அ.தி.மு.க.,விலிருந்து பழ. கருப்பையா நீக்கம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,விலிருந்து பழ. கருப்பையா நீக்கம்

Updated : ஜன 27, 2016 | Added : ஜன 27, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழ. கருப்பையா நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும், பழ. கருப்பையா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
28-ஜன-201606:55:14 IST Report Abuse
raja ஊழல் கமிஷன் என்பது கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடு ஆக இருக்கும் போது எப்படி அதை விமரிசிக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
28-ஜன-201606:28:48 IST Report Abuse
krishnan துக்ளக் வெட்கப்பட வேண்டும். திமுக எதிர்ப்பு கொள்கை மட்டுமே பத்திரிகை தர்மம் என்று எண்ணி நடு நிலைமையை காற்றில் கலந்தார் சோ அவர்கள். கருப்பையா சொன்ன அனைத்தும் சோ விற்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Mariyappan Kalidoss - Kuala Lumpur,மலேஷியா
28-ஜன-201605:09:57 IST Report Abuse
Mariyappan Kalidoss திரு பழ கருப்பையா அவர்கள் இலக்கியவாதி.. சிந்தனாவதி.. நேர்மையானவர்.. அவர் இவ்வளவு காலம் அதிமுகவில் சர்ச்சை இல்லாமல் நீடித்ததே பெரிய விஷயம்.. கடந்த திமுக ஆட்சியில் இவர் திரு.கருணாநிதிக்கு எதிராக தினமணியில் எழுதிய சில கட்டுரைகள் அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கோபப்படுத்தியது. சாட்டையடி கட்டுரைகள் என்றால் அவைகள் தான்.. திமுக ஆட்சியை அசைத்து பார்த்ததில் கருப்பையா அவர்களுக்கு மித பெரிய பங்கு உண்டு.. அதனால் தான் ஜெயலலிதா அவர்கள் கருப்பையாவுக்கு அழைத்து சீட் கொடுத்தார். இவர் போய் சீட்டுக்கு தலையை சொரிந்து கொண்டு நிற்கவில்லை. அமைச்சராகவோ சபாநாயகரகவோ ஆக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அதிமுகவில் என்று நேர்மையாளர்கள் கவுரவிக்க பட்டனர்? இவருக்கு கொள்ளை அடிக்கவும் தெரியாது.. கமிஷன் கொடுக்கவும் தெரியாது.. இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை பார்த்து நொந்து போய் துக்ளக் ஆண்டுவிழாவில் விமர்சித்து பேசினார்.. துக்ளக் ஆண்டுவிழாவின் ஹீரோ திரு.கருப்பையா அவர்கள் தான். அப்படி ஒரு அப்ளாஸ் அவருக்கு.. standing ovation .. இந்த நடவடிக்கை எதிர்பார்க்க பட்டது தான்.. இவர் ஒரு rebel .. இவருக்கு அதிமுக திமுக வெல்லாம் சரிபட்டு வராது.. இனி இவர் சுதந்திர பறவை.. அதிமுகவின் மனசாட்சியை உலுக்கும் சில கட்டுரைகளை இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
J Gurumurthi - Chennai,இந்தியா
28-ஜன-201602:41:39 IST Report Abuse
J Gurumurthi He has spoken in the Meeting of Cho Thughlak Anniversary. That is the reason.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
28-ஜன-201601:01:36 IST Report Abuse
தாமரை வாய் ஜாஸ்த்தி ...
Rate this:
Share this comment
Cancel
singaravelu - thiruvarur ,இந்தியா
27-ஜன-201622:11:09 IST Report Abuse
singaravelu காமராஜரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் தனி முத்திரைப் பதிக்கும் பழ. கருப்பையா எப்படி அ. தி. மு. க. வில் நீடிக்க முடியும் ?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
28-ஜன-201607:15:39 IST Report Abuse
K.Sugavanamஅப்புறம் எதற்கு அதிமுகவில் ஐக்கியம் ஆனார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை