா
23-ஜன-201600:09:50 IST Report Abuse

Cheenu Meenuதவறான மதிப்பீடு...

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-ஜன-201615:00:20 IST Report Abuse

Pasupathi Subbianஅப்போ நீயும் சரியில்லை நானும் சரியில்லை. என்று ஒத்துகொள்கிறார்களா ? எங்கள பிடிச்ச கெரகம் இந்த இரண்டு கட்சிகளையும் மாறி மாறி ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வந்து நாங்க சீப்பட்டு சின்னபின்னமானது தான் மிச்சம்..

Rate this:
Kumar Saranathan Parthasarathy - Chennai,இந்தியா
22-ஜன-201614:43:33 IST Report Abuse

Kumar Saranathan Parthasarathyதுரை முருகனே சென்னையில் ஒரு சில இடங்களில் தான் பாதிப்பு என்பதை அவரை மறந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்ப மற்ற தொகுதிகளில் அம்மாவுக்கு பிரச்சனை இல்லை. நீங்க கடைவிரித்தும் 25,000 ரூபாய்க்கு வேட்பு விருப்ப மனு பெற்று கல்லா வேண்டுமானாலும் ரொபபிக்கலாம் .

Rate this:
Cheenu Meenu - cheenai,இந்தியா
23-ஜன-201600:12:46 IST Report Abuse

Cheenu Meenuஒரு சில இடங்களில் வெள்ள பாதிப்பு. லஞ்சம், ஊழல் தமிழ்நாடு முழுக்க பாதிப்பு....

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement