திமுக கூட்டணிக்கு ஆதரவு ; மக்கள் ஆய்வகம் கருத்துக் கணிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக கூட்டணிக்கு ஆதரவு ; மக்கள் ஆய்வகம் கருத்துக் கணிப்பு

Added : ஜன 23, 2016 | கருத்துகள் (189)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திமுக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு ; மக்கள் ஆய்வகம் கருத்துக்கணிப்பு

சென்னை: வருகிற தமிழக சட்டசபை தேர்தல் குறித்து, சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

இந்த அமைப்பினர் சில மாதங்களாக 120 தொகுதிகளில் பல்வேறு மக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தினர். இது குறித்து அமைப்பின் தலைவர் ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:


வருகிற சட்டசபை தேர்தலில், கூட்டணி குறித்து இன்னமும் முடிவாகாத நிலையில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டோம். அதிமுகவுக்கு ஆதரவாக 33 .3 சதவீதத்தினரும் , திமுக வினருக்கு 33.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் .

அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு 37.7 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 35. 7 சதவீதத்தினரும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர் .


தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. திமுகவின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. மேலும் மது விலக்கு முக்கிய பிரசாரமாக எடுத்து வைக்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.


* முக்கிய அம்சங்கள்: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க தலைமையில் ஆட்சி அமையும் என கூறப்ப்பட்டு உள்ளது.


* சட்டசபை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க 37.7 சதவீதம் பேர் ஆதரவு


* அதிமுக ஆட்சி அமைக்க 35.7 சதவீதம் பேர் ஆதரவு-


* தமிழக பிரச்சினைகளை எந்த கட்சியும் தீர்க்காது என 56.4 சதவீதம் மக்கள் கருத்து:


* தேமுதிக வுக்கு 6 சதவீதத்தனர் ஆதரவு


* மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி- அமைய 5.4 சதவீதம் ஆதரவு


* பாமக தலைமையில் ஆட்சி- அமைய 2.2 சதவீதம் பேர் ஆதரவு


தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது மக்கள் கூறியுள்ளனர்.





Advertisement




வாசகர் கருத்து (189)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
28-ஜன-201601:07:53 IST Report Abuse
Cheenu Meenu தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்தக் கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. அப்படி இருக்கையில் வெறும் 2.2 சதவீதம் பேர் ஆதரவு கொண்ட பா ம க ஆட்சி அமைத்து எப்படி மாற்றம் முன்னேற்றம் காணும்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
27-ஜன-201601:11:34 IST Report Abuse
Sundeli Siththar லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு என்றென்றும் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்... 2014 பாராளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று கூறினார்கள்... திமுக அமோகத் தோல்வியடைந்தது என்பதே வரலாற்று உண்மை...
Rate this:
Share this comment
Cancel
sureshbabu - ahmadi,குவைத்
25-ஜன-201611:25:13 IST Report Abuse
sureshbabu வேண்டும் ஒரு புதிய புரட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X