ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுக்கும் மணல் மேடுகள்| Dinamalar

ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுக்கும் மணல் மேடுகள்

Added : ஜன 22, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு வடிந்த நிலையில், அடையாற்றில், சைதாப்பேட்டை முதல் கோட்டூர்புரம் வரை உருவாகி உள்ள மணல் மேடுகளால், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில், 2015 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்தது. இந்த சமயத்தில் முறையாக திட்டமிடாமல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது.


இதனால், அடையாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, டிச., 2, 3 தேதிகளில், சென்னையின் மையப்பகுதிகள், பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலுமாக முடங்கியது.


மணல் மேடுகள்:



இதனால், சென்னையை பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெள்ளம் வடிந்த நிலையில், அடையாற்றின் மையப்பகுதி வரை மணல் மேடுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் முதல், முகத்துவாரம் வரை, பல இடங்களில், புதிதாக மணல் மேடுகள் ஏற்பட்டு உள்ளன.


பொதுவாக, பருவ மழை முடிந்த பின், அடையாற்றில் திரு.வி.க., பாலம் முதல் முகத்துவாரம் வரையிலான பகுதியில் மட்டுமே மணல் மேடுகள் ஏற்படும். இந்த மணல் மேடுகளை அகற்றுவதில் மட்டுமே பொதுப்பணித்துறை கவனம் செலுத்தும்.

தற்போது, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக, சைதாப்பேட்டை முதல் கோட்டூர்புரம் வரையிலான பகுதியில் மிக அதிகமாக மணல் மேடுகள் ஏற்பட்டு உள்ளன.


ஆக்கிரமிப்புக்கு அழைப்பு விடுக்கும் :

இந்த பகுதியில், ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டு உள்ள மணல் மேடுகள் புதிய ஆக்கிரமிப்புகள் வர வழிவகுப்பதாக அமைந்து உள்ளது.

அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான, 'டெண்டர்'களை முடிவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், இப்பிரச்னையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.


உடனடியாக அகற்ற வேண்டும்



இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

சைதாப்பேட்டையில், 83 மீட்டர் அகலமாக, இருக்க வேண்டிய அடையாற்றில் ஏற்கனவே, 15 மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. தற்போது, மேலும், 20 மீட்டர் வரையிலான பகுதிகள் மணல் மேடாக மாறி உள்ளன.


இதே போன்று, கோட்டூர்புரத்தில், 125 மீட்டர் அகலம் இருக்க வேண்டிய அடையாற்றில், ஏற்கனவே, சில மீட்டர் வரை ஆக்கிரமிப்புகளால் அடையாறு சுருங்கி உள்ள நிலையில், தற்போது, 10 மீட்டர் அகலத்துக்கு ஏற்பட்டு உள்ள மணல் மேடுகளால், ஆறு மேலும் சுருங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த மணல் மேடுகள் உடனடியாக அகற்றப்படாவிட்டால், அடுத்த சில மாதங்களில், ஆக்கிரமிப்பாளர்கள் இதன் மேல் கட்டட கழிவுகளை கொட்டி இப்பகுதியையும் ஆக்கிரமித்துவிடும் அபாயம் உள்ளது.


எனவே, இந்த மணல் மேடுகளையும், இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X