மகாமகம் 'லோகோ' வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகாமகம் 'லோகோ' வெளியீடு

Added : ஜன 27, 2016
Advertisement
 மகாமகம் 'லோகோ' வெளியீடு

தஞ்சாவூர்: மகாமக விழாவை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டு உள்ளது.கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா, பிப்., 13ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்., 22ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள் நடக்க உள்ளது.இந்நிலையில், மகாமக பெருவிழா, 2016ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டு உள்ளது.இதில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் கோபுரம், மகாமக குளம், அதில் சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அடையாள சின்னம், அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்படும் தகவல்களில் இடம்பெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அறநிலையத் துறை சார்பில் தபால் அட்டை, சிறப்பு தபால் கவர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 'மொபைல் ஆப்ஸ்' வெளியிடப்பட்டு உள்ளது.
பிப்., 25 வரை மேட்டூர் அணை திறப்புகாவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆண்டு, ஆக., 9ம் தேதி முதல், தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், காவிரி டெல்டாவில், முழு வீச்சில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. எனினும், சில பகுதிகளில் காலதாமதமாக பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணை வழக்கமாக மூடப்படும், ஜன., 28ம் தேதிக்கு பின்னும், தொடர்ந்து தண்ணீர் திறந்து விடும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழா, அடுத்த மாதம், 22ம் தேதி நடக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை மற்றும் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல், பிப்., 25ம் தேதி வரை, 6,000 கனஅடி தண்ணீரை, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement