தென் ஆப்ரிக்காவில் பிப்., 28ல் மகா சிவராத்திரி யாத்திரை| Dinamalar

தென் ஆப்ரிக்காவில் பிப்., 28ல் மகா சிவராத்திரி யாத்திரை

Added : ஜன 23, 2016 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தென் ஆப்ரிக்காவில் பிப்., 28ல் மகா சிவராத்திரி யாத்திரை

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் பிப்ரவரி 28ம் தேதியன்று மகா சிவராத்திரி யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை தென் ஆப்ரிக்க தலைநகரான ஜோகன்னஸ்பர்க் நகரின் லெனாசியா தெற்கு பகுதியில் உள்ள சுமார் 8 கி.மீ., செல்லும்.


24வது ஆண்டாக இந்து ஒருங்கிணைப்பு கவுன்சிலால் நடத்தப்படும் இந்தவருடாந்திர மகா சிவராத்திரி யாத்திரையில் பல அலங்கார வண்டிகள் இடம் பெறும். காலை 6 மணிக்கு டிரான்ஸ்வால் ஆந்திர சபாவில் ஹோமத்துடன் துவங்கும் இந்த யாத்திரை, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஈஸ்வரர் கோயிலில் முடிவடையும். அங்கு அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும். ஹோமத்தின்போது, "மத, நிற, இன வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும் அமைதி" ஏற்பட பிரார்த்தனை நடைபெறும். இந்த யாத்திரையில் பங்கேற்பவர்கள் வெள்ளை உடையில் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



மார்ச் 7ம் தேதி நடைபெற இருக்கும் மகா சிவராத்திரிக்கு முன்னோடியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜன-201618:00:29 IST Report Abuse
Lion Drsekar நம் நாட்டைப் பற்றிய வரையில் வழிபட வேண்டிய ஒரே கடவுள் ஆளும் கட்சியின் தலைவர்களை மட்டுமே, அப்போது தான் அனைத்து செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழ முடியும், இல்லையென்றால் சீக்கிரமே இறைவனடி சேரவேண்டிய ஒரு நிலை, கடவுளே இவர்களது கட்டுப்பாட்டில் ( சிறைச்சாலைகளில்) இருக்கிறார், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Subbu - chennai,இந்தியா
23-ஜன-201617:34:19 IST Report Abuse
Subbu போன இடத்தில பிழைப்பதை விட்டுவிட்டு இப்படி மத விழாக்கள் நடத்தினால், இருக்கும் பிழைப்புக்கும் கேடு வந்து விடும்.
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-201615:54:29 IST Report Abuse
Swaminathan Nathஅங்குள்ளவர்கள் அந்த நாட்டு மக்கள், தெரிந்து கருத்து எழுதவும்,...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஜன-201615:43:58 IST Report Abuse
இந்தியன் kumar தென் நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கு இறைவா போற்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X