மண்ணோடு மண்ணான மழைநீர் வடிகால்கள்; ரூ.20 லட்சம் எங்கே| Dinamalar

மண்ணோடு மண்ணான மழைநீர் வடிகால்கள்; ரூ.20 லட்சம் எங்கே

Added : ஜன 22, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மண்ணோடு மண்ணான மழைநீர் வடிகால்கள்; ரூ.20 லட்சம் எங்கே

அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கம், சிட்கோ நகர், ஜெகந்நாத நகர், பாபா நகர், தெற்கு ஐகோர்ட் காலனி, திருமங்கலம் சாலை ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிகால் இருந்தும், வெள்ளம் வடியாததன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.அண்ணாநகர் மண்டலத்தில், வெள்ளத்தால், 94வது வார்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் தொடர்பான பல்வேறு பிரச்னைகளே, வெள்ளம் வடிவதில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தின என்பது, தெரிய வந்துள்ளது.

தூர்வாரவே இல்லை!


ஜெகந்நாத நகர், சிட்கோ நகர், பாரதிபுரம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால், எம்.டி.எச்., சாலையைக் கடந்து, திருமங்கலம் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலோடு இணைகின்றன.

ஜெகந்நாத நகர் உள்ளிட்டவற்றில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. அதனால், அவற்றின் ஆள்நுழைவு குழிகள் கூட தெரியாத அளவிற்கு மண்ணோடு மண்ணாகி விட்டன. மேலும், சாலை மட்டம் கன்னாபின்னா என உயர்ந்து விட்டதால், பல இடங்களில், மழைநீர் வடிகால் இருப்பதே தெரியவில்லை.


இந்த இடங்களில், 250 டன் அளவிற்கு மழைநீர் வடிகால் வார, ஒப்பந்தம் விடப்பட்டதாகவும், அந்த 250 டன்னும் ஒரே சாலையில், ஒரே ஒரு மழைநீர் வடிகாலில் எடுக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டதாகவும், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் இரு சம்பவங்களை உதாரணம் காட்டுகின்றனர். ஒன்று, வெள்ளத்திற்கு பின்பு அந்த பகுதியில், நூற்றுக்கணக்கான டன் மண், மழைநீர் வடிகாலில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது.

இரண்டாவது, நலச்சங்கத்தினரே சில இடங்களில், மழைநீர் வடிகாலை தூர்வாரி, பல டன் மண்ணை அகற்றி உள்ளனர். இப்போதும் மழைநீர் வடிகாலில், தண்ணீர் தேங்கியிருப்பதை பார்க்க முடியும் என அவர்கள், உறுதியாக சொல்கின்றனர்.

சிட்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் உடைத்து போடப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தாலே, மழைநீர் வடிகாலின் தரம் தெரிந்து விடும்.


கழிவுநீர் கலந்த வெள்ளம்



சிட்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளின் நிலைமை இவ்வாறிருக்க, தெற்கு ஐகோர்ட் காலனி உள்ளிட்ட பகுதிகளின் நிலைமை நேர் எதிராக இருக்கிறது.


எம்.டி.எச்., சாலையில் இருந்து, தெற்கு ஐகோர்ட் காலனி பல அடி ஆழத்தில் தற்போது உள்ளது. அதாவது, எம்.டி.எச்., சாலையின் உயரம், தாறுமாறாக உயர்த்தப்பட்டு விட்டது.


ஒருகாலத்தில், காலனியின் ஒவ்வொரு வீடும் தரையில் இருந்து மூன்று முதல், ஆறு படிகள் வரை உயரத்தில் இருந்தன. இன்று, அதே மூன்று முதல் ஆறு படிகள் வரை பள்ளமாகி விட்டன.



அன்று மழைநீர்; இன்று கழிவுநீரும்:



ஆண்டுதோறும், எம்.டி.எச்., சாலையில் இருந்து வெள்ளமாக, மழைநீர் காலனிக்குள் நுழைந்து விடும் என்பதால், காலனியின் நுழைவாயிலில், பெரிய மேடை போல தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த காலனியில், ஒரு சில தெருக்களில் மட்டுமே மழைநீர் வடிகால் உள்ளது. பல தெருக்களில் கிடையாது. ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலை அகற்றிவிட்டு, புதிய மழைநீர் வடிகால் அமைக்க முடிவானது. ஆனால், அதுவும், 2012ல் ரத்தாகி விட்டது. அதனால், சமீபத்திய மழை வெள்ளம், காலனியில் உள்ள, பாதாள சாக்கடை வழியாக திருப்பிவிடப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், காலனியில், பாதாள சாக்கடை அமைப்பு, நீர் செல்லும் வாட்டத்தில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மழைநீர் வடிகால், வாட்டத்திற்கு நேர் எதிராக, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய மழையின் போது, வெள்ளம் மட்டுமின்றி, சாலை மட்டம் உயர்வால், அனைத்து பகுதி கழிவுநீரும் இந்த காலனிக்குள் புகுந்து விட்டது.



வெள்ளம் வடிய ஏன் தாமதம்:



மேலும், திருமங்கலம் சாலையை ஊடறுத்து ஓடும், ஓட்டேரி நல்லாவிலிருந்து வெளியேறிய வெள்ளம், திருமங்கலம் சாலை, மற்றும் அதனை ஒட்டிய மேற்கு பக்கம் அகத்தியர் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, லட்சுமி தெரு விரிவாக்கம், கிழக்கு பக்கம் உள்ள தெற்கு ஐகோர்ட் காலனி, திருநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் புகுந்தது.


விளைவாக, திருமங்கலம் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கிய மழைநீர், ஓட்டேரி நல்லாவிற்கு செல்லவே முடியவில்லை. அதனால் தான் சுற்றுவட்டாரங்களில், ஒரு வாரத்திற்கும் மேல் வெள்ளம் வடியவில்லை.

இந்த நிலையில், 94வது வார்டில் மட்டும், மழைநீர் வடிகால் தூர்வார, மாநகராட்சி, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கிஉள்ளது. ஆனால், அந்த தொகையில், பணிகள் முறையாக நடந்திருந்தால், இந்த பிரச்னையே வந்திருக்காதே என்பது தான், பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினரின் ஒரே கேள்வி.


பதில் கிடைக்குமா?



என்ன செய்ய வேண்டும்?




ஒவ்வொரு மழைக்காலத்திலும் சிட்கோ நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் சிக்குவது நிச்சயம். அதில் இருந்து மீள,


அந்த பகுதி மழைநீர் வடிகால்களை, அருகில் உள்ள வில்லிவாக்கம் ஏரியில் இணைக்க வேண்டும். ஏரியை தூர்வாரி நீராதாரமாக மாற்ற வேண்டும். மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பை, நிரந்தரமாக தடுக்க வேண்டும்.

அல்லது எம்.டி.எச்., சாலை, நியூ ஆவடி சாலையை ஒட்டி கால்வாய் ஒன்று அமைத்து, அதனை கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்துடன் இணைக்க வேண்டும்.


இந்த இரு வழிமுறைகளால், கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சமும் தவிர்க்கப்படுவதோடு, பொருட்சேதமும் தவிர்க்கப்படும்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஜன-201608:45:05 IST Report Abuse
Srinivasan Kannaiya நீர்த்தாரைகளில் தூர் வார, நீர்நிலைகளை பராமரிக்க....இல்லாத ,, இருக்கின்ற சாலைகளை சீர் அமைக்க என்று பெறப்பட்ட காசில்தான் அரசியல்வாதிகள் தங்களது இல்லங்களை கட்டிக்கொண்டு உள்ளார்கள்...மனனவி மக்களின் அங்கங்களில் தங்கமாக இழைத்து இருக்கின்றார்கள்.. இன்னோவா, பார்ச்சூன் , சைலோ கார்களாக வைத்து இருக்கின்றார்கள்
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-ஜன-201609:49:48 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஆரம்ப கட்டம் முதல் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.. தரைக்கு மேலேயே பட்டப்பகலில் கொள்ளை அடிக்கும் இந்த கும்பல் மானங்கெட்ட நாதாரிகள் கூட்டம், தரைக்கு கீழே இருப்பதை கட்டவா செய்வார்கள். உலக வங்கிக்கே லஞ்சம் கொடுத்து கடன் வாங்கி கொள்ளையடிக்கும் கொலைகார கும்பல் இது..அடிப்படை திட்டங்களில் 100% கொள்ளையடிக்கும் இந்தம்மாவின் அநியாயம்.. முட்டாள் சொம்புகளும் அல்லக்கைகளும் இன்னும் ங்கொம்மா ங்கொம்மா என்பதைக் கேட்டால் கொதிக்கிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X